ஓர் ஆபத்தான உயரம் : மோசமான சட்ட அமலாக்கம் - சினேகா பிரியா யானப்பா, தீபா பத்மார், ரகுநந்தன் ஸ்ரீராம்

 கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளிப்புற விளம்பர உள்கட்டமைப்பிற்கான பாதுகாப்புத் தேவைகளை முன்வைக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த தரநிலைகளின் செயல்பாடு  பலவீனமாக உள்ளது.


மே 13, 2024 அன்று மும்பையில் ஒரு பெரிய வெளிப்புற விளம்பரப் பலகை புழுதிப் புயலில் கீழே விழுந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரஹன் மும்பை மாநகராட்சியில் (Brihanmumbai Municipal Corporation (BMC)) அனுமதியின்றி இந்த விளம்பர பலகை நிறுவப்பட்டது. விபத்துக்குப் பிறகு, நகரத்தில் சட்டவிரோத விளம்பரப் பலகைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரஹன் மும்பை மாநகராட்சி கூறியது.


குறிப்பாக, சட்டவிரோத விளம்பரப் பலகைகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில்  அதிகமாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் மழையைத் தொடர்ந்து ஒரு விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் விலங்கு ஒன்று காயமடைந்தது. மே 2023-ல், புனேவில், அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தெக்கலூரில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


மும்பை சம்பவத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட விளம்பர பலகை  ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது. இடிந்து விழும் வரை அனுமதிக்கப்பட்டது என்பது பிரஹன் மும்பை மாநகராட்சியின் மேற்பார்வை இல்லாததைக் காட்டுகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெளிப்புற விளம்பரக் கொள்கைகளை மறு ஆய்வு செய்ததில், இந்தக் கொள்கைகள் சட்டவிரோத விளம்பரப் பலகைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதில் சிறிதளவே உதவுகின்றன என்பதைக் காட்டுகிறது.


பரிமாணங்களின் மீறல்கள்


பெரிய விளம்பரப் பலகைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விதிகள் நகரங்களில் இருந்தாலும், அவற்றில் பல பலகைகள்  இன்னும் பெரியதாகவே உள்ளன. சில நேரங்களில், உயர் நீதிமன்றங்கள் இந்த விதிகளை மீறுவபர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்காத நகர அதிகாரிகளை எச்சரிக்கை வேண்டும். பம்பாய் உயர்நீதிமன்றம் ஒருமுறை சட்டவிரோத விளம்பரப் பலகைகளை எப்படி அகற்றுவது என்று அறிவுறுத்தியது, இரண்டு போலீஸ் அதிகாரிகளும் ஒரு நகர ஊழியரும் சேர்ந்து அதைச் செய்ய வேண்டும் என்று கூறியது.


2017-ஆம் ஆண்டு  முதல் பல உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநகராட்சியின் அலட்சியம் விரும்பத்தகாத சம்பவத்திற்கு வழிவகுத்தது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மாநகரட்சிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் சட்டவிரோத விளம்பரப் பலகைகளை அகற்றுவதில் இந்த ஆர்வம் நீடிக்குமா?


வெளிப்படைத்தன்மை இல்லை, பலவீனமான  அமலாக்கம் 


இரண்டு முக்கிய பிரச்சினைகள் நகர மாநகரட்சிகள் விளம்பர விதிமுறைகளை அமல்படுத்துவதைத் தடுக்கின்றன: வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் இடைவிடாத அமலாக்கம். சட்டவிரோத விளம்பரங்களுக்கு எதிராக புகார்களை எழுப்புவதற்கான செயல்முறை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளம்பரக் கொள்கைகள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றுவதை உறுதி செய்யும் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.

 

வெளிப்புற விளம்பரங்களைக் கையாள பல்வேறு நகரங்களில் விதிகள் உள்ளன. டெல்லியில், ஒரு விளம்பரம் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், உரிமையாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை அகற்ற வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால், மாநகராட்சி அதிகாரிகள் அதை அகற்றலாம். சாலைப் போக்குவரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகளை  தானாக முன்வந்து அகற்றவும் கொள்கை அனுமதிக்கிறது.


ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே விளம்பர விதிகள், 2021-ல் (Mahanagara Palike Advertisement Rules, 2021) மிகவும் விரிவான செயல்முறையுடன் கொண்டுவரப்பட்டது. ஆனால், அவை பொதுமக்களின் எதிர்ப்பிற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டன. விதிகள் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை அகற்றுவதற்கான அதிகாரத்தை தலைமை ஆணையருக்கு வழங்கியுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை அகற்றுவதைக் கண்காணிக்க ஒரு விளம்பர ஒழுங்குமுறைக் குழுவை அமைத்தது.


தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023-ன் ( Tamil Nadu Urban Local Bodies Rules, 2023) படி, விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்குவதை நகராட்சி அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு காலாண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.


சட்டவிரோத விளம்பரப் பலகைகளைக் கட்டுப்படுத்த, நகரங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை அமைக்கலாம். விளம்பரப் பலகைகள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய இந்தக் குழுக்கள் பல்வேறு பகுதிகளை அடிக்கடிச் சரிபார்த்து வருகின்றன. இந்த வழியில், விளம்பரப் பலகைகளைச் சரிபார்ப்பது ஒரு கட்டாயம் செய்ய வேண்டிய வேலையாக இருக்கும். ஆனால், நகரத்தை மட்டும் தேர்வு செய்ய முடியாது. குழுக்களில் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பொறியாளர்கள் இருக்கலாம்.


ஆபத்தின் பல வடிவங்கள்


சட்டவிரோத விளம்பரப் பலகைகளைக் கண்டறிந்தால், நகர அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை நகர அளவிலான விதிகள் கூற வேண்டும். இந்த சட்டவிரோத விளம்பரப் பலகைகளில் நிரந்தர நிறுவல்கள் மற்றும் தற்காலிகப் பதாகைகள் மற்றும் பலகைகள் உள்ளன. அவை பெரும்பாலும் அரசியல் கட்சிகளால் வைக்கப்படுகின்றன. அவை ஆபத்தானவை. புகார் அளித்தும், இந்த விதிமீறல் கட்டடங்களை அகற்றாத அதிகாரிகள், நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.


மீறல்களைப் புகாரளிப்பதை நகரங்கள் எளிதாக்க வேண்டும். இணக்கத்தைக் கண்காணிக்க சட்டப்பூர்வ விளம்பரப் பலகைகளில் QR குறியீடுகள் (QR codes) போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.


வெளிப்புற விளம்பரங்களுக்கு பாதுகாப்பு விதிகள் இருந்தாலும், அவை எப்போதும் தவறாமல் செயல்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும், சட்டவிரோத விளம்பரப் பலகைகள் தீங்கு விளைவிக்கும்போது, ​​நகரங்கள் எப்படியும் சட்டவிரோதமானது என்று கூறி பொறுப்பைத் தவிர்க்க முயல்கின்றன. இருப்பினும், சட்டவிரோத வெளிப்புற விளம்பரங்களை அகற்றுவதில் நகராட்சி அதிகாரிகள் தங்கள் பங்கை தீவிரமாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அடையாளம் காண பொறுப்பேற்க வேண்டும். கடந்த வாரம் மும்பையில் நடந்ததைப் போன்ற நீதிமன்ற உத்தரவுகள் அல்லது தீவிரமான சம்பவங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செயல்படாமல், நகராட்சி அமைப்புகள்  தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 


சினேகா பிரியா யானப்பா, விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசியில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். தீபா பத்மார், விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசியில் ஆராய்ச்சியாளராக உள்ளார். ரகுநந்தன் ஸ்ரீராம், விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசியில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.




Original article:

Share: