மே 10 அன்று தென்னாப்பிரிக்காவின் வேண்டுகோளுக்குப் பிறகு புதிய உத்தரவு வந்துள்ளது. ரஃபா (Rafah) மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலின் காரணமாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை "கடுமையான மற்றும் ஈடுசெய்ய முடியாத மீறல்களிலிருந்து" பாதுகாக்குமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice (ICJ)) கேட்டுக்கொண்டது.
மே 24 அன்று, நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ICJ) காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள நகரமான ரஃபாவில் இராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கூறியது. 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு முழுப் பகுதிக்கும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடவில்லை. ஆனால், அவர்கள் சில நிறுத்தத்திற்கு நடவடிக்கைகள் எடுத்தனர்.
அதன் தீர்ப்பில், மனிதாபிமான உதவியை அனுமதிக்கும் வகையில் எகிப்துக்கும் காசாவிற்கும் இடையே உள்ள ரஃபாவின் கடக்கும் பாதையை (Rafah crossing) திறக்குமாறு இஸ்ரேலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காசாவில் நடந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பப்படும் எந்தவொரு உண்மையைக் கண்டறியும் அல்லது புலனாய்வுப் பணிகளுக்கான புதிய அணுகுமுறையை வழங்குமாறு யூத அரசை அது கேட்டுக் கொண்டது. இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்திற்குள் சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) ஓர் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
சர்வதேச நீதிமன்ற (ICJ) தீர்ப்புகள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தக்கூடியவை. ஆனால், செயல்படுத்த முடியாதவை. இந்த உத்தரவு இஸ்ரேலை பிற பகுதியிலிருந்து தனிமைப்படுத்தலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். காசாவில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி 2023 டிசம்பரில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து, நீதிமன்றம் இஸ்ரேலுக்கு இனப்படுகொலை நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் மற்றும் காசாவிற்கு உணவு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற உத்தரவுகள் உட்பட பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
மே 10 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு புதிய கோரிக்கை வந்தது. காஸாவில் பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க சர்வேதச நீதிமன்றத்திடம் (ICJ) உதவி கேட்டனர். ரஃபா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல் அவர்களின் உரிமைகளுக்கு கடுமையான தீங்கு விளைவிப்பதாக அவர்கள் கூறினர்.
ரஃபா மீதான இஸ்ரேலியத் தாக்குதலால் ஏற்பட்ட நிலைமை மற்றும் காசாவுக்குள் மனிதாபிமான பொருட்கள் மற்றும் அடிப்படை சேவைகள், பாலஸ்தீனிய மருத்துவ முறையின் உயிர்வாழ்வு மற்றும் காசாவில் பாலஸ்தீனியர்கள் குழுவாக உயிர்வாழ்வதற்கான தீவிர ஆபத்து உள்ளது. இதில், நிலவும் சூழ்நிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், காசாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளுக்கு சீர்படுத்த முடியாத தீங்கு விளைவிக்கும் புதிய உண்மைகளை உருவாக்குகிறது, என்று சர்வதேச நீதிமன்றத்துக்கு (ICJ) தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காசாவில் பாலஸ்தீனியக் குழு அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் நிலைமைகளைத் தடுக்க ரஃபாவில் இஸ்ரேல் "அதன் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று சர்வதேச நீதிமன்றம் 13:2 பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பளித்தது. இந்த வாக்களிப்புக்கு எதிராக உகாண்டா மற்றும் இஸ்ரேல் இருந்தது. காஸாவுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை இஸ்ரேல் உறுதிசெய்ய வேண்டும் என்ற முந்தைய உத்தரவுகளை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
மே 7 அன்று ரஃபாவில் தொடங்கிய இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல், மே 18ஐ ஒட்டி கிட்டத்தட்ட 8,00,000 மக்களை இடம்பெயரச் செய்ததாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கான நிலைமை விதிவிலக்காக இன்னும் மோசமாக உள்ளது என்று நீதிமன்றம் கூறியது. இது முந்தைய தற்காலிக நடவடிக்கைகளை மாற்றியமைப்பதை நியாயப்படுத்தும் மாற்றத்தை உருவாக்கியது. நீதிமன்ற விதிகளின் 76-வது பிரிவு இந்த நிலைமை மாறினால் நடவடிக்கைகளை மாற்றியமைக்க சர்வதேச நீதிமன்றத்தை அனுமதிக்கிறது.
காசா பகுதியில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக ரஃபா ஆட்சியகத்திலிருந்து (Rafah Governorate) சமீபத்தில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு போதுமானது என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) நம்பவில்லை என்றும் கூறியது. இது பாலஸ்தீனிய மக்களுக்கு பெரும் ஆபத்தாகும்.