பெண்கள் நிறுவனங்களுக்குப் ’பொருந்துவதற்காக’ (fit into) ஆண்களைப் போல மாற வேண்டுமே தவிர மாற்றியமைக்க வேண்டியதில்லை என்று நீதி கோருகிறது. ஒற்றைக் கலாச்சார ஆண் ஆதிக்க நிறுவன துணைப் பண்பாடுகள், பாலின சமநிலையற்றதாக இருக்கும்போது அவை எப்போதும் தரமற்றவையாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள பயனுடைய நிறுவனங்கள் பன்முகத்தன்மையால் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த கொள்கையை செயல்படுத்துவதில் பெண்களைச் சேர்ப்பது ஒரு முக்கிய காரணியாகும். நீதியை வழங்குவதற்கு பொறுப்பான நிறுவனங்கள் பாலின வேறுபாடு உட்பட பன்முகத்தன்மைக்கான தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளன. மகளிர் தினத்தன்று, பெண்களைச் சேர்க்கும் எண்ணம் எண்கள் மூலம் வெளிப்படுகிறது. மேலும், தரவுகள் அதன் கதையை நேர்மையாக விவரிக்கிறது, இது மனவருத்தத்தை ஏற்படுத்தலாம்.
மிக சமீபத்திய இந்திய நீதி அறிக்கை (India Justice Report (IJR)) காவல், நீதித்துறை, சிறைகள், சட்ட உதவி மற்றும் மனித உரிமைகள் ஆணையங்கள் உட்பட நீதி வழங்கல் அமைப்பின், அனைத்து துணை அமைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.
ஏறக்குறைய மூன்று இலட்சம் பெண்கள் நீதி வழங்கல் அமைப்பில் இருப்பதாக ஒரு தோராயமான கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. ஒதுக்கீடுகள் அவர்களின் நுழைவை எளிதாக்கும் அதே வேளையில், பெண்களைச் சேர்ப்பது பெரும்பாலும் கீழ்மட்ட பதவிகளில் நிகழ்கிறது. உதாரணமாக, கீழ்நிலை நீதிபதிகளில் 35 சதவீதம் பேர் பெண்களாக இருந்தாலும், உயர் நீதிமன்றங்களில் இந்த எண்ணிக்கை 13 சதவீதமாக குறைகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 2022 ஆம் ஆண்டின் இந்திய நீதி அறிக்கை தரவுகளின்படி, காவல்துறையில், பெண்கள் சுமார் 12 சதவீதத்தில் உள்ளார்கள். ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் 8 சதவீதமாகக் குறைகிறார்கள். சிறை நிர்வாகத்தில், 14 சதவீதம் பேர் பெண்கள் மட்டுமே கீழ் பதவிகளில் உள்ளனர். இந்த பகுதிகளில் பாலின இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும், குறைப்பதற்கும் குறிப்பிடத்தக்க தயக்கம் உள்ளது.
இதுவரை ஒரு பெண் கூட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்ததில்லை. 1989-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி. மேலும், 70 ஆண்டுகளில் 16 பெண்கள் மட்டுமே உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். உதாரணம் மூலம் முன்னுதாரணத்தை அமைப்பது தற்போதைய சூழ்நிலையில் முன்னுரிமையாகத் தெரியவில்லை.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC)) இருந்த காலம் முழுவதும், பாலின நீதி உட்பட நியாயத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு நிறுவனத்தில், ஒரு பெண் ஆணையர் இருந்ததில்லை. அதன் வரலாற்றில் மூன்று பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் இருவர் ஒரே நேரத்தில் பணியாற்றியதில்லை. இந்த பாலின பன்முகத்தன்மை இல்லாதது மாநில ஆணையங்களிலும் காணப்படுகிறது. 2022 நிலவரப்படி, ஆறு ஆணையங்களில் மட்டுமே பெண்கள் உறுப்பினர்கள் அல்லது செயலாளர்களாக இருந்தனர். கேரளா, மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே தலா ஒரு பெண் உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த பொறுப்புணர்வு (more responsive) மற்றும் மனிதாபிமானத்திற்காக (humane) காவல்துறையில் பெண்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருந்தபோதிலும், அவர்களின் சதவீதம் 12 ஆக உள்ளது. 30% அடைய வேண்டிய இலக்குகள் எட்டப்படவில்லை. மேலும், பெரும்பாலான பெண்கள் கீழ் தரவரிசையில் உள்ளனர். எப்போதாவது, பெண்கள் உயர் பதவிகளை அடைவதாக சில அறிக்கைகள் உள்ளன. ஆனால், இவை விதிவிலக்குகள், விதிமுறைகள் அல்ல. ஆண்கள் விதிவிலக்காக இல்லாவிட்டாலும், அவர்களின் பாலினம் காரணமாக பெரும்பாலும் நிலை மற்றும் அதிகாரத்தில் எளிதாக உயர்கிறார்கள். எவ்வாறாயினும், பெண்கள் உயர் பதவிகளை அடைய தங்களை திறமையை நிரூபிக்க வேண்டும். நீதிபதி ரூமா பால், கிரண் பேடி மற்றும் மீரான் போர்வான்கர் போன்ற பெண்கள் அவர்கள் சார்ந்த உயர் பதவிகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நீதி அமைப்பில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஒரு தெளிவான நிறுவன சார்புநிலையை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் நிறுவன தடைகளை கேள்வி கேட்பதற்கு பதிலாக பெண்களை குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் எங்கே? அவர்களுக்கு நாம் எப்படி இடமளிக்க முடியும்? வசதிகளையும் ஆதரவையும் யார் வழங்குவார்கள்? இந்த கேள்விகள் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நிறுவன கட்டமைப்புகள் மற்றும் கலாச்சாரங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை புறக்கணிக்கின்றன.
இவை, நீதி நிறுவனங்கள் மற்ற பணியிடங்களைப் போலவே அனைத்து பாலினங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய தயாராக உள்ளனவா? ஆண்களை விட வித்தியாசமான தேவைகளைக் கொண்ட பெண்களுக்கு அவர்கள் குறிப்பாக என்ன செய்கிறார்கள்? ஒரு பெண்ணாக இருப்பதன் சமூக, கலாச்சார மற்றும் உயிரியல் அம்சங்களை எங்கள் நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன? ஆகிய முக்கிய கேள்விகளிலிருந்து திசைதிருப்பப்படுகின்றன.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் பெண்கள் மற்றும் பிற பன்முகத்தன்மையைச் சேர்ப்பது உள் இயக்கவியல் (internal dynamics) மற்றும் பொது அங்கீகாரத்தை மேம்படுத்துகிறது என்பதை உலகளாவிய ஆராய்ச்சி காட்டுகிறது. இதனால், கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கொள்கைகள் பெரும்பாலும் "அதிகமான பெண்களை" கொண்டு வருவதை 30 அல்லது 33 சதவீதம் போன்ற சில சதவீத இலக்குகளை பூர்த்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. சம வாய்ப்பு மற்றும் பாலின சமத்துவத்தை அடைவது, எந்தவொரு பாலினத்திற்கும் 60 சதவீதத்திற்கு மேல் பிரதிநிதித்துவம் கூடாது என்ற இலக்கை அடைவது தொலைதூர இலக்காகவே உள்ளது. சமத்துவத்தின் முக்கிய மதிப்புகளை உண்மையாக உள்ளடக்கியிருக்க, நீதி நிர்வாகிகள் பெண்களை தங்கள் நிறுவனங்களில் தீவிரமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை அமைக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் மற்றும் வைத்திருப்பார்கள் என்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும். தற்போதுள்ள அமைப்புகளுக்கு ஏற்றவாறு பெண்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துவது நீதிக்கு முக்கியம். ஒற்றை ஆண் கலாச்சாரத்தால் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் பாலின சமநிலை இல்லாதபோது அவை குறைவான செயல்திறன் கொண்டவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.