மியூசுவின் வெற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்க இந்தியா அனுமதிக்கக் கூடாது
மாலத்தீவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அதிபர் முகமது முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் (People's National Congress (PNC’s)) கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவரது கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் சேர்ந்து, இப்போது மக்கள் மஜ்லிஸில் உள்ள 93 இடங்களில் 70 க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டுள்ளது. இந்த "சூப்பர் மெஜாரிட்டி" ஜனாதிபதி முய்சுவுக்கு சட்டங்களை இயற்றுவதற்கும் அரசியலமைப்பைத் திருத்துவதற்கும் எளிதாக்குகிறது.
இந்தியாவுக்கு ஆதரவானதாக கருதப்படும் மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர்கள் அப்துல்லா யாமீன், முகமது நஷீத் தலைமையிலான கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சர்வாதிகார ஆட்சி வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டில் இந்த தேர்தல் முடிவு ஜனாதிபதி முய்சுவுக்கு கணிசமான அதிகாரத்தை வழங்கியுள்ளது.
நவம்பர் 2023 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஜனாதிபதி முய்சுவின் முடிவுகள் மாலத்தீவு மக்களால் பரவலாக ஆதரிக்கப்பட்டுள்ளன. அவரது சர்வதேச நடவடிக்கைகளில் சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு பயணம் செய்வது மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு விருந்தளிப்பது ஆகியவையும் அடங்கும். அவர் இந்தியா எதிர்ப்பு அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஒரு சந்திப்பில், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக மாலத்தீவில் உள்ள இந்திய துருப்புகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார். இது அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, அவர் இந்தியாவுடனான நீர்வரைவியல் (hydrography) ஒப்பந்தத்தை முடித்து, எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் சார்ந்திருப்பதைக் குறைக்க சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தினார்.
இந்தியாவின் பெரும்பான்மைவாதம் தலைதூக்குவது குறித்து மாலத்தீவு தலைவர்களும், விமர்சகர்களும் கவலையடைந்துள்ளனர். மாலத்தீவு அமைச்சர்கள், திரு மோடி பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கூறியது, இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும், மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
மாலத்தீவில் சமீபத்திய தேர்தல் முடிவுகள் மற்றும் ஜூன் மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் மூலம், புது டெல்லிக்கும் மாலேக்கும் தங்களின் விரிசல் உறவுகளை சரிசெய்ய வாய்ப்பு உள்ளது. வரலாற்று ரீதியாக, இரு நாடுகளும் ஒரு நல்ல உறவை கொண்டுள்ளன. இது அரசாங்கத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் ஏற்ற இறக்கமாக இருக்கக்கூடாது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளாக இது இல்லை. திரு. முய்ஸு, இந்தியா அல்லது சீனாவுடன் வெளிப்படையாகச் ஆதரவளிப்பதைக் காட்டிலும், "மாலத்தீவுகளுக்கு ஆதரவான" கொள்கையைத் தொடரும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு அல்லது பிராந்திய அமைதிக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் இதை நிரூபிக்க அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும்.
மாலத்தீவின் பொருளாதாரச் சிக்கல்கள், வளர்ச்சித் தேவைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்கள், அமெரிக்கா மற்றும் சீனாவுடனான அதன் இராஜதந்திர முக்கியத்துவத்துடன், இந்தியாவுடன் வலுவான உறவைப் பேணுவதன் நன்மைகள் விரைவில் தெளிவாகத் தெரியும். இந்தியா நிலையான நிதியுதவி மற்றும் ஆதரவை வழங்குகிறது. ஒரு உண்மையான வெற்றிகரமான உறவுக்கு, "அருகில் இருப்பவருக்கு முன்னுரிமை" (Neighbourhood first) என்ற பரஸ்பர கொள்கையானது தன்னார்வமாகவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நலன்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.