பின்னோக்கிப் பார்த்தால், வேலைநிறுத்தத்திற்கான எதிர்வினை என்பது அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது.
வேலை நிறுத்தம்
2024-ஆம் ஆண்டு இரயில்வே தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வரலாற்றில் நினைவுச் சின்னமாகும். பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது. புவியியல் பரவல் மற்றும் பொதுமக்களின் ஈடுபாட்டில் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இரயில்வே தொழிலாளர்கள் கடினமான பணிச்சூழல், ஊதியம் மற்றும் சலுகைகளைக் குறைத்தல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எண்ணெய் விலை உயர்வு, மூன்றாவது ஊதியக் குழுவின் சிறிய ஊதிய உயர்வால் மோசமாகி, ரயில்வே தொழிலாளர்கள் மே 8 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியபோது எதிர்பாராத விதமாக வேலைநிறுத்தம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மே 1 அன்று லக்னோவில் அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes) கைது செய்யப்பட்டார். விக்டோரியா டெர்மினஸின் (Victoria Terminus) நிலைய அலுவலர்கள் (Station Masters) மே 2 அதிகாலையில் அதன் வாயில்களை மூடினர். இந்த நடவடிக்கை ஆளும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தது மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரம் வழங்குவதை உறுதி செய்தது.
வாழ்க்கையை நிலைகுலையச் செய்தல்
ஆரம்பத்தில் போதிய ஆதரவு இல்லாத போதிலும், வேலைநிறுத்தம் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்தது. ரயில்வே அமைப்பின் செயல்பாடுகளை நிறுத்தியது. இந்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து தடையானது. ஒவ்வொரு முக்கிய ரயில் நிலையமும் மூடப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் பெருநகர இரயில் நிலையங்கள் அனைத்தையும் கடுமையாகப் பாதித்தது. நீண்டதூர பயணிகள் இரயில்கள் மற்றும் புறநகர் சேவைகளை பாதிப்படையச் செய்தது. பம்பாயில் இதற்கு ஆதரவு தெரிவித்து நடந்த பொது வேலைநிறுத்தம் நகரை நிலைகுலைய வைத்தது. ஜமால்பூர், பெரம்பூர், முகல்சராய் மற்றும் கரக்பூர் போன்ற ரயில்வே நகரங்கள் வேலைநிறுத்தத்தின் முக்கிய களமாக மாறின.
ரயில்வே வாரியம் மற்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும், ரயில்வே அமைப்பு மூன்று வாரங்களுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது. ரயில்வே தொழிலாளர்களின் குடும்பங்கள், குறிப்பாக பெண்கள், முக்கிய பங்கு வகித்தனர். டெல்லியில், வேலை நிறுத்தத்தை உடைக்க முனைந்தவர்களின் முகங்களில் குங்குமம் பூசி, வளையல்களை அணியுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் காவல்நிலையங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்தனர். இரயில் சேவைகளைத் தடுக்க தண்டவாளங்களை மறித்தனர்.
அரசின் பதில்
ரயில்வே தொழிலாளர்களின் உறுதியான நிலைபாடு அரசாங்கத்திடமிருந்து முன்னெப்போதும் இல்லாத வன்முறையை எதிர்கொண்டது. இந்தியப் பாதுகாப்பு விதிகளின்கீழ் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. இரயில் சேவைகளை பராமரிக்கவும், தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்யவும் மற்றும் தொழிலாளர்களை அச்சுறுத்தவும் அரசாங்கம் காவல் மற்றும் துணை இராணுவப் படைகளை அணிதிரட்டியது. பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் பயணிகள் மற்றும் நிலையங்களில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை விட அதிகமாக இருந்தன.
வேலை நிறுத்தத்தின் போது 50,000 ரயில்வே தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். முதல் 24மணி நேரத்திற்குள், 10,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டன. முகல்சராய், ஜமால்பூர், ஜான்சி போன்ற இடங்கள் கொடூரமான அடக்குமுறையின் மையங்களாயின. காவலர்கள் மற்றும் துணை இராணுவப் படைகள் அடிக்கடி வீடுகளைச் சோதனையிட்டு, வெளியேற்றுவதாக அச்சுறுத்தியதுடன், தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தி துன்புறுத்தின. இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இது 1975 அவசரநிலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், வேலைநிறுத்தக்காரர்கள் அரசு அடக்குமுறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக போராட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மே 27அன்று பொது வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
அவசரநிலைக்கான முன் ஒத்திகை
பின்னோக்கிப் பார்த்தால், வேலைநிறுத்தத்திற்கான எதிர்வினை அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசரநிலைக்கான ஒத்திகையாக பார்க்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் இரயில்வே தொழிலாளர்கள் அவர்களின் இருபது ஆண்டுகளாக தங்கள் துன்பங்களை தீர்ப்பதற்கான முயற்சியில் இருந்து வளர்ந்தது. இவற்றை அரசு மற்றும் குறை தீர்க்கும் அமைப்புகள் புறக்கணித்தன. இந்த பொது வேலைநிறுத்தம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனென்றால், அது அரசாங்கத்தின் ஆளும் திறனை சவால் செய்தது மட்டுமல்ல, இது பிளவுபட்ட இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் சாமானிய மக்களின் போர்க்குணத்தையும் ஒற்றுமையையும் அவர்களிடையே ஏற்படுத்தியது.
பொது வேலைநிறுத்தத்திற்கான உந்துதல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் இருந்து அல்ல, சுயமாக இயங்கும் தொழிற்சங்கங்களில் இருந்து வந்தது. வேலைநிறுத்தத்தின் ஒரு நீடித்த மரபு என்னவென்றால், குறைகளைத் தீர்ப்பதற்காக தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர். இது தொழிற்சங்கத்தை போராட்டக் களமாக மட்டுமல்லாமல் போராட்டக் கருவியாகவும் மாற்றியது.
வேலை நிறுத்தம் நிபந்தனையின்றி திரும்பப் பெறப்பட்டாலும், அது முழுமையான தோல்வி அல்ல. ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தவுடன், வேலை நிறுத்தத்தின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். இரயில்வே தொழிலாளர்களின் சலுகைகளுக்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
இன்று, ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது, ரயில்வேயை தனியார் மயமாக்கியது, வேலை தனியாரின் பங்களிப்பை அதிகரித்தது மற்றும் ஏழாவது ஊதியக் குழுவின் (Seventh Pay Commission) பாதகமான பரிந்துரைகள் காரணமாக ரயில்வே தொழிலாளர்கள் இதேபோன்ற ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றனர். இந்தத் தாக்குதல்களை எதிர்க்க பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. தொழிலாளர் மீதான இந்த புதிய தாக்குதல்களின் பின்னணியில், 1974-ஆம் ஆண்டு வேலைநிறுத்தம் ஒரு போராட்டமாகவே பொருத்தமானதாக உள்ளது.