தெளிவாக அரசியலமைப்பிற்கு முரணான அல்லது பிளவுபடுத்தும் சட்டங்களுக்கு நீதித்துறை மறுஆய்வு (judicial review) செயல்முறை வலுவானதாகவும், உடனடியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (Citizenship (Amendment) Act (CAA)) மற்றும் அதன் விதிகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் விரைவில் மறுபரிசீலிக்கும். ஒருவரின் குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதில் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது மக்களைப் பற்றி மேலும் கவலையடையச் செய்கிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் தடுப்பு மையங்களுக்கு (detention centers) அனுப்பப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். சில மனுதாரர்கள் தங்கள் உண்மையான குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். இது குடியுரிமை விஷயங்களில் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்குகிறது. ஏனெனில், இது தாய்ச் சட்டத்திற்கு (parent Act) எதிரானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு சட்டம் அல்லது சட்டரீதியான விதிகளின் தொகுப்பைத் தடுப்பது அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு வழக்கமான நடைமுறை அல்ல. பொதுவாக, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டம் அரசியலமைப்பு விதிகளைத் தெளிவாக மீறியதாகக் காட்டப்படாவிட்டால் அது செல்லுபடியாகும் என்று கருதப்படுகிறது. சட்டம் பொதுவாக தீங்கிழைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை என்று கருதுகிறது. உதாரணமாக, மனிஷ் குமார் vs யூனியன் ஆஃப் இந்தியா-2021 (Manish Kumar vs Union Of India) உச்ச நீதிமன்ற வழக்கு, குருதேவ்தத்தா Vksss Maryadit மற்றும் Ors இல். vs ஸ்டேட் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஓர்ஸ்-2001 (Gurudevdatta Vksss Maryadit and Ors. vs State Of Maharashtra and Ors), போன்ற வழக்கு ”சட்டமன்றத் தீங்கு என்பது சட்ட நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது" என்று கூறியது.
தடை இல்லாதது
இந்த மரபார்ந்த ஞானம் உலகெங்கிலும் உள்ள மக்களாட்சிகளால் முன்வைக்கப்படும் சமகால சவால்களை எதிர்கொள்ள இயலாது. இந்த ஆட்சிகள் பெரும்பாலும் உந்துதல் அல்லது இலக்குக்கான சட்டத்தை உருவாக்குகின்றன. அவர்கள் தேர்தல் முறையை அல்லது செயல்முறையை சட்டமன்ற வழிமுறைகள் மூலம் கையாளுகிறார்கள். இந்த போக்கு ஒரு மேம்பட்ட மற்றும் உறுதியான நீதித்துறை அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறது. அத்தகைய சட்டங்களின் செயல்பாட்டைத் தடுக்க மறுப்பது, சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வழக்கற்றுப் போன நடத்தையை கடைப்பிடிப்பதன் மூலம், முக்கியமான காலங்களில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் ஆற்றவேண்டிய எதிர்ப்பானது முக்கியமான வேலையை பலவீனப்படுத்தும்.
ஒவ்வொரு சட்டமும் ஒரு அரசியல் அறிக்கைதான். மக்களாட்சி அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத ஒரு ஆட்சி அரசியலமைப்பைச் சிறிதும் மதிக்காமல் சட்டங்களை இயற்றும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சட்டங்களின் 'செல்லுபடி நிலை' (validity) மீதான உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கை அவற்றின் செயல்பாட்டை நிறுத்துவதைத் தடுத்துள்ளது. பணமதிப்பிழப்பு (demonetisation) நடவடிக்கைக்கு எதிராகத் தடை உத்தரவு இல்லாதது ஒரு துயர சம்பவத்தை அனுமதித்துள்ளது. விவேக் நாராயண் சர்மா vs யூனியன் ஆஃப் இந்தியா-2023 (Vivek Narayan Sharma vs Union of India) வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில், நிலைமை மாற்ற முடியாததாக இருந்தது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பலவீனமடைவதை நிறுத்தாதது, 2023-ல் இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவின் தீர்ப்பில் காணப்பட்டதைப் போல, நடைமுறையில் சட்ட செயல்முறையை தவிர்க்க முடியாததாக ஆக்கியுள்ளது.
அனூப் பரன்வால் vs யூனியன் ஆஃப் இந்தியா-2023 (Anoop Baranwal vs Union of India) என்பது அரசியலமைப்பு அமர்வின் ஒரு தீவிரமான தீர்ப்பாகும். தற்போதைய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்காமல், இந்திய தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும் என்றனர். ஆனால், ஒன்றிய அரசு சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ஐ (Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை "பிரதமர் குழுவிடம்" மீண்டும் கொண்டு வந்தது. இந்தக் குழுவில் பிரதமர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளனர். இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் நியமனங்கள் செய்யப்பட்டன.
இந்த சட்டத்தை எதிர்த்து, ஜெயா தாகூர் vs இந்திய அரசு-2024 (Jaya Thakur vs Union of India) வழக்கு தொடரப்பட்டது. எவ்வாறாயினும், அதன் செல்லுபடியாகும் "அனுமானத்தின்" (presumption) அடிப்படையில் சட்டத்தின் செயல்பாட்டையும் செயல்படுத்தலையும் நிறுத்த நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட சட்டம் அல்ல, ஆனால் அதன் தோற்றத்தில், இது அரசியலமைப்பிற்கு முரணானது. ஏனெனில், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் ஒரு அடிப்படை அம்சமாக உள்ள ஜனநாயகத்தின் அடித்தளத்தையே இந்த சட்டம் அச்சுறுத்துகிறது. செல்லுபடியாகும் என்ற அனுமானத்தின் மீதான நம்பிக்கை காரணமாக நீதிமன்றம் தனது தீர்ப்பைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்பதை இந்த வழக்கு காட்டுகிறது. 2024 பொதுத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளும், அதன் செயலின்மையும் கேள்விக்குரியதாக இருந்ததில் ஆச்சரியமில்லை.
இது ஒரு குறிப்பிட்ட சட்டத்தைப் பற்றிய வழக்கு
குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship (Amendment) Act (CAA)) மற்றும் அதன் விதிகள் தெளிவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சட்டத்திற்குள் வருகின்றன. சட்டம் தெளிவான சட்டமியற்றும் தீமையைக் காட்டுகிறது. இந்தச் சட்டம் மக்களை மதத்தால் வகைப்படுத்துகிறது மற்றும் குடியுரிமை செயல்முறையிலிருந்து முஸ்லிம்களை விலக்குகிறது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சட்டத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019 (Muslim Women (Protection of Rights on Marriage) Act), இது உடனடி முத்தலாக்கை குற்றமாக்கியது. குறிப்பிடத்தக்க வகையில், உடனடி முத்தலாக் சட்டமானது ஷயாரா பானோ 2017-ல் உச்ச நீதிமன்றத்தால் இவரின் வழக்கு செல்லாததாக்கப்பட்டது. எனவே, சட்டத்தின் பார்வையில் இல்லாத ஒரு செயலை ‘குற்றம்’ (criminalise) செய்ய எந்த சட்டத் தேவையும் இல்லை. தண்டனைகளைத் தவிர்ப்பதற்காக தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்ய அல்லது கைவிடுவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க 'புத்திசாலித்தனமான' (clever) கணவர்களை மட்டுமே சட்டம் ஊக்குவித்தது. இவ்வாறு, முஸ்லீம் சமூகத்தை இலக்காகக் கொண்ட இந்த சட்டம், முஸ்லீம் பெண்களுக்கு உதவவில்லை. பெரும்பாலும் அதற்கு நேர்மாறாக இருந்தது. இந்த சட்டம் அதன் மக்களை பிளவுபடுத்தும் செயல் திட்டம் மூலம் 'வெற்றி' பெற்றது. நாட்டில் சில மாநிலங்களில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களும் பின்பற்றப்பட்டன.
அமெரிக்காவில் ஒரு உதாரணம்
அமெரிக்காவில், வழக்கமான பார்வையில் தவறான நோக்கங்களின் அடிப்படையில் சட்டங்களை நீதித்துறையானது செல்லுபடியற்றதாக்குவதை ஆதரிக்கவில்லை. ஜான் ஹார்ட் எலி அரசியலமைப்பை "அரசியல் சாசன உறுப்பினர்களின் தவறான எண்ணங்களைத் தண்டிக்கும் கருவியாக" பயன்படுத்த முடியாது என்று கூறினார். ஆனால், சட்டமன்ற அமைப்புகளில் பெரும்பான்மையினரின் தவறான எண்ணங்கள் கடுமையான சமகாலத்தில் நடந்த சூழ்நிலையின் யதார்த்தமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, உள்நோக்கம் கொண்ட சட்டங்களுக்கு இன்னும் கடுமையான நீதித்துறை ஆய்வு தேவை. அறிஞர் சூசன்னா டபிள்யூ போல்வோக்ட் எழுதுகிறார், "சமமான பாதுகாப்பு பகுப்பாய்வுக்கான நியாயமான அரசு நேர்மைக்கான விரோதத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது." யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் vs மொரேனோ (United States Dept. of Agriculture vs Moreno), 413 US 528, 1973-ஐக் குறிப்பிடுகையில், கூட்டு குடியிருப்பு உரிமைகளிலிருந்து "ஹிப்பிகளை" (hippies) விலக்குவது ஒரு குழுவிற்கு "தீங்கு விளைவிக்கும் விருப்பத்தை" காட்டுகிறது மற்றும் பாகுபாட்டைப் பிரதிபலிக்கிறது என்று Unconstitutional Animus, Fordham Law Review, 2012 காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுதலை உச்ச நீதிமன்றம் நிறுத்திய முன்னுதாரணங்கள் உள்ளன. அசோக் குமார் தாக்கூர் எதிர். இந்திய ஒன்றியம்-2007 (Ashoka Kumar Thakur vs Union of India) வழக்கில், தொழில்முறை கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Community (OBC)) விண்ணப்பதாரர்களுக்கு 27% இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் முதலில் நீதிமன்றத் தடையுத்தரவை பிறப்பித்தது. ராகேஷ் வைஷ்ணவ் எதிர். யூனியன் ஆஃப் இந்தியா-2021 (Rakesh Vaishnav vs Union of India) வழக்கில் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களின் வழக்கில் நீதிமன்றத்தின் தடை உத்தரவு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும். இதில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நீதிமன்றம் தடுத்தது. ஆனால், இறுதியில் விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பிறகு ஒன்றிய அரசு அதை திரும்பப் பெற்றது.
தெளிவாக அரசியலமைப்பிற்கு முரணான அல்லது பிளவுபடுத்தும் சட்டங்களைப் பொறுத்தவரை, நீதித்துறை மறுஆய்வு செயல்முறை வலுவானதாகவும், உடனடியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அதன் சாதனைப் பதிவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் நெருக்கடியான காலங்களில் அதன் உணர்வின்மையின் அரசியல் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தாமதம் பெரும்பாலும் அரசியலமைப்பு தீர்ப்பின் நோக்கத்தை தோற்கடிக்கிறது. தீங்கிழைக்கும் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்திட, நேரம் அவசியமானதாகிறது.