இந்தியாவின் முதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குப் பெட்டியை எவ்வாறு பெற்றனர்? -சக்ஷு ராய்

 தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிக்கான வடிவம் மற்றும் சிறப்பம்சங்களை நிர்ணயித்தது. ஆனால் அவை சுமுகமாக செல்லவில்லை.


மக்களவை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது, இது மிகவும் முக்கியமானது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த கட்டம் முடிந்ததும், 543 மக்களவை தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குபதிவு நிறைவடைந்திருக்கும். அடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், மே 13 ஆம் தேதி அனைத்து தொதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.


அனைத்து இந்தியர்களுக்கும் வாக்குரிமை எப்படி கிடைத்தது


நம் நாட்டில் தேர்தல் என்பது சிக்கலான வரலாற்றைக் கொண்டது. அவற்றில் ஒன்றுதான் வயது வந்தோரின் வாக்குரிமை பற்றிய பேச்சு. காலனித்துவ ஆட்சியின் போது, ​​பலருக்கு படிக்கத் தெரியாது, அரசியல் குழுக்கள் இல்லை என்றும், அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் என்றும், அனைவரும் வாக்களிக்க அனுமதிப்பது வேலை செய்யாது என்றும் நிர்வாகிகள் கருதினர். நாம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் இதைப் பற்றி அதிகம் பேசினர். மக்களுக்கு படிப்பறிவு இல்லாத காரனத்தினால், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது நியாயமாக இருக்காது என்று நினைத்தனர். இறுதியில், வயது வந்த அனைவரும் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் என்று முடிவு செய்தனர்.


விவாதங்களின் போது, ​​அரசியல் நிர்ணய சபை செயலகம் 1947ல் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கியது. ஆர்னிட் ஷானி (Ornit Shani), தனது "இந்தியா எப்படி ஜனநாயகமானது" (How India Became Democratic) என்ற புத்தகத்தில், செயலகம் எடுத்த கவனமான நடவடிக்கைகளை விளக்குகிறார். அவர் கூறுகிறார், “பிரிவினையின் கொடூரமான சோகத்தின் பின்னணியில் உலகளாவிய உரிமையின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை உருவாக்கி, இறுதியில் வளமான அரசியல் கற்பனை தேவைப்படும் அரசியலமைப்பை எதிர்பார்த்து இந்திய மக்கள்தொகையில் 49% பேர் சேர்க்கப்பட்டது, அவர்களில் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள்.”


1950-ல் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான சட்டங்களை இயற்றியது. மேலும் பல காரணிகள் முதல் தேர்தலை தாமதப்படுத்தியது. தேவையான சட்டங்களை இயற்றுதல், மாநிலங்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்துதல், பீகாரில் வெள்ளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவை இதில் அடங்கும். அந்த ஆண்டு நவம்பரில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நவம்பர்-டிசம்பர் 1951 இல் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறினார்.


இந்த காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு செயல்முறை விவரங்களை இறுதி செய்து கொண்டிருந்தது. 1932 ஆம் ஆண்டின் இந்திய வாக்குரிமைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது, அக்குழு வயது வந்தோர் வாக்குரிமையை ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்த இந்த குழு பரிந்துரைத்தது. ஒவ்வொரு பெட்டியும் ஒரு தனித்துவமான நிறம் அல்லது சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வண்ணங்கள் / சின்னங்களை வேட்பாளர்களுக்கு எவ்வாறு ஒதுக்குவது மற்றும் வாக்குச் சாவடிகளின் வடிவமைப்பு மற்றும் இடம் குறித்த வழிகாட்டுதல்களையும் அது வழங்கியது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி எழுத்தரும் 1,000 வாக்காளர்களைக் கையாளலாம், ஆனால் அதற்கு மேல் முடியாது என்று விதி கூறுகிறது.


தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது. வாக்குப்பெட்டி ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் அளவிலும் இருக்க வேண்டும் என்று கூறுயது. பெட்டியின் மேற்புறத்தில் உள்ள ஸ்லாட் ஒரு ரூபாய் நோட்டின் அளவிலான வாக்குச் சீட்டை பொருத்தும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. பெட்டிகள் 20 கேஜ் எஃகு மூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆனையம் கட்டளையிட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான முதல் பொதுத் தேர்தலுக்கு சுமார் 19 லட்சம் எஃகு வாக்குப் பெட்டிகள் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிட்டு இருந்தது. இந்த பெட்டிகளை தயாரிக்க 6,000 டன் எஃகு தேவைப்பட்டது. ஒப்பிடுகையில், ஈபிள் கோபுரத்தை கட்டுவதற்க்கு 7,300 டன் இரும்பு தேவைப்படது.


நாடு முழுவதும் உள்ள பல உற்பத்தியாளர்களின் வடிவமைப்புகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ் (Godrej and Boyce) உற்பத்தி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் (Allwyn Metal Works) மற்றும் கல்கத்தாவைச் சேர்ந்த புங்கோ ஸ்டீல் பர்னிச்சர் (Bungo Steel Furniture) ஆகியவை இதில் அடங்கும். கோத்ரேஜ் வடிவமைத்த வாக்குப் பெட்டிகள் ஒரு தனித்துவமான பூட்டுதல் தொழில்நுட்ப முறையக் கொண்டிருந்தன. இந்த தொழில்நுட்பமானது ஒரு முத்திரையை உடைக்காமல் பெட்டிகளை சேதப்படுத்த முடியாது என்பதை உறுதி செய்தது. இதன் விளைவாக, கோத்ரெஜ் பெரும்பாலான வாக்குப் பெட்டிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றனர். பீகாரில், கோத்ரெஜ் தங்கள் பெட்டிகளுக்கும் தங்கள் போட்டியாளருக்கும் இடையிலான விலையில் உள்ள வித்தியாசத்தை மாநில அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்தது.


இருப்பினும், அனைத்து உற்பத்தியும் சீராக நடக்கவில்லை. ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் வாக்குச் சீட்டைச் செருகுவதற்கான பிளவின் அளவில் தவறு செய்து விட்டது. ஒரு ரூபாய் நோட்டின் அளவுள்ள வாக்குச் சீட்டைச் செருகுவதற்கு பதிலாக மடித்து வைக்கலாம் என்று அவர்கள் கருதினர். தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் இந்த வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது, மேலும் ஆயிரக்கணக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் தவறை உணர்ந்ததும், வாக்குச் சீட்டுகளை பெட்டியின் உள்ளே போடுவதற்க்காக பெட்டியின் துளையை பெரிதாக்க உத்தரவிட்டனர்.


பங்கோ ஸ்டீல் பர்னிச்சர் பல்வேறு மாநிலங்களுக்கு போதுமான வாக்குப் பெட்டிகளை தயாரிக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, மெட்ராஸ் மாகானம் மட்டுமே எஃகு மற்றும் மர வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்தியது. இதில் மரப்பெட்டிகள் சிறைக்கைதிகளால் செய்யப்பட்டவை.



வாக்குகளைப் பெறுதல்


வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்கும் வகையில் வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை கொண்டு குறியிடவும் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, ​​தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்துவதில் இருந்து அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பெட்டியைப் பயன்படுத்துவதற்கு மாறியது. வாக்குப்பெட்டிகளின் சேதமடையாத தன்மை பற்றிய கவலைகளையும் இது பகிரங்கமாக எடுத்துரைத்தது. இருப்பினும், தேர்தல்களில் பலத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், சில பிராந்தியங்களில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல் மற்றும் வாக்குச்சீட்டு திணிப்பு போன்ற சம்பவங்கள் வழக்கமாகிவிட்டன. தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை கைப்பற்றுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியது, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது.


பொதுத் தேர்தல்களில் பாரம்பரிய வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படாது. தேர்தல் ஆணையம் இப்போது குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது. வாக்குப்பெட்டி வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தாலும், அந்தக் காலத்தில் நிறுவப்பட்ட கொள்கைகள் இன்னும் நாட்டில் பொதுத் தேர்தல்களுக்கு வழிகாட்டுகின்றன.


எழுத்தாளர் ஒரு சட்டமன்றக் கண்ணோட்டத்தில் சிக்கல்களை பகுப்பாய்வு செய்கிறார் மற்றும் PRS சட்ட ஆராய்ச்சியில் பணியாற்றுகிறார்.




Original article:

Share: