வேட்பாளருக்குப் பதிலாக கட்சிக்கு நோட்டீஸ் அனுப்புவது, தேர்தல் ஆணையம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் மாற்றத்தைக் குறிக்கிறது -தாமினி நாத்

 கடந்த காலங்களில், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct (MCC)) குறித்து தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பொதுவான ஆலோசனைகளை அனுப்பும். ஒரு தனிநபரின் விதிமீறல் குறித்து குறிப்பிட்ட புகார் இருந்தால், தேர்தல் ஆணையம் அந்த அறிவிப்பை நேரடியாக அந்த நபருக்கு அனுப்பும், அவர் சார்ந்த கட்சிக்கு அல்ல.


இருப்பினும், இந்த சூழ்நிலைகளை தேர்தல் ஆணையம் கையாளும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக, தேர்தல் ஆணையம் தங்கள் நட்சத்திர பிரச்சாரகர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த முறை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி குறித்த புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்களில், நட்சத்திர பிரச்சாரகர்கள் தங்கள் உரைகளுக்கு பொறுப்பு என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அனைத்திற்கும் மேலாக, தேர்தல் ஆணையம், கட்சிகள் தங்கள் பிரச்சாரகர்களின் நடவடிக்கைகளுக்கு "ஒவ்வொரு விசயத்தின் அடிப்படையில்" (“case-by-case basis”) பொறுப்பேற்க வைக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியது.


தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக முன்னாள் தேர்தல் ஆணையர் (Election Commissioner) ஒருவர் தி இந்தியன் பத்திரிகையிடம் தனது கவலைகளை பகிர்ந்துகொண்டார். ஒரு தலைவரின் கருத்து தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினால், ஒரு கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். நோட்டீஸுக்கு ஒரு கட்சியின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த காலங்களில், சோனியா காந்தி, மோடி மற்றும் அமித் ஷா போன்ற உயர்மட்ட தலைவர்களுக்கு மாதிரி நடத்தை விதிகளை  மீறியதற்காக ஆணையத்தால் நேரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தை விதி விதிமீறல் தொடர்பாக இதுவரை எந்த பிரதமருக்கும் நோட்டீஸ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மார்ச் 16 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (Rajiv Kumar) அறிவித்த திட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை வந்த அறிவிப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் பிரச்சாரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பொறுப்பு அதிகரிப்பது மட்டுமல்ல, நட்சத்திர பிரச்சாரகரின் பேச்சுகளும்  அரசியல் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் போது, ​​அரசியலமைப்பின் கொள்கைகளை (ideals of Constitution) பின்பற்றுவதாக உறுதியளித்தியுள்ளன. இதைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டினோம் என்று அந்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம்  தெரிவித்தார்.




Original article:

Share: