முதல் இந்திய விண்வெளி சுற்றுலாப் பயணி முடித்த பயணம் : துணை சுற்றுப்பாதை பயணங்கள் (sub-orbital trips) என்றால் என்ன? -அமிதாப் சின்ஹா

 சமீபத்திய ப்ளூ ஆரிஜின் பயணம் (Blue Origin journey) ஒரு துணை சுற்றுப்பாதை விண்வெளி பயணமாகும். அதாவது, அது பூமியை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றி வரவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் சந்திரன், பிற கிரகங்கள் அல்லது சிறுகோள்கள் போன்ற இடங்களுக்கு நீண்ட பயணங்களைத் திட்டமிடுகிறார்கள்.


மே 19, ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்ட ஆறு விண்வெளி சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் பிறந்த விமானியும் வணிக விமானியுமான கோபி தோட்டகுராவும் ஒருவர் ஆவார். அமெரிக்காவைச் சேர்ந்த தோட்டகுரா இந்தியாவைச் சேர்ந்த முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை-சுற்றுப்பாதை (sub-orbital) பயணங்கள் என்றால் என்ன?


விண்வெளிக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியான பயணத்தை வழங்கும் பல தனியார் விண்வெளி நிறுவனங்களில் ஒன்றான ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் (spacecraft of Blue Origin) தோட்டகுரா பறந்தார். புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரை, முழுப் பயணமும் சுமார் பத்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது, இதன் போது விண்கலம் பூமியில் இருந்து அதிகபட்சமாக 105 கிமீ உயரத்தை அடைந்தது. இது விண்வெளிக்கு குறுகிய மற்றும் விரைவான பயணங்களில் ஒன்றாகும்.


 90 வயதான அமெரிக்கர் உட்பட பயணிகள் சில நிமிடங்கள் எடையற்றத் தன்மையை உணர்ந்தனர் மற்றும் சிறிது நேரம் பூமியை உயரத்தில் இருந்து பார்த்தனர். விண்வெளிப் பயணம் பூமியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி, பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள விளிம்பைக் குறிக்கும் கர்மான் கோட்டைக் (Karman line) கடந்து செல்கிறது. இந்த உயரத்திற்கு கீழே பறக்கும் எதுவும் விமானம் என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த கோட்டைக் கடக்கும் எதுவும் விண்கலம் என வகைப்படுத்தப்படுகிறது. தோட்டக்குராவின் பயணம் ஒரு துணை சுற்றுப்பாதை விண்வெளி விமானமாகும். இந்த விண்கலம் பூமியைச் சுற்றி வரவில்லை. இது கர்மன் கோட்டைக் கடந்து, சிறிது நேரம் அங்கேயே நிலைநிறுத்தப் பட்டது. பின்னர் பெரும்பாலான விண்வெளி சுற்றுலா விமானங்களைப் போலவே மீண்டும் பூமிக்குத் தரை இறங்கியது.


விண்வெளி சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட பயணங்கள் சாத்தியமா?


நீண்ட விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளலாம். விண்வெளி சுற்றுலா பயணிகள் பூமியைச் சுற்றி வந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) சில நாட்கள் செலவிட்டுள்ளனர். முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி டென்னிஸ் டிட்டோ (Dennis Tito) என்ற அமெரிக்கர், 2001ஆம் ஆண்டில் ரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் (Russian Soyuz spacecraft) பயணம் செய்ய பணம் செலுத்தினார். இதன் காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு நாட்கள் செலவிட்டுள்ளார். 2001 மற்றும் 2009-க்கு இடையில், ரஷ்யர்கள் ஏழு சுற்றுலாப் பயணிகளை விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் ஒருவரான சார்லஸ் சிமோனி இரண்டு முறை பயணம் செய்தார். சந்திரன், பிற கிரகங்கள் அல்லது சிறுகோள்களுக்கு தனிநபர்களுக்கான ஆழமான விண்வெளிப் பயணங்களுக்கான திட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த பயணங்கள் இன்னும் சிறிது காலம் ஆகும். தற்போது, துணை சுற்றுப்பாதை விண்வெளி விமானங்கள் விண்வெளிச் சுற்றுலா ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான பயணங்களாக உள்ளன.


சமீபத்திய விமானத்தைக் மேற்கொண்ட ப்ளூ ஆரிஜின் (Blue Origin) 37 சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளது. சுமார் 12 (a dozen) தனியார் விண்வெளி நிறுவனங்கள் சுற்றுலா வாய்ப்புகளை வழங்குகின்றன. விர்ஜின் கேலடிக் (Virgin Galactic), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space), ஜீரோ கிராவிட்டி கார்ப்பரேஷன் (Zero Gravity Corporation) மற்றும் போயிங் (Boeing) மற்றும் ஏர்பஸ் (Airbus) போன்ற விமான நிறுவனங்கள் இதில் அடங்கும்.


விண்வெளிச் சுற்றுலாவின் செலவுகள் என்ன?


ப்ளூ ஆரிஜின் (Blue Origin) அதன் சமீபத்திய பயணிகளுக்கான விலையை வெளியிடவில்லை. Space.com-படி, விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் (Virgin Galactic spacecraft) இதேபோன்ற பயணத்திற்கு சுமார் 450,000 டாலர் (சுமார் ரூ.3.75 கோடி) செலவாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) ஒரு பயணம் இப்போது 20 முதல் 25 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.160 முதல் 210 கோடி) வரை செலவாகும். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் ஸ்பேஸ் அட்வென்ச்சர்ஸ் (Space Adventures) ஆகியவை சுமார் 70 முதல் 100 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.600 முதல் 850 கோடி வரை) சந்திரனைச் சுற்றி ஒரு பயணத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளன என்று சமீபத்திய நாசா (NASA) கட்டுரை குறிப்பிடுகிறது.


விண்வெளி சுற்றுலா இப்போது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே அணுகக்கூடியது என்பது தெளிவாகிறது. ஆனால் இது வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.




Original article:

Share: