புவிசார் அரசியல் சூழ்ச்சிகளின் அதிக செலவுகள் மற்றும் நெறிமுறையற்ற சர்வதேச இராஜதந்திரத்தின் நிஜ உலக தாக்கத்தை காசா நினைவூட்டுகிறது
34,000 க்கும் மேற்பட்டவர்கள், அதாவது, கிட்டத்தட்ட 33,000 பாலஸ்தீனியர்கள், 1,200 இஸ்ரேலியர்கள், 97 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான இஸ்ரேலியரின் உயிரிழப்புகள் அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் விளைவாக நடந்தவையாகும். மேலும், 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அந்த பயங்கரவாத தாக்குதலின் நாளுக்குப் பிறகு நடந்த இஸ்ரேல் தாக்குதல், மனிதகுலத்திலேயே மிக மோசமான தாக்குதலில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த துயர சம்பவம் நேரடி ஒளிபரப்பில் அரங்கேறி வருகிறது. இதில், மக்களின் அறியாமையை காரணம் காட்ட முடியாது. இந்த மோதல் அக்டோபர் 7 அன்று தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இந்தப் படுகொலைக்காக இஸ்ரேல் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் இதேபோன்ற பொறுப்பைக் கொண்டுள்ளன.
நடுநிலையின் போலித்தனம்
வரலாற்று ரீதியாக, அமெரிக்கா இஸ்ரேலிய அரசை முதன்மையானதாக ஆதரித்து வருகிறது. அதை அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்காதான். மிகவும் விரோதமான அண்டை நாட்டில் இஸ்ரேல் உயிர்வாழ அமெரிக்கா உதவியுள்ளது. மேலோட்டமாக, 1973 அரபு-இஸ்ரேல் போரைத் (Arab-Israel war) தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் கேம்ப் டேவிட் (Jimmy Carter’s Camp David) பேச்சுவார்த்தைகள், பில் கிளிண்டனின் (Bill Clinton) இரு நாடுகளின் தீர்வுக்கான மதிப்பீடுகள், ஜார்ஜ் புஷ்ஷின் அமைதிக்கான சாலை வரைபடம் (Road Map to Peace) மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரியின் ஆறு கோட்பாடுகள் (Six Principles) உட்பட பல்வேறு வடிவங்களில் இரு-நாடுகளின் தீர்வுக்கான முயற்சிகளை வழிநடத்தியது.
அமெரிக்கா ஒரு நடுநிலையான நடுவராக செயல்படலாம். ஆனால், இஸ்ரேலின் குடியேற்ற காலனித்துவத்தின் பின்னணியில் சக்தியாக இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் வடிவமைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தும் அமைப்பான ஐக்கிய நாடு யூத அரசுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (United Nations Security Council (UNSC)) தீர்மானங்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அது தொடர்ந்து வீட்டோ (veto) அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலின் மிகப்பெரிய வர்த்தக நட்புநாடாகவும் மற்றும் அதன் உதவி இஸ்ரேலின் இராணுவ செலவினங்களில் 16% பங்களிக்கிறது. அரபு-இஸ்ரேல் உறவுகளை இயல்பாக்கும் உந்துதல், பெரும்பாலும் அமெரிக்காவால் தலைமைதன்மையை உறுதிசெய்யப்பட்டது. பாலஸ்தீனிய நோக்கத்தை அரபுநாடுகளின் அரசியலில் இருந்து படிப்படியாக அகற்றியுள்ளது. இஸ்ரேலிய குடியேறிய காலனித்துவம் ஒரு ’மான்ஸ்டரைப்’ (monster) போன்றது என்றால், அமெரிக்கா அதை உருவாக்கிய டாக்டர் ஃபிராங்கண்ஸ்டைனைப் (Dr. Frankenstein) போன்றது.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் "செழிப்புக்கான சமாதானம்" (Peace to Prosperity) திட்டத்தில் நடுநிலை குறித்த அமெரிக்க போலித்தனம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. இது, ஜாரெட் குஷ்னரின் மூளையில் உருவானது. இது பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலத்தை மேலும் பறிக்கவும், ஜெருசலேமை இஸ்ரேலிடம் ஒப்படைக்கவும் முன்மொழிந்தது. மேலும், பாலஸ்தீனியர்களுக்கு நாடு உருவான பின்னர், திரும்புவதற்கான உரிமையை அல்லது இராணுவ பாதுகாப்பை வழங்கத் தவறியது. இது முற்றிலும் இஸ்ரேலுக்கு ஆதரவான திட்டம் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தால் சரியாக நிராகரிக்கப்பட்டது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ்
ஜோ பிடென் நிர்வாகத்தின் கீழ், நீதித்துறையின் மீதான பெஞ்சமின் நெதன்யாகுவின் தாக்குதல், தீவிர வலதுசாரிகளுடன் கூட்டணி (coalition with the far right) மற்றும் அல் அக்ஸா மசூதி (Al Aqsa mosque) மீதான தாக்குதல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க-இஸ்ரேல் உறவுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. ஆனால், ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) பணிகள் தொடர்ந்தன மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவின் அடிப்படையில் உறவுகள் வலுவாக இருந்தன. எனவே, ஜோ பிடன் தனது அக்டோபர் 10, 2023 உரையில், இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அதிபர் ஜோ பிடனின் குறிப்புகளில், ‘அமெரிக்கா இஸ்ரேலின் ஆதாரவில் உள்ளது’ என்று கூறியதில் ஆச்சரியமில்லை.
உள்நாட்டு நிதியின் அழுத்தம் இருந்தபோதிலும், திரு ஜோ பைடன் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு நிதியுதவி செய்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நட்பு நாடுகளை ஒரு நேரடி இனப்படுகொலையைத் தூண்டும் அதே வேளையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்குப் பின்னால் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. நெருக்கடியின் ஆரம்பத்தில் மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கான தீர்மானத்தை இது தடுத்தது. நாடுகளின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை அனுமதிக்க காங்கிரஸை புறக்கணித்தது. ஆனால் இஸ்ரேலின் காசாவின் முழுமையான அழிவு மற்றும் ரஃபாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆகியவை அமெரிக்காவானது வரம்புகளையும் சோதிக்கின்றன.
போர் நிறுத்தம், பாலஸ்தீனர்களுக்கு உதவி, இஸ்ரேலுக்கு ஆதரவு என ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே இருந்து திரு ஜோ பைடன் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். வரவிருக்கும் வாரங்களில் நடவடிக்கை என்று வரும்போது திரு நெதன்யாகுவுக்கும், திரு ஜோ பைடனுக்கும் இடையே பிளவு அதிகரித்து வருகிறது. போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (United Nations Security Council (UNSC)) தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.
பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) மீதான ஹவுதிகளின் இடையூறு மற்றும் டமாஸ்கஸில் (Damascus) உள்ள அதன் தூதரகத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் பதிலடி ஆகியவை ஒரு டோமினோ விளைவை (domino effect) ஏற்படுத்தும். இஸ்ரேல் மீது செல்வாக்கு செலுத்த மேற்கத்திய நாடுகளின் விருப்பமின்மை, நாடுகளை பிராந்திய அளவிலான வன்முறை மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும்.
திரு ஜோ பைடனின் கொள்கையைப் புரிந்துகொள்வதில் உள்நாட்டு காரணிகளும் சமமாக முக்கியமானவை. வரவிருக்கும் தேர்தலுடன், டிரம்ப்பின் பிரச்சாரம் அமெரிக்க யூத சமூகம் (American Jewish community) மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவர்களைக் (Evangelical Christians) கருத்தில் கொண்டு பிரம்மாண்டமாகத் தொடரும். பரந்த வாக்காளர் தளத்தை உருவாக்க ஆர்வமுள்ள திரு பைடன், திரு டிரம்புடன் போட்டியில் உள்ளனர். அந்த போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் மட்டுமே உள்ளார்கள் என்பதே நிதர்சனம்.
உண்மையான தலைமைத்துவம் குறித்து
கொலம்பியா மற்றும் பிற மாணவர்கள் அமெரிக்க தலைவர்களை விட அதிக தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஜோ பிடன் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகியவை உலகளாவிய தெற்கிலிருந்து உண்மையான தலைமையை காட்டியுள்ளனர். 25,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் படுகொலையை விட 7 உலக மத்திய சமையலறை ஊழியர்களின் (World Central Kitchen workers) மரணம் அமெரிக்க தலைவர்களை வருத்தமடையச் செய்தது வருத்தமளிக்கிறது. சில உயிர்கள் மற்றவர்களை விட முக்கியம் என்பதை இது காட்டுகிறது.
அமைதியை ஊக்குவிப்பதில் அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் அது பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் வீட்டோ செய்தது போன்ற மோதல்களைத் தடுப்பது மற்றும் நீடிப்பதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், நிச்சயமற்ற இராஜதந்திரம் காரணமாக உலகளாவிய அரசியல் எவ்வாறு சோகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது.
சேத்தன் ராணா 9DASHLINE இல் இணை ஆசிரியராகவும், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் PhD ஆய்வராகவும் உள்ளார்.