அதிகம் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரத்தின் மீது நீதிமன்றத்தின் நடவடிக்கை தேவை

 தற்போதுள்ள உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நீதிமன்றங்கள் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.    


பதஞ்சலி ஆயுர்வேத் மற்றும் அதன் தலைவர்களான ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோருக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஹிமா கோஹ்லி தலைமையில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற அமர்வில் ஏப்ரல் 23 அன்று, ”நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் செயல்படவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார். பதஞ்சலி ஆயுர்வேதா, கோவிட்-19, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களுக்கு நிரூபிக்கப்படாத சிகிச்சைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களை வெளியிட்டது.


இந்தியாவில் நெஸ்லேவின் (Nestlé's) குழந்தைகளுக்கான ஃபார்முலா பற்றிய அறிக்கையை பெஞ்ச் கவனித்தது. ஐரோப்பாவில் உள்ள அதே தயாரிப்பில் உள்ள சர்க்கரையின் அளவை விட இந்த ஃபார்முலாவில் அதிக சர்க்கரை உள்ளது. இதன் காரணமாக, பதஞ்சலி ஆயுர்வேத வழக்கின் நோக்கத்தை நீதிமன்றம் விரிவுபடுத்தியது. இப்போது, ​​தவறான விளம்பரங்களை வெளியிடும் அனைத்து அதிகம் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் (Fast-moving consumer goods (FMCG)) தயாரிப்பு நிறுவனங்களும் இதில் அடங்கும்.


இந்தியாவில் தொற்றாத நோய்கள் (non-communicable diseases (NCDs)) அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பு தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளினால் ஏற்படுகிறது. தங்கள் தயாரிப்புகளில் சில வைட்டமின்களைச் சேர்த்தாலும், உற்பத்தியாளர்கள் இன்னும் முக்கியமாக சத்தற்ற உணவுகளை (junk Food) விற்கிறார்கள்.


கடந்த மாதத்தில், தவறான வாக்குறுதிகளுடன் (misleading claims) தொடர்ந்து விளம்பரப்படுத்தியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத்  நிறுவனம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரியது. நீதிமன்றம் முன்பு அவர்கள் ஆஜராக உத்தரவிட்ட பின்னரும் இந்த கோரிக்கை எழுந்தது. வெளியிடப்பட்ட மன்னிப்பு விளம்பரம் சிறிய அளவாக இருந்தது என பிரதிவாதிகளை நீதிமன்றம் விமர்சித்தது. இப்போது, ​​அவர்களின் சமீபத்திய மன்னிப்பை நீதிமன்றம் ஏற்குமா என்பது நிச்சயமற்றது. 


முறையான சிக்கல்கள் காரணமாக நீதிமன்றம் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பது கவலை அளிக்கிறது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், புகாரளிப்பதற்கும், அனுமதிப்பதற்கும் தற்போதுள்ள அமைப்பு புகார்களை நம்பி செயல்படாமல் உள்ளது. இந்திய விளம்பரத் தர நிர்ணயக் கவுன்சிலால் முத்திரையிடப்பட்ட பிரச்சனைக்குரிய விளம்பரங்கள் தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்தின் செயலற்ற தன்மை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சபைக்கு இணக்கத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India), பல்வேறு உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட மூலப்பொருள் வரம்புகளை நிர்ணயித்திருந்தாலும், இணங்காத உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சரியாக செயல்படவில்லை. இதற்க்கு காரனம் குறைவான பணியாளர்கள், போதிய வசதிகள் மற்றும் நிதியின்மை ஆகியவையாகும்.


அறிவியல்பூர்வமற்ற கூற்றுக்களை அடையாளம் காணும் பொறுப்பு சமூகத்திலுள்ள பல்வேறு உறுப்பினர்களின் பொருப்பாகும். இதில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சரியான தகுதிகள் இல்லை. அறிவியல்பூர்வமற்ற மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடும் தனிநபர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதில்லை. அவை பெரும்பாலும் செலவு மிகுந்தது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே,  அதிகம் விற்பனையாகும் நுகர்வுப்  பொருட்களைச் (FMCG) சந்தைப்படுத்துதலில் உடனடி மற்றும் பயனுள்ள ஒழுங்குமுறை தேவை. அத்தகைய கட்டுப்பாடு இல்லாததால், தயாரிப்புகள் பற்றிய நிரூபிக்கப்படாத சுகாதார உரிமைகோரல்கள் பரவுவதற்கு அனுமதித்துள்ளது. இது தொற்றாத நோய்கள் பற்றிய இந்தியாவின் கவலைகளுக்கும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் உணவுகளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. 


நீதிமன்றங்களின் பணி சட்டங்களை மறுபரிசீலனை செய்வதாக இருக்க வேண்டுமே தவிர அவற்றை உருவாக்குவது அல்ல. தங்கள் முன் வரும் வழக்குகளில் சட்டத்தை மீறுபவர்கள் மீது விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறையானது சட்டமியற்றும் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் பாத்திரங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.




Original article:

Share: