பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council) முதல் பிரதமர் வரை தரப்பட்ட முதற்கட்ட ஆய்வுக் கட்டுரைகளில் முஸ்லிம் மக்கள் தொகை எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பது குறித்து தவறாகப் பேசப்பட்டுள்ளது.
"மத சிறுபான்மையினரின் பங்கு: ஒரு நாடு கடந்த பகுப்பாய்வு (1950-2015)" என்ற தலைப்பில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) வெளியிட்ட முதற்கட்ட ஆய்வறிக்கையின் கண்டுபிடிப்புகளை பல ஊடக அறிக்கைகளும் அரசியல்வாதிகளும் தவறாகப் புரிந்துகொண்டு அதை மிகைப்படுத்தியுள்ளனர். இந்த அறிக்கைகள் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்து மக்களை அச்சுறுத்துவதாகவும் தவறானத் தகவலை தெரிவிக்கின்றன. இத்தகைய விளக்கங்கள் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன மற்றும் மக்கள் பிரச்சினைகளை மறைக்கின்றன.
மதப் புள்ளிவிவரங்களில் ஏற்படும் மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது சிக்கலானது. அதன் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதை முதற்கட்ட ஆய்வறிக்கை ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், இந்தியாவில் சிறுபான்மையினர் சிறப்பாகச் செயல்படுவதை முஸ்லீம் மக்கள்தொகையின் வளர்ச்சி காட்டுகிறது என்று அது இன்னும் ஒரு தவறான கூற்றை முன்வைக்கிறது. கருவுறுதல் அதிகரிப்பு மட்டுமே செழிப்பான மக்கள்தொகையைக் குறிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தரவு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி
சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் மக்கள்தொகை தரவை விளக்குவது முக்கியமானது. ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மதத்தை விட கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகள் போன்ற சமூக-பொருளாதார காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கு சிறந்த அணுகல் கொண்ட சமூகங்கள் குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன.
அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள் இல்லை. இது பெரும்பாலும் மனித வளர்ச்சியில் குறைபாடுகளைக் காட்டுகிறது. இந்துக்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் முஸ்லிம் மக்கள்தொகையின் அதிக வளர்ச்சி விகிதம், மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளில் முஸ்லிம் சமூகம் பின்தங்கியிருப்பதையேக் காட்டுகிறது. மாறாக, குறைந்த வளர்ச்சி விகிதம் அல்லது மக்கள்தொகையில் சரிவு என்பது துன்புறுத்தலைக் குறிக்காது. ஆனால் சிறந்த சமூக-பொருளாதார நிலைமைகள், குறைவானக் கருவுறுதல் விகிதங்கள் மற்றும் அதிகமான மக்கள் வெளியேறுவதைக் காட்டலாம்.
EAC-PM ஆய்வு 167 நாடுகளில் ஆய்வு செய்ய மாநிலங்களின் மக்கள்தொகை (Religious Characteristics of States-Demographic (RCS-DEM)) தரவுத்தொகுப்பின் மதப் பண்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த தரவுத்தொகுப்பு உலகெங்கிலும் உள்ள மத குழுக்களின் மக்கள்தொகை பற்றிய விரிவான தகவலை வழங்குகிறது. இது 1950 முதல் 2015 வரையிலான மக்கள்தொகைத் தரவுகளைப் பார்க்கிறது.
மாற்றங்களை விளக்குதல்
வெவ்வேறு சமூகங்களின் மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களை விளக்க மூன்று வழிகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை அதிகரிப்பைப் பார்ப்பது ஒரு வழி. 1950 முதல் 2015-வரை, இந்தியாவின் இந்து மக்கள்தொகை 701-மில்லியனாக அதிகரித்தது. இது 146 மில்லியன் முஸ்லிம் மக்கள்தொகையின் அதிகரிப்பைவிட ஐந்து மடங்கு அதிகம்.
இரண்டாவது வழி, மக்கள்தொகையில் வெவ்வேறு மதக் குழுக்களின் விகிதம் காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்ப்பது. 1950-ல் 84.7%ஆக இருந்த இந்துக்களின் விகிதம் 6.64 சதவீதம் குறைந்து 2015-ல் 78.06%ஆக இருந்தாலும், 1950-ல் 9.84%ஆக இருந்த முஸ்லிம்களின் விகிதம் 4.25 சதவீதம் அதிகரித்து 2015-ல் 14.09%-ஆக குறைந்துள்ளது. இந்துக்களோ, முஸ்லிம்களின் சிறு அதிகரிப்பைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. 1950-ல், 35.5 மில்லியன் முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில் 306-மில்லியன் இந்துக்கள் இருந்தனர். எனவே, மாற்றங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை. மேலும் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிக மக்கள்தொகை கொண்டவர்களாக மாறும் அபாயம் இல்லை.
மூன்றாவதாக, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) ஆய்வின்படி, ஒவ்வொரு குழுவின் பங்கிலும் ஏற்படும் மாற்ற விகிதத்தில் கவனம் செலுத்துவது. 1950 முதல் 2015-வரை, இந்து மக்கள்தொகை பங்கு 7.8% குறைந்துள்ளது. அதே சமயம் முஸ்லிம் மக்கள்தொகை பங்கு 43.2% அதிகரித்துள்ளது.
1950-ல், முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது (9.8%) இந்துக்கள் அதிக அளவில் (84.7%) இருந்தனர் என்பதால் இது புள்ளிவிவர ரீதியாக சுட்டிக்காட்டப்படுகிறது. பிற மதக் குழுக்களின் பங்குகளில் ஏற்படும் மாற்றத்தின் விகிதத்தைப் பார்த்தால், இந்த புள்ளிவிவரங்களின் தவறான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, பௌத்தர்களின் பங்கு 1519.6% மற்றும் சீக்கியர்களின் பங்கு 49.2% அதிகரித்துள்ளது. ஆனால், பௌத்தர்களும் சீக்கியர்களும் இந்தியாவின் மக்கள்தொகையை மாற்ற முயல்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அதேபோல், பார்சிகளின் பங்கில் 86.7% சரிவு என்பது அவர்கள் குறிவைக்கப்பட்டதாக அர்த்தமல்ல. சரியாக விளக்கப்படாவிட்டால் இந்த எண்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.
தரவுகளின் தேவை
1951 முதல் 2011 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளை ஆய்வு செய்த "இந்தியாவின் மதக் கலவை" (“Religious Composition of India”) என்ற பியூ ஆராய்ச்சி மையத்தின் 2021-அறிக்கையின்படி, இந்தியாவின் ஆறு பெரிய மதக் குழுக்களின் விகிதம் பிரிவினைக்குப் பிறகு "மிகவும் நிலையானதாக" (“relatively stable”) உள்ளது. இந்திய மக்கள்தொகை ஆய்வாளர்கள் பி.என். மாரி பட் (P.N. Mari Bhat) மற்றும் பிரான்சிஸ் சேவியர் (Francis Zavier) ஆகியோர் 2005-ஆம் ஆண்டில், இந்தியாவில் முஸ்லீம் மக்கள்தொகை விகிதம் 2101ஆம் ஆண்டளவில் 18.8%ஆக உயரும் என்று கணித்துள்ளனர். ஆனால், தேசியக் குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey (NFHS)) சமீபத்திய அறிக்கைகள் முஸ்லீம்களின் கருவுறுதல் விகிதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டுகின்றன என்று மக்கள்தொகை அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. இப்போது ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டால், முஸ்லீம் மக்கள்தொகையின் உச்சம் இன்னும் குறைவாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் தாமதமான புள்ளிவிவரங்கள், இறுதியாக வெளிவரும்போது, இந்தப் போக்குகளை உறுதிப்படுத்தும்.
பூனம் முத்ரேஜா, இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர். மார்த்தாண்ட் கௌசிக், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு மூத்த நிபுணர்