போரின் தன்மை மாறாததாக இருந்தாலும், அதன் மாறிவரும் தன்மையானது இராணுவக் கல்வி (military education) மற்றும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தேவையான கல்விசார் முன்னேற்பாடு (academic preparation) ஆகியவற்றின் மீது அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது.
பண்டைய கிரேக்க சிந்தனையாளரான துசிடிடிஸ் (Thucydides), “எந்த நாடு அதன் அறிஞர்களுக்கும் அதன் வீரர்களுக்கும் இடையே ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துகிறதோ, அதன் சிந்தனை கோழைகளாலும் போர் முட்டாள்களாலும் செய்யப்படும்” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. பல நாடுகள் தங்கள் ஆயுதப் படைகளை புத்திசாலித்தனமாக மாற்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்களைக் (defence universities) கொண்டுள்ளன. உதாரணமாக, இந்த பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், பாகிஸ்தானில் இரண்டும், சீனாவில் மூன்றும் உள்ளன. ஆனால், ஒர் அறிக்கையானது சீனாவில் 60 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இராணுவத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. ஆனால், இந்தியாவுக்கு இன்னும் அதன் சொந்தமாக பாதுகாப்பு பல்கலைக்கழகம் இல்லை, இது மேலும் கவலையளிக்கிறது.
தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி
போரின் தன்மையானது, எப்போதும் ஒரே மாதிரியானது. ஆனால், அது தற்போது மிகவும் சிக்கலானதாகி வருகிறது. இராணுவக் கல்வியும், அதனுடன் தொடர்புடைய பயிற்சியும் முக்கியமானதாக்க வேண்டும். இது இன்றைய, போர்கள் குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில், கணிக்க முடியாத மற்றும் குழப்பமான தன்மையை கொண்டுள்ளது. நிச்சயமற்ற தகவல்கள் மற்றும் வேகமாக மாறிவரும் சூழ்நிலைகளில் கூட இராணுவ அதிகாரிகள் முடிவுகளை வழங்க வேண்டும். அவர்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) அமைப்பு மூலம் அதிகாரமளிக்கப்படுகிறார்கள். இந்த கல்வியானது அவர்களின் தொழில்வல்லுநர்களின் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு தலைமைகளையும் அதிக பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதால் அவர்களின் திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) எவ்வாறு மாறிவிட்டது என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஏனெனில், இது போர்கள் காட்சிபடுத்துதலில் இந்தியா என்ன செய்ய விரும்புகிறதோ அதைப் போன்றது. கோல்ட்வாட்டர்-நிக்கோல்ஸ் பாதுகாப்பு மறுசீரமைப்புச் சட்டம் (Goldwater-Nichols Defense Reorganization Act), 1986 பரந்த அளவிலான கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் (wide-ranging structural reforms) கொண்டுவரும்போது, அமெரிக்க இராணுவத்தின் தொழில்வல்லுநரான 'ஐக்' ஸ்கெல்டன் என்பவர் தொழில்முறை இராணுவக் கல்விக்கு பெரும் அளவில் பங்களித்தார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் அளித்த அறிக்கையானது அமெரிக்க ஆயுதப் படைகளில் இராணுவக் கல்வியை கணிசமாக சீர்திருத்த உதவியது. கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட கற்றல் சார்ந்த இலக்குகளில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. இதில், கல்விக்கான தெளிவான இலக்குகள், சிறந்த ஆசிரியர்கள், கூட்டு அதிகாரிகளுக்கு இரண்டுகட்ட அமைப்பு பயிற்சி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இராஜதந்திரத்திற்கான ஆய்வுகளுக்கு ஒரு புதிய நிறுவனம் ஆகியவற்றை அது பரிந்துரைத்தது. இது முக்கியமானது, ஏனென்றால் இந்தியா தனது இராணுவ பயிற்சியுடன் என்ன செய்ய விரும்புகிறதோ அதைப் போன்றது.
மெதுவான முன்னேற்றம்
இந்திய ஆயுதப்படைகளுக்கு கல்வியில் சிறந்து விளங்குவதில் தொடங்கி வலுவான கல்வி முறை தேவைப்படுகிறது. குறிப்பாக, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1967 ஆம் ஆண்டு தலைமைப் பணியாளர் குழுவினால் பாதுகாப்புச் சேவைகள் பல்கலைக்கழகத்திற்கான (Defence Services University) யோசனை பரிந்துரைக்கப்பட்டது. பின்னர், 1982 இல், பணியாளர் குழுவின் தலைவர்களால் (Chiefs of Staff Committee(COSC)) உருவாக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு, இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian Defence University (IDU)) போன்ற ஆயுதப் படைகளுக்கு ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
சுமார், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கார்கில் மோதலை அடுத்து, இதைப் பற்றி ஆராய டாக்டர் கே.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, மே 2010 இல், குர்கானில், இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian Defence University in Gurgaon) அமைக்க தற்காலிக ஒப்புதல் கிடைத்தது. 2017-18-ஆம் ஆண்டில் சில சாதகமான அறிக்கைகள் இருந்தபோதிலும், இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (Indian Defence University(IDU)) நிறுவுவதற்கான முன்னேற்றம் மெதுவாக உள்ளது.
இந்தியாவின் ஆயுதப் படைகளால் நடத்தப்படும் பல உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில்வல்லுநர்கள் பயிற்சியின் வளமான மற்றும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன. இருப்பினும், அவர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) கட்டமைப்பு மற்றும் இராஜதந்திர சிந்தனைக்கான பல ஒழுங்குமுறை அணுகுமுறைகள் இல்லை. பட்டப் படிப்புகளுக்கான பல்கலைக்கழகங்களுடன் ஆயுதப் படைகள் இணைந்திருந்தாலும், இது உகந்த தீர்வாகாது. இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது (IDU) இந்தியாவின் தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (PME) அமைப்பில் உள்ள இத்தகைய குறைபாடுகளை இராணுவம் மற்றும் சிவில் சேவைகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் நன்கு தகுதியான ஆசிரியர்களின் மூலம் உயர் இராணுவக் கல்வியின் மைய நிறுவனத்தை வழங்குவதன் மூலம் நிவர்த்தி செய்யும். உண்மையில், இந்தக் கோட்பாட்டை நடைமுறையுடன் இணைக்கும்.
பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் அதன் கல்லூரிகள் மற்றும் அதன் மூலம் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களிடையே வேறுபடும். ஆனால், அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகிய இரண்டிலும் தேசிய பாதுகாப்பு (national security) மற்றும் இராணுவம் (defence) தொடர்பான பல்வேறு பாடங்களை உள்ளடக்க வேண்டும்.
இது சரியான யோசனை
இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குஜராத்தில், ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University (RRU)) நிறுவப்பட்டதால், எங்களுக்கு இனி இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) தேவையில்லை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஒப்பீடு நியாயமானதல்ல, ஏனெனில் இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) ஆகியவை வேறுபட்டவை. ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகமானது (RRU), இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) செய்வதைப் போல பாதுகாப்புக் கல்வியில் கவனம் செலுத்தவில்லை. மேலும், அதன் பாடத்திட்டம் போர் மற்றும் திட்டங்களை நிர்வகிப்பதற்கான இராணுவத் தேவைகளைப் பற்றியது மட்டுமல்ல.
இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (IDU) தாமதப்படுத்துவது என்பது பாதுகாப்பு, இராஜதந்திர கலாச்சாரம் மற்றும் இராணுவ சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு நாம் தயாராக இல்லை என்பதாகும். நாம் விரைவில் இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (IDU) ஆரம்பிக்க வேண்டும். அதையொட்டி கூட்டு இராணுவக் கல்வியை ஆரம்பிக்க முடியும் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க உதவும்.
அட்மிரல் கரம்பீர் சிங், PVSM, AVSM, இன் (ஓய்வு), கடற்படையின் 24 வது தலைவராகவும், புதுடெல்லியின் தேசிய கடல்சார் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.