சீனா தனது Chang'e-6 விண்வெளித் திட்டத்திற்கு நிலவின் தொலைதூரப் பக்கத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? -அலிந்த் சௌஹான்

 சந்திரனின் தொலைதூரப் பக்கம் இருண்ட பக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், பூமியிலிருந்து அதை நம்மால் பார்க்க முடியாது என்பதால் மட்டுமே தவிர, சூரிய ஒளி கிடைக்காததால் அல்ல.


மே 3, வெள்ளிக்கிழமை அன்று, சந்திரனின் தொலைதூரப் பக்கத்திற்கு சீனா தனது இரண்டாவது விண்வெளி பயணத்தை செலுத்தியது. இந்தப் பணி, வெற்றிகரமாக இருந்தால், பூமியிலிருந்து நாம் பார்க்க முடியாத சந்திரனின் பக்கத்திலிருந்து மாதிரிகளை கொண்டு வரும் முதல் பணி இதுவாகும்.


இந்த விண்கலத்திற்கு சாங்'இ -6 (Chang'e-6) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Wenchang Space Launch Center) ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஏவப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலமானது அதன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றது. பின்னர், பிரிந்து சென்ற விண்கலம்  சந்திரனுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த பயணம் நிறைவடைய ஐந்து நாட்கள் ஆகும். சந்திரனின் தொலைதூர பக்கத்தை ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. இது சாங்'இ -6 பணி பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.


சந்திரனின் தொலைதூர பக்கத்தை ஏன் ஆராய வேண்டும்?


சந்திரனின் தொலைதூரப் பக்கம் பெரும்பாலும் இருண்ட பக்கம் (dark side) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அது பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது சந்திரனின் தெரியாத பின் பக்கமாக இருப்பதால் மட்டுமே தவிர, சூரிய ஒளி இல்லாததால் அல்ல. சந்திரன் எப்போதும் பூமிக்கு ஒரே பக்கத்தைக் காட்டுகிறது, ஏனெனில் அது ஒரே நிலையில் உள்ளது. அதனால்தான் நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். இது அருகிலுள்ள பக்கம் (near side) என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், மக்கள் தொலைதூரப் பக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், ஏனெனில் இது அருகிலுள்ள பக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இது ஒரு தடிமனான மேலோடு (thicker crust), அதிக பள்ளங்கள் மற்றும் குறைவான மரியாக்களைக் (craters and fewer maria) கொண்டுள்ளது. மரியா (maria) என்பது பண்டைய எரிமலை குழம்புகளால் உருவான படுகைகள், பள்ளங்கள், முகடுகள் ஆகும்.


தொலைதூர பக்கத்திலிருந்து மாதிரிகளைப் ஆய்வுசெய்வது  விஞ்ஞானிகளுக்கு சந்திரனின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிய உதவும். இப்போது வரை, ஆராய்ச்சியாளர்களால் அருகிலுள்ள பக்கத்திலிருந்த மாதிரிகளை மட்டுமே அணுக முடிந்தது. தொலைதூர பக்கத்தின் மாதிரிகள் அருகிலுள்ள பக்கத்திலிருந்து ஏன் மிகவும் வேறுபட்டது என்பதையும் இந்த ஆய்வுகள் மூலம் விளக்கக்கூடும்.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தின் (Johns Hopkins University’s Applied Physics Lab) கிரக புவியியலாளர் பிரட் டெனேவி, இந்த மாதிரிகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை சி.என்.என் க்கு வலியுறுத்தினார். அவற்றைக் கொணர்வது மற்றும் பல்வேறு புவி இயற்பியல் அளவீடுகளை நடத்துவது இந்த நீடித்த மர்மத்தை தீர்க்க முக்கியமானது என்று அவர் கூறினார்.


Chang'e-6 திட்டம் என்ன செய்யும்?


சாங்'இ -6 (Chang'e-6) விண்கலம் 53 நாட்கள் பயணமாகும். இது நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, சந்திரனின் சுற்றுப்பாதையைச் சுற்றி வரும். இதற்கிடையில், லேண்டர் (lander) சுமார் 2,500 கிலோமீட்டர் அகலமுள்ள சந்திர மேற்பரப்பில் உள்ள தென் துருவ-ஐட்கென் படுகையில் (South Pole-Aitken basin) தரையிறங்கும்.


இது சூரிய குடும்பத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தால் உருவான படுகையாகும். இந்த படுகையை உருவாக்கிய தாக்கம் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து தோண்டப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பொருள் சேகரிக்கப்பட்டால், அது சந்திரனின் உள் வரலாறு குறித்த முடிவுகளை  வழங்கக்கூடும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


முதலில், லேண்டர் மூலமாக, ஸ்கூப்பிங் (scooping) மற்றும் துளையிட்டு (drilling) மாதிரிகளை சேகரிக்கிறது. பின்னர், அது ஒரு ஏறும் வாகனத்தைப் பயன்படுத்தி அந்த மாதிரிகளை ஆர்பிட்டருக்கு அனுப்புகிறது. இறுதியாக, ஆர்பிட்டரின் சேவை தொகுதி மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருகிறது.


2019 ஆம் ஆண்டில் சாங்'இ -6 (Chang'e-6) திட்டம் மூலம் சீனா வரலாறு படைத்தது. சந்திரனின் தொலைதூர பக்கத்தில் தரையிறக்கத்தை அடைந்த முதல் சாதனை இதுவாகும். இந்த பணியின் போது, ஒரு ரோவர் சந்திரனின் வான் கர்மன் பள்ளத்தை (Von Karman crater) ஆராய்ந்தது.



Original article:

Share: