உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரவேண்டும். இருப்பினும் சூழ்நிலை தற்பொழுது ஒப்பந்தத்திற்கு சாதகமாக இல்லை.
இன்று மத்திய கிழக்கில், இரண்டு தெளிவான விஷயங்கள் உள்ளன: ஒன்று திட்டவட்டமானது, மற்றொன்று மிகவும் சாத்தியமானது. அக்டோபர் 7, 2023க்கு முன், நிபந்தனைகளுடன் பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, இஸ்ரேலுடன் இணைந்தால் சுதந்திரமான பாலஸ்தீன அரசு இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இரு தரப்பினரும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு நாடுகளும் இணைந்து வாழ்வதற்கான விரிவான திட்டத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஜனவரி 2001 இல், தாபாவில், நடை பெற்ற பேச்சுவார்த்தியில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர்.
ஹமாஸ் (Hamas) VS பாலஸ்தீன அதிகாரசபை (Palestinian Authority)
அக்டோபர் 7 முதல், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசத்தொடங்கி உள்ளன. ஆனாலும், இந்த அணுகுமுறை இப்போது காலாவதியானதாகத் தெரிகிறது. இப்பொழுது, இஸ்ரேலில் வெகு சிலரே பாலஸ்தீன நாடு என்ற கருத்தை ஆதரிக்கின்றனர். மேற்குக் கரையில் முன்பை விட இப்போது ஹமாஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், எந்தவொரு போரும் முடிவுக்கு வந்த பிறகு, ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலஸ்தீன பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன்பே பல மேற்குக்கரை பாலஸ்தீனியர்கள் ஹமாஸை ஆதரித்தனர். இப்போது, ஹமாஸுக்கு அவர்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது. இஸ்ரேலியர்கள் இந்த சூழ்நிலையை நிலையை எதிர்கொள்ள விரும்பவில்லை.
பாலஸ்தீன அதிகார சபை ரமல்லாவில் அமைந்துள்ளது. இது மற்ற குழுக்களை விட அமைதியானதாக கருதப்படுகிறது. இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இருப்பினும், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இருவரும் அதை ஊழல் மற்றும் பயனற்ற சபையாக பார்க்கிறார்கள். நியாயமான முறையில் தேர்தல் நடந்தால், ஹமாஸ் வெற்றி பெறும். ஹமாஸ் முற்றிலுமாக அகற்றப்பட்டால் மட்டுமே இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை நாடாகக் கருதுவார்கள். ஆனால் இப்பொழுது அதற்கான சாத்திய கூறுகள் இல்லை.
இதனால், மோதல் தொடரும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (Israel Defense Forces (IDF)) ரமல்லாவில் மீதமுள்ள ஹமாஸ் படை வீரர்களை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ராஜதந்திரம் சில இஸ்ரேலிய அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் ஆதரிக்கப்படுகிறது.
ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 80 அல்லது 90 பணயக் கைதிகளை திருப்பி அனுப்புவதற்கும் ஹமாஸை ஒழிப்பதற்கான இலக்கிற்கும் இடையில் எவ்வாறு முன்னுரிமை அளிப்பது என்பதில் இஸ்ரேலிய மக்கள் பிளவுபட்டுள்ளனர். பணயக் கைதிகளை மீண்டும் கொண்டு வருவது மிக முக்கியமானது என்று சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் ஹமாஸை அகற்றுவது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மக்களுக்கு இரண்டு இலக்குகளையும் அடைவேன் என்று உறுதியளித்தார். இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடனின் பகிரங்க எச்சரிக்கைக்குப் பிறகும், ரஃபா மீதான தாக்குதலைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.
பரந்த மோதல் அபாயம்
காசா மோதல் ஒரு பரந்த பிராந்திய போராக அதிகரிக்கக்கூடும் என்று அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி பைடனுக்கு இது முக்கிய கவலையாக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி ஜே.பிளிங்கன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மார்ச் 25ம் தேதி உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அது ரமலான் முடியும் வரை மட்டுமே நீடிக்கும். அமெரிக்கா இதற்கு வாக்களிக்கவில்லை, மற்ற 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், இந்தத் தீர்மானம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக திரு.பைடன் இந்த நடவடிக்கையை எடுத்தார். வெளிநாட்டுக் கொள்கையில் உள்நாட்டு அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கணிசமான உயிர் இழப்பு மற்றும் அழிவுகளால் கலங்காத ஹமாஸ், ரமல்லாவில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான பிரதம மந்திரி நெத்தனியாகுவின் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர். போர் நிறுத்த விதிமுறைகளின் ஒரு பகுதியாக இஸ்ரேல் தனது படைகளை நிரந்தரமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒப்பந்தம் கோருகிறது. விரைவான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சர்வதேச ஆதரவை நம்பியுள்ளது. எவ்வாறாயினும், திரு. நெதன்யாகு தனது இலக்குகளை அடையும் வரை போரை நிறுத்த மாட்டார்.
லெபனானில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. இரு தரப்பினரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஹெஸ்பொல்லாவிடம் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் இஸ்ரேலை நோக்கி தயாராக வைத்துள்ளனர். நடந்து கொண்டிருக்கும் காசா போர் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது இன்னும் குறிப்பிடத்தக்க தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பாக ஹெஸ்பொல்லாவால் பார்க்கப்படலாம். ஹெஸ்பொல்லா ஷியா என்றும், ஹமாஸ் சுன்னி என்றும் குழுவாத வேறுபாடுகள் இருந்தபோதிலும், மோதல் இந்த குழுக்களை ஒரு பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுத்தியுள்ளது.
போர்கள் அசாதாரண கூட்டணிகளை உருவாக்குகின்றன. உதாரணமாக, ஒரு ஷியா குழு சன்னி குழுவை ஆதரிக்கிறது. வடக்கு இஸ்ரேலில் இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஈரானிய தூதரகம் உட்பட சிரிய பிரதேசத்தை இஸ்ரேல் தாக்கியதால், சிரியாவும் ஈரானும் பதிலடி கொடுக்கக்கூடும். இதனால் இஸ்ரேல் மீண்டும் வலுவாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இது நடந்தால், எகிப்து போரில் ஈடுபடுவதற்கான நிர்பந்தம் ஏற்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் படையெடுப்புகளின் போது ரமல்லாவிலிருந்து மக்களை அதன் எல்லைக்குள் அனுமதிக்குமாறு எகிப்து வலியுறுத்தப்படுகிறது. இது, மற்ற அரபு நாடுகளின் அழுத்தத்துடன், எகிப்து நடுநிலை வகிக்க கடினமாக இருக்கும். இஸ்ரேலை வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை ஈரான் வைத்துள்ளது. இந்த நாடுகள், இதனை, இஸ்ரேலை ஒழிப்பதற்கான அரிய வாய்ப்பாக கருதலாம்.
இது நடந்தால், அமெரிக்கா இஸ்ரேலின் உதவிக்கு செல்லும். இது நடந்தால், ரஷ்யா அமைதியாக இருக்க முடியுமா? இந்த சூழ்நிலை ஆபத்தானது மற்றும் உலகளவில் மக்கள் அனைவரையும் கவலை அடைய செய்கிறது. இது இப்போது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அதன் வாய்ப்புகளைப் புறக்கணிப்பது மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்.
சின்மயா ஆர்.கரேகான், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராகவும் (India’s Ambassador to the United Nations), மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் சிறப்பு தூதராகவும் 2005-09 வரை பணியாற்றினார்.