இந்திய இளைஞர்கள் ஏன் வாக்களிப்பதில்லை? -அமீதா முல்லா வட்டல்

 பல இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இளைஞர்களை மையமாகக் கொண்ட போதிய செயல்திட்டங்கள் இல்லை என்பதும் ஒரு காரணம். யாருக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுத்தரும்  கல்வி முறையும் இல்லை. 


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், நாடு முழுவதும் 2024 தேர்தலுக்கு 18 முதல் 19 வயதுக்குட்பட்ட தகுதியான வாக்காளர்களில் 40% க்கும் குறைவானவர்களே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  


இளம் வாக்காளர்கள் வாக்களிக்க தயங்குவது ஏன்? மிகக் குறைந்த சேர்க்கை விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் டெல்லி, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகும். இந்த மாநிலங்களில் கணிசமான அளவு  இளைஞர்கள் உள்ளனர். என் இந்த இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம்  காட்டவில்லை?


அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்கள் கொள்கைகளை பற்றி பேசுவதில்லை என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். அரசியலில் தற்போது சென்று கொண்டு இருக்கும் விதம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. அரசியல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாம் எப்போதும் புரிந்து கொள்ள அவர்களுக்கு வழிகாட்டி எதுவும் இல்லை. 


பள்ளியில், பழைய மாணவர்கள் கூட ஆழமாக சிந்திப்பது அல்லது அவர்களின் தேர்வுகள் விஷயங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது பற்றி அதிகம் கற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக, அவர்கள் முதல் முறையாக வாக்களிக்கும்போது அவர்களின் முடிவுகளுக்கு அர்த்தம் கொடுக்கும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளைப் பற்றி அவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. விஷயங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் தங்களுக்கு வெளியே உள்ள வெவ்வேறு செயல்முறைகள் மற்றும் இணைப்புகளைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில், ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர். ஒரு இளைஞனின் வாக்கு மற்றும் குரல் முக்கியம். அவர்கள் வாக்களிக்கும்போது, அவர்களின் விரலில் உள்ள குறி அவர்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது. 

 

இளைஞர்கள் வாக்களிக்கும்போது, அவர்கள் தங்களை விட பெரிய ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.


வாக்களிப்பதற்கு முன், அவர்கள் உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும். 


வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்களிக்கவில்லை என்றால், ஜனநாயகம் சரியாக இயங்காது. எல்லோரும் வாக்களித்தால் தான்  நல்ல ஆட்சி நடக்கும். 


அரசியல்வாதிகள் பொதுவாக வயதான வாக்காளர்களில் கவனம் செலுத்துகிறார்கள். பள்ளியை விட்டு வெளியேறிய இளைஞர்களை மறந்துவிடுகிறார்கள். கட்டணம் குறைந்த உயர்க்கல்வி, நல்ல வேலைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற இளைஞர்களுக்கு முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. இதனால் பல இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

 

மக்கள் பெரும்பாலும் தற்போதைய தலைமுறையை,  அக்கறையற்றவர்கள், மற்றும் சோம்பேறிகள் என்று ஒரே மாதிரியாகக் கருதுகின்றனர். ஆனால் ஒரு கல்வியாளராக எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் உண்மையில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை நான் கண்டேன். அவர்கள் சமூக நடவடிக்கைகளில் ஆர்வமாக உள்ளனர் மற்றும் முந்தைய தலைமுறையை விட தன்னார்வத் தொண்டு அதிகமாக செய்கிறார்கள். இளைஞர்களின் போராட்டங்கள், இயக்கங்கள் மற்றும் அழுத்தக் குழுக்களின் எழுச்சியை காண்கிறோம்.  இந்த தலைமுறை தொற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொண்டது. அவை அவர்களின் வாழ்க்கையை வடிவமைத்தன. 



ஜெனரேஷன் Z (Gen Z)  என்றால் என்ன?


ஜெனரேஷன் இசட் (பெரும்பாலும் Gen Z என்று சுருக்கப்பட்டது). இது ஜூமர்ஸ் (Zoomers) என்று பேச்சுவழக்கில் அறியப்படுகிறது. இது 1990 களின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை மற்றும் 2010 களின் முற்பகுதியில் பிறந்தவர்களைக் குறிக்கிறது.


இளைஞர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மற்றும் தகவல்களுக்கு அதை நம்பியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அரசியல் மீம்கள் அவர்களின் தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், அவர்கள் பெரும்பாலும் இணைய வழி  பிரச்சாரங்களில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு தொழில்நுட்பம் மிகவும் வசதியாக இருப்பதால், வாக்களிப்பது இணைய வழியில் இல்லாதது விசித்திரமானது. இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் போது வாக்களிக்க வரிசையில் காத்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறனது அவர்களில் 90% க்கும் அதிகமானோர் வாரத்திற்கு ஐந்து முறையாவது இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணைய வழியில் வாக்களிப்பது என்றால், அதிகமான இளைஞர்கள் வாக்களிப்பார்கள். இணைய வங்கி பாதுகாப்பானதாக இருந்தால், இணைய வழியில் வாக்களிக்கும் வசதியை அறிமுகப்படுத்தலாம். 

 

மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இளைஞர்கள் போராடுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், பல அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு போதிய வாய்ப்பளிக்கவில்லை. மேலும், பள்ளிகள் ஏன் வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று  கற்றுக்கொடுப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் இருந்து அரசியல் நடத்தை பற்றி அதிகம் கற்றுக்கொள்வதில்லை.


இன்றைய இளைஞர்கள் புதிய யோசனைகளைக் கொண்டுள்ளனர். முன்பை விட இப்போது  அதிக ஆர்வத்துடன் உள்ளனர். தொழில்நுட்பம் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை குறைக்கிறது. அவர்கள் வேலை செய்வதில் ஆர்வமாக உள்ளனர். முற்போக்கான பள்ளிகளில், விவாதங்களில், மாணவர்கள் தங்களுக்காக, சுற்றுச்சூழல், ஓரங்கட்டப்பட்ட குழுக்கள், LGBTQIA+ உரிமைகள், சிறுபான்மை நீதி மற்றும் கல்வி அணுகல் பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரும் தங்கள் குரலால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அவர்கள் பொறுப்பாகவும், உணர்ச்சியுடனும், அதைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.  


இன்றைய இளம் வாக்காளர்களுக்கு: முந்தைய தலைமுறையை விட உங்கள் குரலை சத்தமாக கேட்க வைக்க உங்களிடம் கருவிகள் இருப்பதால் தயவுசெய்து வாக்களியுங்கள். 


கட்டுரையாளர்  DLF பள்ளிகள் மற்றும் உதவித்தொகை திட்டங்களின் (DLF Schools and Scholarship Programmes) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.




Original article:

Share: