உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் (Gross Enrolment Ratio) முதலிடத்தில் தமிழ்நாடு - சதீஷ் லட்சுமணன்

 தமிழ்நாட்டில் தொலைதூரப் பகுதிகளில் கல்லூரிகளைத் திறப்பது தமிழ்நாட்டுக்குப் பலன் அளித்துள்ளது. இதனால், நம் மாநிலத்தில் உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களின், மொத்த சேர்க்கை விகிதம் (Gross enrolment ratio (GER)) 51.3% ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். உண்மையில், மாநிலத்தின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy) இலக்கை விட அதிகமாக உள்ளது. மேலும், இது  2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) 50 சதவிகிதமாக இலக்காக நிர்ணயித்துள்ளது.


1989-ல் மூவலூர் ராமாமிருதம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை (Moovalur Ramamirtham Ammaiyar marriage assistance scheme) அறிமுகப்படுத்தின பின்பு, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் அத்திட்டத்தை விரிவாக்குவதை பற்றி விவாதித்திருந்தார். இத்திட்டத்தின் படி, தொடக்கத்தில் 8-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இருப்பினும், இது ஒரு மாற்றத்தின் அடிப்படையில் இரண்டு அடுக்குகளாக உருவாக்கப்பட்டது. முதலில், பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.25,000 வழங்கப்படும். இரண்டாவது, பட்டப்படிப்பை முடித்தவர்கள், ரூ.50,000 மற்றும் நான்கு கிராம் தங்கம் பெற தகுதியுடையவர்கள் ஆகும்.


2022ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn scheme) புத்துயிர் பெற்றது. இந்த முயற்சியின் மூலம் அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.


கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பள்ளிகளில், மாணவர் சேர்க்கையில், இந்தத் திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தை வலியுறுத்துகிறார். மூவலூர் ராமாமிருதம் அம்மையார் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. திருமணத்தின் போது நிதியுதவியை எதிர்பார்த்து பெற்றோர்கள் தங்கள் மகள்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். இந்தத் திட்டம் சமூக நலத்துறையால் தொடங்கப்பட்டது, பள்ளிக் கல்வித் துறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் கஜேந்திர பாபு, இத்தகைய திட்டங்களே, தமிழ்நாட்டின்  மொத்த சேர்க்கை விகித சாதனைக்கு காரணம் என்று கூறுகிறார். 


இந்தியாவிலேயே கல்வியில், தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. இது அனைத்து மட்டங்களிலும் மிக உயர்ந்த மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) கொண்டுள்ளது. சமீபத்திய அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (All India Survey on Higher Education (AISHE)) அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 51.3% ஆகும். இது தேசிய சராசரியான 26.3% ஐ விட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.


தற்போதைய திமுக அரசு,  பெண் மாணவர்களுக்கான மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) மேம்படுத்த, மூவலூர் ராமாமிருதம் அம்மையார் திட்டத்தை (Moovalur Ramamirtham Ammaiyar scheme) புதுப்பித்துள்ளது.            


"தமிழ்நாட்டின் உயர் மொத்த சேர்க்கை விகிதத்தில் வரலாற்றுக் காரணிகள் பங்கு வகிக்கின்றன." பிரின்ஸ் கஜேந்திர பாபு குறிப்பிடுகிறார். சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடும், நீடித்த பாரம்பரியமும் அதற்கான காரணங்கள் என வலியுறுத்துகிறார். இது மாநிலத்தின் கல்வி அமைப்பில் கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக செல்வாக்கு மிக்க ஒரு குரலாக உள்ளது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக, அனைவருக்கும் கல்வி அவசியமில்லை என்ற பரவலான நம்பிக்கை இருந்து வந்ததுடன், வேலை தொடர்பான திறன்களைப் பெறுவது போதுமானது என்று மக்கள் நம்பியிருந்தனர். மேலும், பலர் கல்விக்கு தகுதியற்றவர்கள் என்று ஏற்றுக்கொண்டனர். இதற்கு மாறாக, வைகுண்ட சுவாமிகள் மற்றும் அயோத்தி தாசர் பண்டிதர் போன்ற சீர்திருத்தவாதிகள், இந்த நம்பிக்கைகளுக்கு எதிராக சவால் செய்தனர். மேலும், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சமத்துவக் கருத்துகளை வளர்த்தனர். பெரியார், சுயமரியாதை இயக்கத்தை (self-respect movement) வடிவமைத்தார். இதன் தொடர்ச்சியாக, 1922 -ல், நீதிக்கட்சி மதிய உணவு திட்டத்தை (noon meal scheme) அறிமுகப்படுத்தியது,  1925 இல் இத்திட்டத்தை மேலும்,  விரிவுபடுத்தியது.


"காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.காமராஜர் சக்திவாய்ந்தவராக விளங்கினார். பல்வேறு மாநிலங்களில் உள்ள மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சிந்திக்காத தொலைநோக்கு முடிவுகளை அவர் எடுத்தார். ஒவ்வொரு மூன்று கிலோமீட்டருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியை அமைக்கத் தொடங்கினார். ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு நடுநிலைப் பள்ளியையும் அமைத்தார். மேலும், சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். அவர் தனது சொந்த முயற்சியில் இந்த நடவடிக்கைகளை எடுத்தார். எந்த கோரிக்கைகளுக்காகவும், போராட்டங்களுக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் அவர் செயல்பட்டார்.” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு விளக்குகிறார்.

 

தொடர்ந்து, கஜேந்திர பாபு கூறுகையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அரசுகளும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. "கல்வித் துறையில், இரு கட்சிகளும் தங்கள் எதிரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை ஒழிக்க விரும்பவில்லை. மாறாக, அவை அவற்றின் மீது கட்டமைக்கப்பட்டன" என்று கஜேந்திர பாபு விளக்குகிறார். 


இதன் விளைவாக, அடுத்தடுத்த அரசாங்கங்களின் முயற்சிகள் சாதாரண நபர்களை இன்னும் அதிகமாக சேர்க்கைக்கு தூண்டியது. வளாக நேர்காணலில் (campus interviews) பங்கேற்பது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் தேடி வருவதால் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொறியியல் படிப்புக்கு ஆசைப்பட்டனர். இதனால், பொறியாளர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள சிறிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வாக இதைப் பார்த்தனர். பின்னர், பாம்புக் கடியின் தாக்கம், சிசு இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதங்கள் போன்றவற்றின் தாக்கத்தை அவர்கள் நேரில் கண்டதால், அவர்களின் விருப்பம் மருத்துவர் துறையில் சேர ஆசைப்படுகிறார்கள். அரசாங்கங்களின் முன்முயற்சிகள், மக்கள் கனவு காணவும், மேலும் குறிப்பிடத்தக்க வகையில் அவர்களின் கனவுகளை நனவாக்கவும் அதிகாரம் அளித்துள்ளது.


தமிழ்நாட்டின் உயர் மொத்தப் பதிவு விகித (GER) அதிகரிப்பு என்பது, வெறும் எண்களை மட்டுமல்ல, பல மக்கள் மற்றும் சமூகங்களின் கனவுகளையும் வெற்றிகளையும் காட்டுகிறது. தமிழ்நாடுத்தில் மனித உரிமைகள், சமூக நீதி, பெண்ணுரிமை போன்றதே கல்வி என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. "மக்கள் கல்வியை தங்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒன்றாகப் பார்த்தார்கள். அது அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தை வழங்கியது."


தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. கல்வியின் சிறப்பை அடைவதில் அர்ப்பணிப்பு, கவனமான திட்டமிடல் மற்றும் சமூக ஒத்துழைப்பு ஆகியவற்றின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்துகிறது.  தமிழ்நாடு புதிய சவால்களை எதிர்கொண்டு, தற்போதுள்ள சவால்களை வலுப்படுத்துவதால், அதன் வெற்றி எதிர்கால தலைமுறைகளுக்கு நீடித்த உத்வேகமாக மாறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.




Original article:

Share: