நாடாளுமன்றத்தின் கடந்த காலம், மாறிவரும் இயக்கவியலின் கண்ணாடி - பிரியங்க் நாக்பால் நேஹல் சர்மாவாக

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை நடைபெற்ற அலுவல்கள் நாடாளுமன்ற ஈடுபாட்டிற்கு புத்துயிர் அளித்தல் மற்றும் ஆக்கபூர்வமான விவாதத்தின் அவசியத்தை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன.


17வது மக்களவை, 2019 முதல் 2024 வரை செயல்பட்டது, ஒரு சனிக்கிழமையன்று அதன் அமர்வு முடிவுற்றதன்  மூலம் அதன் பாரம்பரியமாக இருக்கும் வாரத்தில் ஐந்து வேலை என்பதிலிருந்து மாறியது. இந்த அசாதாரண திட்டமிடல் முந்தைய மக்களவையின் முடிவைப் பிரதிபலித்தது, அது அதன் இறுதி அமர்வையும் நீட்டித்தது. இந்தியாவில் பொதுத் தேர்தலை நெருங்கி வரும் நிலையில், இந்த முறை தொடருமா அல்லது புதிய போக்கு உருவாகுமா என்ற ஊகங்கள் உள்ளன. இந்த சூழ்நிலை இந்திய குடிமக்கள் 18வது மக்களவையின் துவக்க விழாவை எதிர்பார்க்கும் நிலையில், பாராளுமன்றத்தின் சமீபத்திய செயல்பாடுகளை சிந்திக்க தூண்டுகிறது.


அமைச்சகங்கள் எவ்வாறு செயல்பட்டன ?


அரசாங்கத்தின் அரசியல் சூழல் மாறி வருகின்றது. மாநிலங்களவை உறுப்பினர்களிடம் இருந்து 1,146 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 28 பேருக்கு மட்டுமே பதில் கிடைத்தது. அதே போல், மக்களவையிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் கேள்விகளும் குறைந்துள்ளன. 15 மற்றும் 16 வது மக்களவைகளின் போது 5,000 ஆக இருந்த கேள்விகளின்  எண்ணிக்கை 17 வது மக்களவையில் 1,700 ஆக குறைந்தது. அரசு உயர் அலுவலகத்திடம் குறைவான மக்களே கேள்வி கேட்பதை இது காட்டுகிறது.


நாடாளுமன்றத்தில், கொள்கைகள் மற்றும் தேசிய பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடக்கும்போது, குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த மூன்று மக்களவைகளிலும் காணப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நலன்களும் முன்னுரிமைகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை இது காட்டுகிறது.


சுகாதாரம் மற்றும் குடும்பம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் ஆகிய இரண்டு அமைச்சகங்கள் மிகவும் முக்கியமானவையாகியுள்ளன. அவர்கள் இப்போது அதிக கேள்விகளைப் பெறுகின்றன. சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் மீதான கவனத்தின் இந்த அதிகரிப்பு COVID-19 தொற்றுநோய்க்கு முன்பே தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதை இது காட்டுகிறது. இந்த அமைச்சகங்கள் அதிக கேள்விகளைப் பெற்றாலும், மக்களவையில் ஒட்டுமொத்த கேள்விகளின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.


தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் (national security and internal affairs) மீதான ஆர்வம் வியக்கத்தக்க வகையில் குறைந்துள்ளது. 15 வது மக்களவை வரை, உள்துறை அமைச்சகத்திடம் (Ministry of Home Affairs) இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், இப்போது, ராஜ்யசபாவில் அதிக கேள்விளை எதிர்கொண்ட முதல் ஐந்து அமைச்சகங்களின் பட்டியலில்   வெளிப்படையாக இல்லை, கேள்விகளின் என்னிக்கை 32% குறைந்துள்ளன. மேலும், இந்த மாற்றம் நாடு எதை முக்கியமானதாகக் கருதுகிறது என்று மக்களை யோசிக்க வைக்கிறது, குறிப்பாக முக்கியமான சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.


அதேசமயம், இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது இந்தியாவை "பலவீனமான ஐந்து" பொருளாதார  நாடுகளில் (fragile five economies) இருந்து உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் (top five economies) ஒன்றாக மாற விரும்புகிறது. நிதி அமைச்சகம் ஒரு வித்தியாசமான போக்கைக் காண்கிறது. இந்த அமைச்சகம், நாட்டின் நிதித் திட்டங்களுக்குப் பொறுப்பாகும். அது இப்போது நாடாளுமன்றத்தில் குறைந்த கவனத்தையே பெற்று வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்கவையில் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு நேர்மறையான அறிகுறி உள்ளது. மேலும் பல கேள்விகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நிதி விஷயங்களை மிகவும் வெளிப்படையானதாகவும் பொறுப்பானதாகவும் மாற்றுவதில் வளர்ந்து வரும் கவனத்தை இது அறிவுறுத்துகிறது.


கோவிட்-19 தொற்றுநோய் இந்தியாவின் கல்வி முறையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான கவனம் வலுவாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைய கேள்விகள் கேட்கப்படும் முதல் ஐந்து அமைச்சகங்களில் கல்வி அமைச்சகமும் ஒன்றாகும். நாடாளுமன்ற விவாதங்களில் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், அனுமதிக்கப்படாத கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த முக்கியமான பகுதியில் மேற்பார்வை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றிய கவலைகளை இது எழுப்புகிறது.


புள்ளிவிவரங்களை உன்னிப்பாகப் கவனித்தால் ஒரு போக்கு  வெளிப்படுகிறது. மக்களவையில், அடுத்தடுத்த அமர்வுகளில் அனுமதிக்கப்படாத கேள்விகளின் சதவீதம் குறைந்துள்ளது. 


ஆனால், மாநிலங்கவையில் நிலைமை வேறு. இங்கே, அனுமதிக்கப்படாத கேள்விகளின் என்னிக்கை அதிகரித்து வருகிறது. 17வது மக்களவையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் (Health and Family Welfare), உள்துறை (Home Affairs), பாதுகாப்பு (Defence), விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் (Agriculture and Farmers’ Welfare) மற்றும் நிதி (Finance) போன்ற அமைச்சகங்களுக்கு அனுமதிக்கப்படாத கேள்விகளின் என்னிக்கை மாநிலங்களவையில் 36.6% ஆகும். மக்களவையில் நிராகரிக்கப்பட்ட கேள்விகளில் என்னிக்கை 37.8% ஆக இருந்தது. இது பாராளுமன்ற மேற்பார்வையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது.


தலையீடுகளின் பயன்பாடு


இந்திய நாடாளுமன்றம் செயல்படும் விதம் மாறி வருகிறது. என்ன தலைப்புகள் கவனத்தை ஈர்க்கின்றன என்பது மட்டுமல்லாமல், சட்டமியற்றுபவர்கள் சிக்கல்களைத் தீர்க்க தங்கள் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். பூஜ்ஜிய நேர விவாதம் (Zero Hour) அதிகரித்து வருவது ஒரு முக்கிய போக்காக பார்க்கப்படுகிறது.


கடந்த 15 ஆண்டுகளில், மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர (Zero Hour) பயன்பாடு 62% அதிகரித்துள்ளது. மக்களவையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஒரு நல்ல அறிகுறியாகும். சட்டமியற்றுபவர்கள் அவசர பிரச்சினைகளைக் கையாள்வதிலும், அரசாங்கத்திடம் விளக்கங்களைக் கேட்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், 'அரை மணி நேர விவாதங்கள் (Half-an-Hour Discussions)', 'குறுகிய அறிவிப்பு கேள்விகள் (Short Notice Questions)', 'கவன ஈர்ப்பு தீர்மானம் (Calling Attention)', 'குறுகிய கால விவாதங்கள் (Short Duration Discussions)' மற்றும் 'சிறப்பு குறிப்புகள்' (Special Mentions) போன்ற பிற முறைகள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.


முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பூஜ்ஜிய நேரம் (Zero Hour) பிரபலமாக இருந்தாலும், அதற்கு அதன் வரம்புகள் உள்ளன. விவாதங்களை சிறப்பாக நடைபெறுவதற்கும், தீர்வுகளைக் கண்டறிவதற்கும், பிற முறைகளையும் பயன்படுத்துவது முக்கியம். இவற்றில் 'கவன ஈர்ப்பு தீர்மானம்' (Calling Attention), 'குறுகிய காலம்' (Short Duration) மற்றும் 'அரை மணி நேரம்' விவாதங்கள் (‘Half and Hour’ discussions)  ஆகியவை அடங்கும். இந்த முறைகள் அதிக உறுப்பினர்களை விவாதத்தில் ஈடுபட அனுமதிப்பதுடன் விவாதங்களின் தரத்தையும்  மேம்படுத்துகின்றன.


16வது மக்களவை மற்ற அமர்வுகளை விட அதிக சுறுசுறுப்பாக இருந்தது. அதிக எண்ணிக்கையிலான கேள்விகளை அனுமதிப்பதற்கும், சபைக்குள் பல்வேறு விவாதங்களில் ஈடுபடுவதிலும் அது தனித்து நின்றது.


சபையின் செயல்பாடுகள் பற்றிய விரிவான ஆய்வு, அடுத்த நடவடிக்கைக்கான வாய்ப்புகளைத் தவறவிட்டது. தவறாக வழிநடத்தும் அறிக்கைகளுக்கு எதிராக சிறப்புரிமைப் பிரச்சனைகளை முன்வைக்காதது போன்ற நிகழ்வுகள் மேலும் அரசாங்க பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களவையின் 2023 குளிர்காலக் கூட்டத் தொடரில் போட்டித் தேர்வுகளுடன் தொடர்புடைய மாணவர்களின் தற்கொலைகள் (student suicides linked to competitive exams) குறித்த முக்கியமான மசோதாவின் விவாதம் தவிர்க்கப்பட்டது. இப்பிரச்சினை தொடர்பான சட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க அவைத் தலைவர் தயாராக இருந்த போதிலும், மக்கள் பிரதிநிதிகள், அரை மணி நேரம் விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பினை நழுவவிட்டனர். சமூகப் பிரச்சினைகளை நாடாளுமன்ற வழிகளில் கையாள்வதற்கான வாய்ப்பை இது தவறவிட்டது.


கடந்த காலங்களில், வகுப்புவாத வன்முறை மசோதா 2014 (Communal Violence Bill in 2014) போன்ற சட்டங்களை வலுவான எதிர்க்கட்சிகளால் தடுக்க முடிந்தது. இப்போதைய நாடாளுமன்ற மாற்றங்கள் சட்டமியற்றும் அவையின் ஈடுபாட்டை (legislative engagement) மேம்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், விவாதங்களை ஊக்குவிக்கவும், தேசம் மற்றும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட சட்டங்களை உருவாக்கவும் ஒவ்வொரு வாய்ப்பும் பயன்படுத்தப்பட வேண்டும்.


பிரியங்க் நாக்பால் மற்றும் நேஹல் சர்மா ஆகியோர் 2023-2024 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமன்ற உதவியாளர்களாகப் (Legislative Assistant to Members of Parliament (LAMP)  பணியாற்றியவர்கள். 




Original article:

Share: