இது இந்திய சதுரங்கத்தின் பொற்காலத் தலைமுறை - விஸ்வநாதன் ஆனந்த்

 கேண்டிடேட்ஸ் போட்டியில் (Candidates tournament) இந்தியாவின் வெற்றி நாட்டில் சதுரங்க சுற்றுச்சூழல் அமைப்பு (chess ecosystem) எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டால், நாம் உலக அளவில் முதலிடத்திற்கு அருகில் இருக்கலாம்.


கேண்டிடேட்ஸ் போட்டியில் இந்தியாவின் வெற்றி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். மேலும், இந்த வெற்றிக்கு பங்களித்த அனைத்து காரணிகளையும் பிரதிபலிப்பது முக்கியம். இதில், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு ஒரு நிலையான காரணியாக இருந்து வருகிறது. எனது சொந்த அனுபவத்தில், என் 15-16 வயது வரை என் அம்மா என்னுடன் போட்டிகளில் இருப்பார். அதன் பிறகு, தனியாகப் பயணம் செய்யத் தொடங்கும் வரை, என் அம்மா பல ஆண்டுகளாக என்னுடன் போட்டிகளுக்கு வருவார். சில சமயங்களில் என் அப்பாவும் சேர்ந்து கொண்டார். அவர்கள் என்னை மிகவும் ஆதரித்தார்கள். குகேஷ் டி அல்லது ஆர் பிரக்ஞானந்தா (Gukesh D or R Praggnanandhaa) அல்லது விடித் குஜராத்தியாக (vidit gujrathi) இருந்தாலும் சரி, அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்குப் பின்னால் ஒரு சுவர் போல் இருக்கிறார்கள், சிறுவர்கள் வெளியே சென்று சிறந்த முறையில் விளையாடுவதற்கான ஆதரவைப் பெறுவதற்கு தனிப்பட்ட முறையில் தங்களை நிறைய ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.


இது ஒரு நிலையானது என்றாலும், நான் வளர்ந்து வரும் போது, பயிற்சியானது விளையாட்டின் ஒரு பெரிய பகுதியாக இல்லை. உதாரணமாக, எனக்கு கிட்டத்தட்ட 20 வயது வரை பயிற்சியாளர் இல்லை. அதற்குள், நான் ஏற்கனவே உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தேன். இப்போது விஷயங்கள் வேறு. பயிற்சி இல்லாமல் விளையாட முடியாது. பயிற்சி முறைகள் பெற்றுள்ள அதிநவீனத்தின் அளவு மற்றும் போட்டியின் காரணமாக இது மிகவும் கடினமானது. இப்போது பல குழந்தைகள் சதுரங்கம் விளையாடுவதால், பந்தயத்தில் ஒரு படி மேலே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு வழிமுறைகளில் தனிப்பட்ட முதலீடு ஒரு பெரிய அளவு உள்ளது. தொழில்நுட்பத்தின் கருவிகள் வெடித்துவிட்டன, அதன் நன்மைகளை அதிகப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்கவும், பயிற்சியில் சேர்த்துக்கொள்ளவும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறது.


முன்பை விட இப்போது இந்தியாவில் என்ன புதிய விஷயங்கள் உள்ளன என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பதில் என்னவென்றால், கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவில் சதுரங்கம் மிகவும் வளர்ந்துள்ளது. எனது காலத்திற்குப் பிறகு, முதல் தொகுப்பு வீரர்கள் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற்றனர். பொதுத்துறையில் வேலை கிடைத்து, சொந்தமாக பயிற்சி மையங்கள் மற்றும் நிறுவனங்கள் (coaching centers and academies) தொடங்கினார்கள். இதனால் வரவிருக்கும் வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய வளங்களை வளப்படுத்தியது. எனவே, அடுத்த தலைமுறை வந்தபோது, அவர்கள் ஏற்கனவே பல விஷயங்களை அணுகினர். உதாரணமாக, கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவுக்கு சொந்தமான விஷ்ணு அகாடமியில் குகேஷ் பயிற்சி பெற்றார். ஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ரமேஷின் அகாடமியில் பிராக் பயிற்சி பெற்றார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திறமையான வீரர்களின் பெரும்பாலான பயிற்சித் தேவைகளுக்கு, இந்தியா சிறந்த இடமாக உள்ளது. போட்டியின் சராசரி நிலை மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் இப்போது முதலிடத்திற்கு உயர்வது என்பது ஒரு போட்டிக்கான வீரர் உலகின் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இருப்பதற்கு நெருக்கமாக இருக்கிறார் என்பதாகும். இது முந்தைய காலங்களிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.


சதுரங்கத்தின் புகழ் பல காரணங்களுக்காக அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் இப்போது அதை ஒரு மதிப்புமிக்க தொழில் தேர்வாகப் பார்க்கிறார்கள். மேலும், இது வழக்கத்திற்கு மாறானதாக இல்லை. ஒளிபரப்பு (Streaming) மற்றும் மின்-விளையாட்டுகள் (e-sports) ஆகியவை சதுரங்க விளையாட்டை பிரபலமாக்கச் செய்துள்ளன. அதன் அடிப்படையில், OTT தொடர்கள் மற்றும் போட்டிகளுக்கு செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய ஆதரவை இந்தத் தொழில்நுட்பம் மாற்றியது. வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் (WestBridge Capital) போன்ற தனியார் ஆதரவாளர்கள் (sponsors) வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் சதுரங்கம் அகாடமி (WestBridge Anand Chess Academy(WACA)) போன்ற அகாடமிகளை ஆதரிக்கின்றனர். டி குகேஷ், ஆர் பிரக்ஞானந்தா மற்றும் ஆர் வைஷாலி போன்ற வீரர்கள் இந்த ஆதரவால் பயனடைந்துள்ளனர். இந்தியா விளையாட்டுக்காக அதிக பணம் செலவழித்து வருகிறது. இது சதுரங்கம் மற்றும் பிற ஒலிம்பிக் விளையாட்டுகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.


நான், வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் சதுரங்கம் அகாடமிக்கு (WACA) வழிகாட்டிகளை தேர்வு செய்தபோது, அதில் 14 வயதிற்குள் பலர் கிராண்ட்மாஸ்டர்களாக உள்ளனர். அவர்களில், பெரும்பாலோர் உலகளவில் முதல் 20 இடங்களுக்குள் வருகிறார்கள். அவ்வப்போது முதல் 30 இடங்களுக்குள் சில சமயங்களில் நழுவ வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மிகவும் இளமையாக இருக்கிறார்கள் - குகேஷுக்கு 17 வயது, ப்ராக் 18, உதாரணமாக - அவர்களுக்கு முன்னால் அவர்களின் சிறந்த ஆண்டுகள் காத்திருக்கின்றன. 


சதுரங்கத்தில் பாலின ஏற்றத்தாழ்வு பிரச்சினை ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. அதை, நிவர்த்தி செய்ய கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும் சதுரங்கத்தில் மிகவும் நிலையானதாகவே உள்ளது. உதாரணமாக, பல நிறுவனங்கள் மற்றும் நிகழ்வு அமைப்பாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சமமான பரிசுத் தொகையை வழங்க முயற்சிக்கின்றனர். கொல்கத்தாவில் நடைபெறும் டாடா ஸ்டீல் சதுரங்கப் போட்டி (Tata Steel Chess Tournament) ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம். இது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒவ்வொன்றும் சமமான பரிசுத் தொகையுடன் தனித்தனி நிகழ்வுகளை நடத்துகிறது. மேலும், உலக சதுரங்க கூட்டமைப்பு (World Chess Federation (FIDE)) பெண்கள் சதுரங்க சுற்றை ஆதரிக்கிறது மற்றும் விளையாட்டை பெண்களுக்கு மிகவும் சுலபமாக அணுகக்கூடியதாகவும் மாற்ற பரிசுக்கான நிதியை அதிகரித்துள்ளது. இந்த முயற்சிகள் அவசியம். ஏனெனில், அவை சதுரங்கத்தில் பங்கேற்க அதிகமான பெண்களை ஊக்குவிக்க உதவுகின்றன. கொனேரு ஹம்பி (Koneru Humpy) மற்றும் வைஷாலி ஆர் (Vaishali R) போன்ற வீரர்களின் சாதனைகளில் காணப்படுவதைப் போல சில நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை, சில முன்னேற்றங்களைக் குறிக்கின்றன. இருப்பினும், சதுரங்கத்தில் பாலின இடைவெளியை குறைப்பதற்கு இன்னும் அர்ப்பணிப்பும் கவனமும் முயற்சியும் தேவை.


கூடுதலாக, சதுரங்கம் இந்தியா முழுவதும் பரவலாக இருப்பதைக் காண விரும்புகிறேன். சதுரங்கத்தில் தமிழ்நாடு தற்போது முன்னணி மாநிலமாக இருந்தாலும், தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன. விளையாட்டை அணுகுவதிலும் ஈடுபடுத்துவதிலும் இன்னும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சதுரங்கத்தை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது அதை மேலும் உள்ளடக்கியதாக மாற்ற உதவும். மேலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்களை விளையாட்டில் இணைப்பதற்கு கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்


எழுத்தாளர், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியன், FIDE துணைத் தலைவராக உள்ளார்



Original article:

Share: