போயிங்கின் ஸ்டார்லைனர் செலுத்தப்படுவது ஏன் முக்கியமானது? -அலிந்த் சௌஹான்

 Boeing நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது செவ்வாய்க்கிழமை (மே 7) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (international space station (ISS)) இரண்டு நாசா விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும். ஸ்டார்லைனரின் முதல் குழுப்போக்குவரத்து விமானம் இதுவாகும். இது வெற்றி அடைந்தால், போயிங் நாசா குழுவினரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்வதில் SpaceX உடன் சேரும்.


 Boeing’ நிறுவனம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அதன் விமான வணிகத்தை பாதித்துள்ளது. மேலும், அதன் விண்வெளித் துறை போராடி வருகிறது. ஸ்டார்லைனரின் குழுப்போக்குவரத்து விமானத்தின் வெளியீடு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகளாக தாமதமானது.


முதலில், போயிங்கின் ஸ்டார்லைனர் (Boeing’s Starliner) என்றால் என்ன?


Starliner என்பது சிஎஸ்டி-100 எனப்படும் ஒரு வகை மீண்டும் பயன்படுத்தக்கூடிய குழு விண்கலம் (reusable crew capsule) ஆகும். இது 5 மீட்டர் உயரமும் 4.6 மீட்டர் அகலமும் கொண்டது. இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: குழு தொகுதி (crew module) மற்றும் சேவை தொகுதி (service module).


குழு தொகுதி (crew module) ஏழு விண்வெளி வீரர்களுக்கு பொருந்தும், ஆனால் சர்வதேச விண்வெளி நிலைய பயணங்களுக்கு இது நான்கு விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குககளை கொண்டுசெல்வதற்கு உருவாக்கப்பட்டது. இது 10 முறை வரை பயன்படுத்தப்படலாம், பயன்பாடுகளுக்கு இடையில் ஆறு மாத இடைவெளி இருக்கும்.


சேவை தொகுதி (service module)  இது விண்வெளியில் மின்சாரம், உந்துவிசை, வெப்பநிலை, காற்று மற்றும் நீரை வழங்கும் விண்கலத்தின் ஆற்றல் மையம் போன்றது. 


பணி என்ன?


Starliner விண்கலம் விண்வெளியில் விண்வெளி வீரர்களுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சோதனை செய்வதே  இந்த பணியின் நோக்கம். விண்வெளிக்கு ஏவப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படுவதை இது இலக்காகக் கொண்டுள்ளது. சுமார் 10 நாட்கள் அங்கேயே தங்கி பூமிக்குத் திரும்பும்.


Starliner விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு முன், நாசா விண்வெளி வீரர்களான பாரி "புட்ச்" (“Butch”) வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் அது பறப்பதை சுயமாக சோதிப்பார்கள். அவர்கள் இருக்கைகள், வாழ்வாதாரம், வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் சரக்கு நகரும் அமைப்பு ஆகியவற்றையும் சரிபார்ப்பார்கள். வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் 40% இலகுவான மற்றும் தொடுதிரை உணர்திறன் கையுறைகளைக் கொண்ட புதிய நீல விண்வெளி உடைகளையும் சோதிப்பார்கள்.


திரும்பும் பயணத்தில், நாசா மற்றும் போயிங் விண்கலத்தின் வெப்பக் கவசம் மற்றும் வான்குடை மிதவைகளை (parachute) கண்காணிக்கும். ஏர்பேக்குகள் தரையிறங்கும் தாக்கத்தை மென்மையாக்கும்முன் அவை இறங்குவதை மெதுவாக்கும். மற்ற காப்ஸ்யூல்கள் போலல்லாமல், Starliner தரையில் இறங்குகிறது. கடலில் அல்ல என்று பிபிசி அறிக்கை கூறுகிறது.


தாமதத்திற்கு என்ன காரணம்?


நாசா தனது விண்வெளி விண்கலங்களைப் பயன்படுத்துவதை 2011 இல் நிறுத்தியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மக்களையும் பொருட்களையும் எடுத்துச் செல்ல உதவுமாறு அவர்கள் மற்ற நிறுவனங்களைக் கேட்டனர்.  SpaceX மற்றும் Boeing ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை கிடைத்தது. SpaceX 2020 முதல் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. போயிங் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  செவ்வாய்க்கிழமை செல்கிறது.


போயிங்கின் ஸ்டார்லைனர் 2015-ல் விண்வெளிக்கு செல்ல வேண்டியது. ஆனால், நான்கு வருட காத்திருப்புக்குப் பிறகு 2019 வரை செல்லவில்லை. இறுதியாக அது பறந்தபோது, அதன் மென்பொருள் மற்றும் வன்பொருளில் சிக்கல்கள் இருந்தன. இது அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய முடியவில்லை என்று தி கான்வர்சேஷன் (The Conversation) தெரிவித்துள்ளது.


Starliner அதன் முதல் வெற்றிகரமான ஆளில்லா விமானத்தைப் பெறுவதற்கு 80க்கும் மேற்பட்ட திருத்தங்கள் தேவைப்பட்டன. அப்போதும் கூட, சில உந்துதல்கள் மற்றும் விண்கலத்தின் குளிரூட்டும் அமைப்பு பற்றிய கவலைகள் நீடித்தன.  இணைப்புகள் மற்றும் பாராசூட் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் பின்னர் எழுந்தன. இந்த சிக்கல்கள் காரணமாக, போயிங் ஸ்டார்லைனரின் முதல் குழு விமானத்தை 2023 முதல் இப்போது வரை தள்ளிவைத்தது.


பணி ஏன் முக்கியமானது?


இந்த பணி நாசா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது. தற்போது, விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல நாசா SpaceX நிறுவனத்தை நம்பியுள்ளது. ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வழக்கமான பயணங்களைத் தொடங்க முடிந்தால், நாசா SpaceX நிறுவனத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக போயிங் நிறுவனத்திற்கு இது மிகவும் முக்கியமானது. இங்கிலாந்தில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிமியோன் பார்பர் (Simeon Barber), "போயிங் நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய நாள்”  (“It’s a really big day for Boeing”) என்று கூறினார். 


போயிங் நிறுவனம் நீண்ட காலமாக விண்கலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சோதனை விமானங்களில் அவர்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த திட்டத்தில் நிறைய ஆபத்துகள் உள்ளன. ஸ்டார்லைனர் வெற்றி பெற்றால், வணிக விண்வெளித் துறையில் Space X-ன் ஆதிக்கத்திற்கு போயிங் சவால் விடும்.



Original article:

Share: