கேரளாவில் நிதி ஆணையம் மற்றும் பொது நிதி - லேகா சக்ரவர்த்தி, பாலமுரளி பி

 சமச்சீரற்ற நிதி விதிகளுக்கு கேரளாவில் காட்டப்பட்டுள்ளபடி கூடுதல் விவாதமும், கலந்துரையாடலும் தேவை.    


சமீபத்தில் அமைக்கப்பட்ட 16-வது ஒன்றிய நிதி ஆணையத்தின் (16th Union Finance Commission) பின்னணியில், மத்திய - மாநில நிதி உறவுகளில் பொதுக் கடன் மேலாண்மை பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு (net borrowing ceiling) தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்த்து இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் சமீபத்திய நிகழ்வுகள், பற்றாக்குறைகள் மற்றும் கடன்கள் தொடர்பான "சமச்சீரற்ற நிதி விதிகளுக்கு" (asymmetric fiscal rules) அழைப்பு விடுத்துள்ளன.


மத்திய-மாநில நிதி உறவுகளில் இப்போது கடன் பற்றாக்குறை இடையிலான உறவுகள் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பதால், விரிவான பேச்சு மற்றும் விவாதம் தேவைப்படுகிறது.  


கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய நிதி தொடர்பான உத்திகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு 3.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 0.5% மின் துறை சீர்திருத்தங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது அரசாங்க பொதுக் கடன் (general government public debt) 60% ஆகவும், மத்திய அரசின் கடன் 40% ஆகவும் இருக்கும். 2024-25 வரவு செலவு திட்டத்தின் படி, கேரளாவின் நிலுவைக் கடன்கள் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 36.9 சதவீதமாகும். இருப்பினும், 2025 ஆம் ஆண்டிற்குள் அதன் கடனில் 16% மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதால், கேரளாவிற்கு மறுநிதியளிப்பு தொடர்பான ஆபத்து குறைவாக உள்ளது. தற்போது, தெலுங்கானாவின் கடனில் 14.7% மட்டுமே மறுநிதியளிப்பு (refinancing of debt) செய்ய வேண்டியிருப்பதால், இதை சமாளிக்க வேண்டிய உடனடி கடன் குறைவாக உள்ளது. அதன், கடனுக்கு 2063 வரை மறுநிதியளிப்பு தேவையில்லை. 


வருவாய் நிலைத்தன்மை (Revenue stability) என்பது, உண்மையில் பொது செலவின வடிவமைப்பின் அடிப்படையாகும். கேரளாவில், மொத்த வருவாயில் சொந்த வரி வருவாய் 48% மற்றும் சொந்த வரி அல்லாத வருவாய் (லாட்டரிகள் உட்பட) சுமார் 12% ஆகும். இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) சமீபத்தில் நிதி கணிப்புகள் மற்றும் நவம்பர் 2023 புள்ளிவிவரங்களின்படி உணரப்பட்ட உண்மைகள் குறித்த தரவுகளை வெளியிட்டார். நவம்பர் 2023 நிலவரப்படி, கேரளாவில் வரி வருவாயில் நிதி குறியீடு (பட்ஜெட் மதிப்பீடுகளின் உண்மையான சதவீதம்) விகிதம் 57.23% மட்டுமே. இருப்பினும், இந்த நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax (GST)) நிதி குறியீடு (56.30%) முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தை விட 54.21% அதிகமாகும்.

 

கவலைக்குரிய விஷயமாக ஏற்ற இறக்கம் 


அரசுகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்களில் உள்ள நிலையற்ற தன்மையை கேரள அரசு கவலைக்குரிய விஷயமாக மேற்கோள் காட்டியுள்ளது. பல ஆண்டுகளாக, மத்திய நிதி ஆணையத்தின் (Union Finance Commission) வரி பரிமாற்றங்களின் பங்கு கேரளா உட்பட ஒரு சில மாநிலங்களுக்கு குறைந்துள்ளது. எண்களைப் பார்த்தால், 13-வது நிதி ஆணையத்தில், கேரளாவின் பங்கானது 2.341% ஆகும். 14-வது நிதி ஆணையத்தில், இது 2.5% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், 15-வது நிதிக் ஆணையத்தில், இது 1.925% ஆகக் குறைந்துள்ளது. 


15-வது நிதி ஆணையம் வரி பங்கீடு பரிமாற்றத்திற்கான ஒரு வழிமுறையை உருவாக்கியது. இது மக்கள்தொகை (15%), பரப்பளவு (15%), வருமான வேறுபாடு (45%), மக்கள்தொகை மாற்றம் (12.5%), காடு மற்றும் சூழலியல் (10%) மற்றும் வரி முயற்சி (2.5%) ஆகியவற்றின் அடிப்படையிலானது. நிதி ஆணையத்தின் வரி பரிமாற்ற வழிமுறையானது தனிநபர் வருமான தூரத்திற்கு (distance of per capita income) கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கேரளா உள்ளிட்ட வளர்ந்து வரும் மாநிலங்களை மோசமாக பாதிக்கிறது. ஒன்றிய நிதி ஆணையங்கள் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதாவது, ஏழை மாநிலங்கள் பணக்கார மாநிலங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கு உதவுகின்றன. மேலும், தொலைதூர அளவுகோலுக்கு (distance criterion) முக்கியத்துவம் கொடுப்பதை மதிப்புமிக்கதாக அவர்கள் பார்க்கிறார்கள்.    

  

இந்த கவலைகளுக்கு எதிராக, பொது நிதியில் மின்னணு உள்கட்டமைப்பை (digital infrastructure in public finance) வலுப்படுத்துவதன் மூலம் வரி தொடர்பான முயற்சியை அதிகரிப்பது மிக முக்கியமானது. நலம்சார் (physical), மின்னணு (digital) மற்றும் சமூக உள்கட்டமைப்பில் (social infrastructure) அதிக மொத்த மூலதன உருவாக்கத்துடன் அதிக பொதுக் கடன் தொடர்ந்து இணைக்கப்பட வேண்டும்.


விநியோகச் சங்கிலி இடையூறுகள் (supply chain disruption) மற்றும் எரிசக்தி விலை ஏற்ற இறக்கங்கள் (energy price volatility) காரணமாக உணவுப் பணவீக்கம் அதிகரித்து வரும் போர் மற்றும் நெருக்கடி காலங்களில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நிதிக் கொள்கை முக்கியமானது. கடந்த பட்ஜெட்டிலும் பணவீக்கத்தை சமாளிக்க கேரள அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.    


முன்னோக்கிப் பார்வை


மாநிலத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு, பசுமை, நெகிழ்திறன் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது இன்றியமையாததாகும். பொருத்தமான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளுடன் "மாநில தழுவல் தகவல்தொடர்பு" (State adaptation communication) மாநிலத்திற்கு தேவைப்படுகிறது. மாநிலத்திற்கான நிதிப் பரிமாற்றங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு, நிதியின் அளவு மற்றும் விதிகள் தொடர்பாக நிதிக்குழுவுடன் விவேகமான பேரம் பேசுவது முக்கியமாகும். மக்கள்தொகை மாற்றம், உள்நோக்கிய மற்றும் வெளிப்புற இடம்பெயர்வு மற்றும் பருவநிலை மாற்ற நெருக்கடி போன்ற மாநிலம் சார்ந்த குறிப்பிட்ட பிரச்சினைகளை சமாளிக்க குறிப்பிட்ட நோக்க பரிமாற்றங்களுக்காக 16-வது நிதி ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம்.


பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கு மாநிலத்தில் பாலின வரவு செலவுத் திட்டத்தின் (gender budgeting) (பராமரிப்பு பொருளாதார உள்கட்டமைப்பு (care economy infrastructure) உட்பட) முன்னேற்றத்தின் அடிப்படையில் நிதி பரிமாற்றம் மிகவும் முக்கியமானது. பெண்களின் தொழிலாளர் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இது குறிப்பிடத்தக்கதாகும். பாலின வரவு செலவுத் திட்டம் (gender budgeting) மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவை எதிர்மாறாக இணைக்கப்பட்டுள்ளன. பாலின விழிப்புணர்வு கொண்ட மனித மூலதன உருவாக்கத்தில் அரசு நேர்மறையான பங்கினை வகிக்கிறது. தேர்தல் சுழற்சிக்கு முன் பட்ஜெட் மீதான நம்பகத்தன்மை முக்கியமானது. வாக்காளர்களின் நம்பிக்கையை தக்க வைக்க நிதி குறியீடுகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம். இவை, சிக்கன நடவடிக்கைகள் மனித மூலதன உருவாக்கம் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி மீட்சியை பாதிக்கும் என்பதால், செலவின சுருக்கத்தின் மூலம் நிதி சிக்கன நடவடிக்கைகள் இப்போது மாநிலத்தின் முன் ஒரு விருப்பத்தேர்வாக இல்லை. 


லேகா சக்ரவர்த்தி தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் (National Institute of Public Finance and Policy (NIPFP)) பேராசிரியராக உள்ளார். அவர் முனிச்சில் உள்ள சர்வதேச பொது நிதி நிறுவனத்தின் (International Institute of Public Finance (IIPF)) மேலாண்மை வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.




Original article:

Share: