இந்தியாவில் நெருப்புப் பாதுகாப்பின் அலட்சியம் குறித்து . . .

 இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள், கட்டிடத் தீ அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க வேண்டும்.


குஜராத்தின் இராஜ்கோட் விளையாட்டு மையத்திலும் (gaming centre), டெல்லியில் புதிதாகத் துவங்கிய மருத்துவமனையிலும் (nursing clinic) ஒரே நாளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 24 மணி நேரத்திற்குள், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சோகமான நிகழ்வு இந்தியாவில் ஒரு தீவிரமான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது: பல கட்டிடங்களின் கட்டிடகலைஞர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் அலட்சியம் காரணமாக, இங்கு சரியான தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. இந்திய தர நிர்ணய பணியகம் இந்திய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code of India (NBC)) 2016-ல் விரிவான தீ பாதுகாப்பு நெறிமுறைகளை அமைத்துள்ளது. இருப்பினும், தீயணைப்பு சேவைகள் ஒரு மாநில பொருள் மற்றும் நகராட்சி அளவில் செயல்படுத்தப்படுவதால் இது ஒரு பரிந்துரை ஆவணமாகும்.


உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தீயணைப்பு சேவைகள் இணையதளத்தின் இயக்குநர் ஜெனரலின் 'தீயணைப்பு சேவை பற்றிய பின்னணி' (About Fire Service – Background) பக்கத்தில் உள்ள தொடக்க வரிகளிலிருந்து இந்தியாவின் தீ பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவது தெளிவாகிறது. "இந்தியாவில் தீயணைப்புச் சேவைகள் நன்கு ஒழுங்கமைக்கப்படவில்லை" என்று அது கூறுகிறது. மேலும் "சமீபத்திய ஆண்டுகளில் தீ பாதுகாப்பு தேவைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அதேசமயம், தீயணைப்புச் சேவையின் வளர்ச்சி அதிக முன்னேற்றம் அடையவில்லை.


இந்தியாவின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளைச் சீரமைக்க 13-வது நிதி ஆணையத்திற்கு ரூ.7,000 கோடியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) பரிந்துரைத்தது. இருப்பினும், தீயணைப்பு மற்றும் அவசரகால தயார்நிலையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஆணையமானது நகராட்சி மட்டத்தில் கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய் கோரியது. மாநிலங்களவைக்கு 2019-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், இந்தியாவில் 3,377 தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே உள்ளன என்று குறிப்பிட்டது. அதே நேரத்தில், தீ அபாயங்கள் குறித்த 2012 தேசிய அறிக்கை இந்த எண்ணிக்கையை விட இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. மேலும், ஊழியர்களின் பற்றாக்குறை இன்னும் கடுமையாக உள்ளது. 2019-ம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 55,000 தீயணைப்பு வீரர்கள் மட்டுமே இருந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான தேவை சுமார் 5,60,000 ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதம், ஒன்றிய அரசு ரூ.5,000 கோடியை ஒதுக்கியது. மேலும், அவசரச் சேவைகளை நவீனப்படுத்த மேலும் ரூ.1,400 கோடியை வழங்குமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. தேசிய / மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு அனைத்து நிதியிலும் 12.5% ஒதுக்க 15-வது நிதி ஆணையத்தின் ஆலோசனையைத் தொடர்ந்து இது பின்பற்றுகிறது.


அதிகரித்து வரும் வெப்ப அலைகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளுடன், தீ பாதுகாப்பிற்கான முழுமையான அணுகுமுறைக்கு 2016 இந்திய தேசிய கட்டிடக் குறியீடு (NBC) மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கட்டிடக் குறியீட்டை (Energy Conservation Building Code) சாதகமாக்குவது மிக அவசியம். கட்டுமானப் பொருட்கள் (construction material), மின் கம்பியமைத்தல்  (electrical wiring), குளிரூட்டல் (air-conditioning) மற்றும் குளிரூட்டும் பொருட்களுக்கான தரநிலைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தியாவின் அரசியல்வாதிகள், அதிகாரத்துவத்தினர், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை அவசரமாக எதிர்கொள்வது முக்கியம்.




Original article:

Share: