கடந்த இரண்டு நிதியாண்டுகளில், இந்தியாவின் 40% திறன் பேசிகள் (smartphones) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டுமே அனுப்பப்பட்டன
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் ஏற்றுமதியாளரான தமிழ்நாடு, 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து செய்யப்பட்டுள்ள அனைத்து மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 30% பங்களிப்பைக் கொண்டுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவை 2022 நிதியாண்டு வரை மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தியதால், தமிழ்நாடு உண்மையில் இந்தத் துறையில் தாமதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஏற்றுமதி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் ஏற்றுமதியாளர்களில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே உள்ளது. இதற்கு நேர்மாறாக, மற்ற மாநிலங்களில் ஏற்றுமதி எண்ணிக்கை குறைந்துள்ளன அல்லது மாறாமல் உள்ளன.
சமீபத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் துறை மிகப் பெரிய பகுதியாக மாறியுள்ளது. முக்கியமாக, தமிழ்நாட்டின் பங்கும் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு திறன்பேசிகள் (smartphone) ஒரு பெரிய காரணம். இந்தியா ஏற்றுமதி செய்யும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் திறன்பேசிகள் (smartphone) கிட்டத்தட்ட 40% ஆகும். கடந்த இரண்டு நிதியாண்டுகளில், இந்தியாவின் திறன்பேசிகள் (smartphone) ஏற்றுமதியில் 40% தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதியானது. பெரும்பாலும் மொபைல் போன்களான இந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அமெரிக்கா தான் முதன்மையான இடமாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) மற்றும் நெதர்லாந்து ஆகியவை இந்தியாவில் இருந்து இந்த தயாரிப்புகளின் முக்கிய இறக்குமதியாளர்களாகும்.
விளக்கப்படம் 1 தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு பொருட்களை $ பில்லியனில் ஆண்டு வாரியாகக் காட்டுகிறது. ஏப்ரல் 2023 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில், தமிழ்நாடு $7.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது 2022 நிதியாண்டில் அதன் அளவை விட நான்கு மடங்கு அதிகம்.
மாநில வாரியான தரவு
விளக்கப்படம் 2 இந்தியாவின் முதல் ஐந்து மாநிலங்களின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியை ஆண்டு வாரியாக $ பில்லியன் டாலரில் காட்டுகிறது. 2024 நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஏற்றுமதி உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த ஏற்றுமதியை 6.7 பில்லியன் டாலரை விட அதிகமாக இருந்தது. இந்த இரண்டு மாநிலங்களும் முறையே மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மாநிலங்களாக இருந்தன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு தனது இடைவெளியை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை வரைபடத்திலிருந்து அறியலாம். முதல் ஐந்து இடங்களில் உள்ள மற்ற மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி சமீபத்திய ஆண்டுகளில் குறைவடைந்துள்ளது.
விளக்கப்படம் 3, 2024 நிதியாண்டில் பிப்ரவரி வரைக்கான இந்தியாவிலிருந்து மொத்த ஏற்றுமதியில் பொருள் வாரியான பங்கை பில்லியன் டாலரில் காட்டுகிறது. இந்த காலகட்டத்தில், இந்தியாவின் ஏற்றுமதியில் பொறியியல் பொருட்கள் (engineering goods) 98 பில்லியன் டாலர், பெட்ரோலிய பொருட்கள் (petroleum products) 78 பில்லியன் டாலர், ரத்தினங்கள் மற்றும் நகைகள் (gems and jewellery) 30 பில்லியன் டாலர் மற்றும் மின்னணு பொருட்கள் (electronics goods) 25 பில்லியன் டாலர் பொருட்கள் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும், 2018 நிதியாண்டில், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி முதல் 10 ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் கூட இல்லை, மேலும் ஏற்றுமதி மதிப்பு வெறும் 0.8 பில்லியன் டாலராக இருந்தது.
மிகப்பெரிய சந்தைகள்
இந்தியாவின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் அமெரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகமும் மிகப்பெரிய சந்தைகளாக உள்ளன. 2024 நிதியாண்டில் பிப்ரவரி வரை, அமெரிக்கா 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 35% ஐ இறக்குமதி செய்தது. அதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் 3 பில்லியன் டாலர் 12%, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் (U.K.) ஒவ்வொன்றும் சுமார் 5% இறக்குமதி செய்துள்ளன. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பில்லியன் டாலர் மதிப்பில் மின்னனு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதல் 10 இடங்களை விளக்கப்படம் 4 விளக்குகிறது.
2021 ஆம் நிதியாண்டு முதல், இந்தியாவின் மின்னணு ஏற்றுமதிக்கான முதன்மை இடமாக அமெரிக்கா உள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் அதன் பங்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. நிதியாண்டு 2018 மற்றும் 2022க்கு இடையில் சுமார் 15-20% அமெரிக்காவின் பங்கு சமீபத்திய இரண்டு நிதியாண்டுகளில் 24-34% ஆக உயர்ந்துள்ளது.
அனைத்து தரவுகளையும் ஒன்றாகப் பார்த்தால், சமீபத்திய இரண்டு நிதியாண்டுகளில் (2023 மற்றும் 2024), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட திறன்பேசிகள் இந்தியாவின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தன என்பதை அறிய முடிகிறது, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்கது.