குழப்பமான உலகம், எதிர்காலத்தைப் பற்றிய கவலை - எம்.கே.நாராயணன்

 பல காரணிகள் இன்று உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. போதிய  செல்வாக்கு மிக்க தலைவர்களின் இல்லாமை, புதிய  கூட்டணிகளை உருவாக்கும் தலைவர்கள் இல்லாமை, பொருளாதார சவால்கள் மற்றும் தற்போதைய தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றமும் இந்த நிலைக்கு காரணமாகும்.

 

உலகளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்கள் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற தலைவர்கள் தற்போதைய போருக்கு முக்கிய காரணமாக உள்ளனர். இந்த போர்களை முடிவுக்குக் கொண்டு வர  அவர்களுக்கு விருப்பமில்லை. ரஷ்யாவின்  அதிபர் விளாடிமிர் புடினும் உக்ரைன் போரின் முடிவைப் பற்றி கவலைப்படவில்லை. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பை  (North Atlantic Treaty Organization (NATO)) வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ரஷ்யாவை  தோற்கடித்து, 1945க்குப் பிறகு ஐரோப்பாவின் உலக ஒழுங்கை மீண்டும் கொண்டுவர உதவும் என்று அமெரிக்கா நம்புகிறது. இருப்பினும், அமெரிக்கா இப்போது  இக்கட்டான நிலையில் உள்ளது.   


அக்டோபர் 2023 இல், ஹமாஸின் திடீர் தாக்குதல் திரு நெதன்யாகுவை அதிர்ச்சியடைய செய்தது. அவரும் அதற்கு பதிலடி கொடுத்தார். காசாவில்  உள்ள குடிமக்கள் மீது அவர் தனது விரக்தியை வெளிப்படுத்துவதாக  மக்கள் நினைத்தனர். அவரது நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் என்று மக்கள் பலர் அச்சமடைந்தனர். குறிப்பாக இந்த செய்தி, மேற்கு ஆசியாவில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது  அரசியல் மற்றும் மத மோதல்களை ஏற்படுத்தும். இந்த பிராந்தியத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஈரான் முக்கிய இடத்திற்கு முன்னேறியுள்ளது.


பெருகும் குழப்பம்,  தலைமை இல்லாமை


2022 முதல், உலக அரசியலில்  பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. முக்கியமாக, மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட  விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு (‘rules-based international order’) அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இப்போது இல்லாமல் போய்விட்டது. மேற்கு நாடுகள் வலுவிழந்து பின், சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.   உலகளவில் புதிய கூட்டணிகள் உருவாகின. ஆனால் அவை எதுவும் உலக அமைதியை நிலைநாட்டும் அளவுக்கு வலுவாக இல்லை. 


இன்று உலகின் பல பகுதியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன், காஸா போன்ற இடங்களில் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஜி ஜின்பிங், விளாடிமிர் புடின் அல்லது ஜோ பிடன் போன்றவர்களை  தவிர பிற நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் தலைவர்கள் உலகளவில்  இல்லை. உலக அளவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கத்திய நாடுகளில் உள்ள மற்ற  தலைவர்கள் முன்வரவில்லை. அவர்கள் தங்கள் சொந்த பகுதிகளை  கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க  கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அடிப்படையில், காலம் முன்னேறி, புதிய தொழில்நுட்பங்கள் முன்னேறும்போது, பல பழைய விஷயங்கள் கடந்த காலத்தில் மறந்து விடப்படும் அபாயம் உள்ளது.  


ஜெலன்ஸ்கி, புதின் மற்றும் மேற்கத்திய நாடுகள் சமரசம் செய்ய தயாராக இல்லாததால் உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டிலும் இதே நிலைமை தொடரும்.  இந்த காரணிகள், போர்க்களத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது  'யூகிக்க முடியாத'  (‘unthinkable’) நிலைக்கு இட்டுச் செல்லும் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.


மத்திய கிழக்கில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் பதட்டங்களை அதிகரித்து வருகின்றன. அவர்கள் ஈரானிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். தங்கள் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான  தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதில் ஈரான் முன்னணியில்  உள்ளது. ஈரான்-இஸ்ரேலுக்கு  இடையையே  நடந்து கொண்டு இருக்கும்  போர் பேரழிவை ஏற்படுத்தும்.


புதிய கூட்டணிகள்


இன்று, பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டி, உண்மையான தாக்கம் இல்லாத ஒரு நிழல் நாடகம் போல் முக்கியமற்றதாகத் தெரிகிறது. போரால் சீரழிந்துள்ள உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு அப்பால், அமெரிக்காவும் சீனாவும் தங்கள் இலக்குகளை அடைய பினாமிகளைப் பயன்படுத்தி மறைமுகமாக நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. 2020 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு அமெரிக்கா தனது நடவடிக்கைகளை இன்னும் கவனமாக  கையாண்டு வருகிறது. இந்த பின்னடைவுகள் வல்லரசு என்ற அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளன. ஐரோப்பாவில், ரஷ்யாவுக்கு எதிரான பாதுகாப்பிற்கு NATOவைச் சார்ந்திருந்தாலும், அது வேறெதையும் வழங்குவதில்லை. அதிக செலவுகள் இருந்தபோதிலும், ஐரோப்பா திரு ஜெலென்ஸ்கி மீது குறைந்தளவு  நம்பிகையைக் கொண்டுள்ளது.


கிழக்கில், சீனாவின் பொருளாதார சிக்கல்கள் அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும் இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சவால் செய்யும் திறன் கொண்ட ஒரு வளர்ந்து வரும் வல்லரசு என்ற அதன் அந்தஸ்தைக் குறைத்துள்ளன. சமீப  காலமாக,  சீனா தனது நடவடிக்கைகளில் மிகவும் விவேகமாக உள்ளது மற்றும் வல்லரசு என்ற அதன் பிம்பம்  குறைந்துள்ளது. இருப்பினும், இது மேற்கு ஆசியாவில் புதிய கூட்டணிகளை உருவாக்குவதில் இருந்து சீனாவை நிறுத்தவில்லை. தற்போது, சீனா-ரஷ்யா-ஈரான் குழு மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 


எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அறிவது புத்திசாலித்தனம் (‘wisdom lies in knowing when to stop’) என்று ஒரு பிரபலமான பழமொழி கூறுகிறது. உலகளாவிய அதிகார அரசியல் இப்போது குழப்பமானதாகத் தெரிகிறது. புதிய கூட்டணிகள் திடீரென்று உருவாகின்றன.  இன்று, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உலகளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல தலைவர்கள், குறிப்பாக வளர்ந்த நாடுகளில், எதிர்காலப் பொருளாதாரங்களைப் பற்றிய கணிப்புகளில் போதுமான கவனம் செலுத்துவதில்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்கப் பொருளாதாரம் விரைவில் சிக்கல்களைச் சந்திக்கும் என்றும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரங்கள் ஏற்கனவே போராடி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜி ஜின்பிங்கின் முயற்சிகள் இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம் சிறப்பாக இல்லை. அதன் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.  


சீர்குலைக்கும் கூறுகள் 


எண்ணெய் அரசியலை உலகம் நீண்ட காலத்திற்கு புறக்கணிக்க முடியாது. சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் நெருங்கி வருவதால், எண்ணெய் அரசியல் விரைவில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


இதைக் கருத்தில் கொண்டு, இன்றைய பொருளாதாரத் தடைகள் இனி அர்த்தமற்றவை. ஒரு பெரிய மந்தநிலைக்கு உலகம் தயாராக வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது உக்ரைன் மற்றும் காஸாவில் தற்போதைய மோதல்கள் அல்லது சாத்தியமான பசிபிக் போர்களை விட அதிக இடையூறு விளைவிக்கும்.


மேலும், தொழில்நுட்பம் மிகப்பெரிய சீர்குலைவை ஏற்படுத்தும். பல நாடுகள் தங்கள் தேசிய பாதுகாப்பை மேம்படுத்த முக்கியமான தொழில்நுட்பங்களை பாதுகாக்க முயற்சிக்கின்றன. இப்போது, இந்த தொழில்நுட்பங்கள் மீது அவர்கள் கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) ஏற்கனவே பாரம்பரிய போர் முறைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்காவும் சீனாவும் இராணுவ ரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததாகக் காணப்பட்டாலும், சிறிய நாடுகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முரண்பாடுகளுக்கு கூட சவால் விடத் தொடங்கியுள்ளன. இராணுவ உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு (intelligence, surveillance and reconnaissance (ISR)) முன்னேற்றங்கள் மற்றும் ட்ரோன்கள், விமானம் மற்றும் விண்வெளி சொத்துக்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு காரணமாக உக்ரைனில் போர்க்களத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் இந்த அம்சத்தை பொருத்தி பார்க்க வேண்டும்.


ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் வேகமாக  முறிந்து கொண்டிருக்கின்றன. புதிய அணு ஆயுதங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராகி கொண்டு இருக்கிறது. ஒரு அணுசக்தி மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது.  அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள் விரைவில் அவற்றைப் பயன்படுத்த அனுமதி கோரலாம். ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டுமா என்ற விவாதம் நடந்து வருகிறது. அழிவு நாள் (Doomsday) நாம் நினைப்பதை விட வேகமாக நெருங்கி கொண்டு இருக்கிறது. 


எம்.கே.நாராயணன் உளவுத்துறை முன்னாள் இயக்குநர் (former Director, Intelligence Bureau), முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்..




Original article:

Share: