பணவீக்கத்தில் ஆரம்பகால வெற்றியை அறிவிப்பதில் ரிசர்வ் வங்கி ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது ? - தர்மகீர்த்தி ஜோஷி

 ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளும் சாதகமாகி வருவதால், கோடையின் இறுதிக்குள் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கலாம். 


ஏப்ரல் 5 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கப்பட்ட எதையும் மாற்றவில்லை. பொருளாதாரம் கணித்ததை விட சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் பணவீக்கம் விரும்பியதை விட அதிகமாக உள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யயது என்று நினைத்தார்கள். எதிர்பார்த்தப்படி, ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை .எனவே, இந்த அறிவிப்பு யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.


பிப்ரவரியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (gross domestic product (GDP)) இரண்டாவது மதிப்பீடு முதல் மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் 8% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது, நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை 7.6% ஆக உயர்த்தியது. இந்த வளர்ச்சியின்  வேகம் நான்காவது காலாண்டிலும் தொடர்ந்துள்ளது என்பதை சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மார்ச் மாதத்திற்கான கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (Purchasing Managers’ Index (PMI)) 61.8 ஆக இருந்தது. இது வலுவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது. குறிப்பாக மார்ச் மாதத்தில் வரி வசூலும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதி சேவை போன்ற துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், விவசாய வளர்ச்சி 2023-24 ஆம் ஆண்டில் 0.7% பலவீனமாக இருந்தது.


பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதைப் பார்த்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் பெரும்பகுதி முதலீடுகளிலிருந்து வருகிறது. சீரான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான தனியார் நுகர்வு வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மெதுவாக உள்ளது. இருப்பினும், தனிப்பட்ட நுகர்வின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.


இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8% ஆக குறையும் என்று இந்தியாவின் கடன் மதிப்பீட்டு தகவல் சேவைகள் லிமிடெட் (Credit Rating Information Services of India Limited (CRISIL)) நிறுவனம் கணித்துள்ளது. மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் ரிசர்வ் வங்கியின் விகித உயர்வுகளின் விளைவுகள் காட்டத் தொடங்கியுள்ளன மற்றும் 2024-25 இல் தேவையை சற்று குறைக்கலாம். பாதுகாப்பற்ற கடன்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளும் கடன் வளர்ச்சியை பாதிக்கும். மேலும், குறைந்த நிதிப் பற்றாக்குறை என்பது குறைந்த அரசாங்க செலவினங்கள் இருக்கும் என்பதாகும், இது வளர்ச்சியை பாதிக்கும்.


2024-25 ஆம் ஆண்டில் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கி அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது பணவீக்கத்தை மேலும் குறைப்பது சவாலானது என்று ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். நல்ல வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தபோதிலும், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கண்காணித்து, அதை 4% ஆகக் குறைக்க பாடுபடும் என்று அவர் கூறினார்.


2024-25 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான ரிசர்வ் வங்கியின் கணிப்பு 7% ஆக உள்ளது. இது இந்தியாவின் கடன் மதிப்பீட்டு தகவல் சேவைகள் லிமிடெட் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகும். சாதாரண பருவமழை மற்றும் நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணவீக்கம் 4.5% ஆக குறையும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.


எல் நினோவின் (EL-NINO) தாக்கம் ஆண்டின் இரண்டாம் பாதியில் குறையும் என்றும், லா நினா (La-nina) நிலைமைகள் ஏராளமான மழையைக் கொண்டுவரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் நம்புகிறது. இது கவலைக்குரிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும். ஆண்டின் முதல் 11 மாதங்களில் உணவுப் பணவீக்கம் 7.4% ஆக உயர்ந்த அளவிலும், உணவல்லாத பணவீக்கம் 4.1% ஆகவும் இருந்தது.


பிப்ரவரியில், உணவு பணவீக்கம் 8.7% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 2.9% ஆகவும் இருந்தது. உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த முக்கிய பணவீக்கம் 3.4% ஆக குறைவாக இருந்தது. உணவு தானிய பணவீக்கம் சற்று குறைந்தது, ஆனால் காய்கறி விலை அதிகமாக இருந்தது. ஜனவரியில், 27.1% ஆக இருந்தது பிப்ரவரியில் 30.2% ஆக உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி பொதுவாக காய்கறி பணவீக்கத்தை (vegetable inflation) புறக்கணிக்கிறது. ஏனெனில், அவை பங்கு சந்தைகளை போல ஏற்ற இறக்கங்களை (volatility) கொண்டுள்ளன. ஆனால், இந்த முறை காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு தானிய பணவீக்கம் குறைவாக இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் 9.8 சதவீதமாக இருந்தது. மத்திய வங்கியின் கொள்கைகளால் உணவு பணவீக்கத்தை ஏற்படுத்தும் விநியோக குறைக்க முடியாது. இந்தியாவைப் போலவே வளர்ச்சி அதிகமாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயரும் போது, இது மிகவும் முக்கியமானதாக  பார்க்கப்படுகிறது. 


உணவு பொருள்களின் விலை உயர்வு பணக்காரர்களை விட ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. பிப்ரவரியில், நகர்ப்புற குறைந்த வருமானத்தை கொண்ட மக்கள் 5.5% பணவீக்கத்தை எதிர்கொண்டன. இது செல்வந்தர்களுக்கு 4.7% ஆக இருந்தது. ஏனெனில் அவர்களின் செலவினங்களில் உணவு ஒரு பெரிய பகுதியை உருவாக்குகிறது. கிராமப்புறங்களில் நிலைமை இப்படித்தான் இருந்தது. 2024-25ல் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிக உணவு விலைகள் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வீட்டுச் செலவுகளைக் குறைக்கின்றன. அரசாங்க உணவுத் திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவுகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக குறைந்த உணவு விலைகள் மேலும் உதவும். சாதாரண பருவமழை மற்றும் சிறந்த விவசாயம் ஆகியவை உணவு விலைகளைக் குறைக்க உதவும். இந்த ஆண்டு கிராமப்புற செலவினங்களை அதிகரிக்க வேண்டும். 

    

 2024-25 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் (Barrel) ஒன்றுக்கு $80-85 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எரிபொருள் விலை அதிகமாக உயரும்  என்று  யாரும் எதிர்பார்க்வில்லை.  ஆனால், சமீபத்திய கச்சா விலை உயர்வு மற்றும் நிச்சயமற்ற புவிசார் அரசியல், சில கவலைகளை ஏற்படுத்திகிறது.


பெடரல் ரிசர்வ் (Federal Reserve) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வங்கி (European Central Bank) ஆகியவை வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை. ஏனெனில் விகிதங்கள் இன்னும் அதிகமாக உள்ளன. இருப்பினும், தற்பொழுது  அவை  குறையத்  தொடங்கியுள்ளன. மார்ச் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி விரைவில் விகிதங்களைக் குறைக்கலாம் என்று பரிந்துரைத்தது. S&P Global இன் கூற்றுப்படி, பணவீக்கம் 2024 வரை ஒன்றிய வங்கியின் இலக்கான 2 சதவீதத்திற்கு மேல் இருக்கும். முக்கியமாக அதிக சேவை விலை பணவீக்கம் (higher service price inflation) காரணமாக, பொருட்களின் விலைகள் சிறிது குறைந்தாலும் கூட ஒன்றிய வங்கி மற்றும் வெளி வணிக கடன்கள் (External Commercial Borrowings (ECB)) ஜூன் மாதத்தில் விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் என்று  எதிர்பார்க்கிறாரகள்.




Original article:

Share: