அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளைத் தீர்க்க சீனா பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.
தென் சீனக் கடலில் சீனா "பொறுப்பற்ற (reckless) மற்றும் சட்டவிரோதமான (illegal)" நகர்வுகளை மேற்கொள்வதாகவும், மறுவிநியோக பணியைத் (resupply mission) தடுப்பதாகவும் மணிலா (Manila-பிலிப்பைன்ஸின் தலைநகரம்) குற்றம் சாட்டியபோது சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன. இரண்டாவது தாமஸ் ஷோல் அருகே அவர்களது படகுகள் நிறுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பலில் மாலுமிகள் குழு ஒன்று தங்களுடைய இறையாண்மை உரிமைகளை வலுப்படுத்துவதற்காக வசித்து வருகின்றனர். சம்பவத்தின் போது, பிலிப்பைன்ஸின் படகுகளில் ஒன்று சிறிய கட்டமைப்பு சேதத்தை சந்தித்ததாக கடலோர காவல்படை கூறியது.
தென் சீனக் கடலில், சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையினருக்கு இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. கடந்த செப்டம்பரில், பிலிப்பைன்ஸ் படைகள் சர்ச்சைக்குரிய ஸ்கார்பாரோ ஷோல் (Scarborough Shoal) அருகே சீனாவால் அமைக்கப்பட்ட 300 மீட்டர் மிதக்கும் தடையை (floating barrier) அகற்றின. இந்த நடவடிக்கை பெய்ஜிங்கில் இருந்து ஒரு எச்சரிக்கைக்கு வழிவகுத்தது. செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தில், சீனா, பிலிப்பைன்ஸை குற்றம் சாட்டியது. அதன் கப்பல்கள் ஸ்கார்பாரோ ஷோலைச் சுற்றியுள்ள நீரில் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறியது. இங்கே முக்கிய பிரச்சினையானது முரண்பட்ட கூற்றுக்கள் ஆகும். தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது 2012 இல் பிலிப்பைன்ஸிடமிருந்து வளமான காயலைக் கொண்ட ஸ்கார்பரோ ஷோல் என்ற பாறையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. மணிலாவின் மணல் திட்டு தொடர்பாக ஹேக்கில் (Hague) உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் இருந்து சாதகமான தீர்ப்பைப் பெற்றது. ஆனால் பெய்ஜிங் அதை புறக்கணித்தது. சீனாவால், ரெனாய் ஜியாவோ (Ren’ai Jiao) என்றும் அழைக்கப்படும் இரண்டாவது தாமஸ் ஷோலுக்கு பிலிப்பைன்ஸ் வழக்கமாக பொருட்களை அனுப்புகிறது. இந்த ஷோல் பிலிப்பைன்ஸ் தீவான பலவானில் (Palawan) இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், ஷோலைச் சுற்றி சீனக் கப்பல்களின் நடவடிக்கைகள் காரணமாக சமீபத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதால் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஸ்கார்பாரோ ஷோலை சீனா கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, பிலிப்பைன்ஸ் அதன் பெரிய அண்டை நாடுகளுடன் பதட்டங்களை அதிகரிக்காமல் எச்சரிக்கையாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) தொடர்ந்து பதட்டங்களைக் குறைக்க முயன்றார். ஆனால் ஜூன் 2022 இல் பதவியேற்ற ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Jr.,), வேறுபட்ட அணுகுமுறையான, அமெரிக்காவுடனான பிலிப்பைன்ஸின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தினார். இது, மேலும் பெய்ஜிங்கை கோபப்படுத்தியது. அமெரிக்கா தற்போது ஒன்பது பிலிப்பைன் இராணுவ தளங்களை அணுகியுள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவுடனான மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சி மணிலாவில் நடத்தப்பட்டது. நீண்ட காலமாக, ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு திறன்களையும் பிராந்தியத்தில் அதன் நிலைப்பாட்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். குறுகிய காலத்தில், அவர் தனது நாட்டின் இறையாண்மை உரிமைகோரல்களைப் (sovereignty claims) பாதுகாக்க சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். மறுபுறம், வளர்ந்து வரும் அமெரிக்க-பிலிப்பைன்ஸ் உறவுகளை ஒரு பெரிய சவாலாக சீனா காண்கிறது மற்றும் வாஷிங்டன் மணிலாவை ஒரு "பகடைக்காயாக" (pawn) பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறது. எவ்வாறாயினும், தென் சீனக் கடலில் அதன் ஆக்கிரமிப்புக்கான உரிமைகோரல்கள் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகள் ஆகியவை பிராந்தியத்தில் எந்த நட்பையும் உருவாக்காது என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, உலகின் பரபரப்பான நீர்வழிகளில் ஒன்றில் மோதல்களைத் தீர்க்க பெய்ஜிங் அமைதியான ஈடுபாடு மற்றும் பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.