உயரும் வலிமை மற்றும் பொறுப்புகள் - மோடி 3.0-க்கு முன்னிருக்கும் ஐந்து புவிசார் அரசியல் சவால்கள் -சி.ராஜா மோகன்

    இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு, உள்நாட்டில் விரைவான வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை விரைவாக அதிகரிக்க சர்வதேச உறவுகளைப் பயன்படுத்த வேண்டும்.


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தனது மூன்றாவது பதவிக்காலத்தை தொடங்கியிருக்கும் நிலையில், உலகளாவிய ஈடுபாட்டில் ஐந்து புதிய கருப்பொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். டெல்லி இப்போது 2014 அல்லது 2019-ல் இருந்து வேறுபட்ட உலகளாவிய சூழலை எதிர்கொள்கிறது. சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்தியா தனது உலகக் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் மற்றும் அதற்கேற்ப தனது உள்நாட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும். கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து கட்டாயங்கள் புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மட்டுமல்ல, அவை முக்கியமான புவிசார் அரசியல் சவால்களாகும். 


முதலாவதாக, சித்தாந்தத்தைவிட தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை தேவைப்படுவதால், பெரும் வல்லரசுகளிடையே போட்டி மீண்டும் எழுவது முதல் சவாலாகும். 1991-ல் பனிப்போர் முடிவுக்கு வந்ததை விட, மேற்கு நாடுகளுக்கும், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான புதிய பதட்டங்கள், 1991 உடன் ஒப்பிடும்போது இந்தியா தனது சர்வதேச உறவுகளை எவ்வாறு நடத்துகிறது என்பதை மாற்றுகிறது. அப்போது, ​​சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, டெல்லிக்கு அனைத்து முக்கிய நாடுகளுடனும் சுதந்திரமான நட்புறவை கொண்டு இருந்தது.

 

இந்தியா அனைத்து முக்கிய சக்திகளுடனும் ஒத்துழைத்து, அணிசேராததில் இருந்து பல அணிகளுக்கு மாறலாம் என்று பலர் நினைத்தனர். இருப்பினும், அந்த நடவடிக்கைகள் இப்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பெரும் சக்திகள் இணைந்திருக்கும் வரை, கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. 2019 முதல், பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள், சுதந்திரமாக ஈடுபடும் இந்தியாவின் சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கிறது.


பல சீரமைப்பு முக்கிய நாடுகளின் உறவுகளில் தவறான சமநிலை உணர்வை உருவாக்குகிறது. இந்த நடவடிக்கைகளினால்  பொருளாதாரம்  மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் பெரிதும் மாறுபடுகிறது. இது எதிர்கால வாய்ப்புகளை பாதிக்கிறது. உதாரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உறவுகள் ரஷ்யாவைவிட மிகவும் வலுவானவை. மாஸ்கோ முன்பு ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்புக் கூட்டாளியாக இருந்தது. இந்தியா இப்போது பலதரப்பட்ட பாதுகாப்புக் கூட்டணிகளைக் கொண்டுள்ளது. சீனாவுடனான இந்தியாவின் பெரிய வர்த்தக உறவு, பெரிய பற்றாக்குறைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக சவால்களை எதிர்கொள்கிறது. புவியியலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது: பனிப்போரின் போது, ​​பெரிய சக்திகள் தொலைவில் இருந்ததை போல் இல்லாமல், இந்தியாவின் அண்டை நாடான மற்றும் இரண்டாவது சக்திவாய்ந்த நாடான சீனா, விஷயங்களை சிக்கலாக்குகிறது. கூடுதலாக, டெல்லி பெய்ஜிங்குடன் ஒரு மோதலில் ஈடுபட்டுள்ளது. இது வாஷிங்டனுடனான அதன் சீரமைப்பு மற்றும் மாஸ்கோவுடனான அதன் நெருக்கத்திலிருந்து வேறுபட்டது. 


உலகளவில் இந்தியாவின் வளர்ந்துவரும் செல்வாக்கு, பெரிய சக்திகளுக்கு இடையே புதிய போட்டிகளை நிர்வகிப்பதில் சில நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இந்தியா முடிவு செய்ய வேண்டும். காலவரையின்றி முடிவுகளைத் தவிர்ப்பது  சிறந்த நடவடிக்கையாக இருக்காது. ஒவ்வொரு தேர்வும் "பல சீரமைப்பு" (“multi-alignment”) மற்றும் "பலமுனை" (“multipolarity”) போன்ற முழக்கங்களை விட நடைமுறை நலன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.


இரண்டாவது புள்ளி, மாறிவரும் உலகப் பொருளாதாரத்தைப் (changing global economy) பற்றியது. இதற்கு இந்தியாவிற்குள் அதிக சீர்திருத்தங்கள் தேவை. 1990-களில், இந்தியா பொருளாதார உலகமயமாக்கலை (economic globalization) ஏற்றுக்கொண்டது. ஆனால், இப்போது அது உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும் புவிசார் அரசியலில் இருந்து சவால்களை எதிர்கொள்கிறது. 2019-ஆம் ஆண்டில் ஆசிய அளவிலான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை பேச்சுக்களில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) இருந்து வெளியேறுவதன் மூலம் பொருளாதார உலகமயமாக்கலை ஆதரிப்பதில் இருந்து மோடி அரசாங்கம் விலகிச் சென்றுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான மேற்கத்திய பொருளாதாரங்களின் முயற்சிகள் உலகளவில் இந்தியா தனது பொருளாதார நிலையை மேம்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.


ஆனால், இந்த வாய்ப்புகளை டெல்லி இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இது நம்பகமான புவியியல், பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகள் மற்றும் முக்கிய கூட்டாளிகளுடன் அதிக வர்த்தகம் பற்றி பேசுகிறது. ஆனால் இந்த யோசனைகளை உண்மையான வர்த்தக முடிவுகளாக மாற்றவில்லை. அதே நேரத்தில், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கான அரசாங்கத்தின் திறன் 2024 தேர்தலின் முடிவுகளால் குறைந்துள்ளது என்ற கவலையும் உள்ளது. அரசாங்கத்தின் உறுதிப்பாடு மற்றும் உள்நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான திறன் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்வது புதிய நிர்வாகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும்.


மூன்றாவதாக, நடந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பப் புரட்சியானது உலகளாவிய சக்தி இயக்கவியலை மறுவடிவமைப்பதோடு இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையேயான போட்டி ஒரு முக்கிய அம்சமாகும். இந்த மாற்றம் இந்தியா தனது மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களால் சமீபத்தில் விவாதிக்கப்பட்ட அமெரிக்காவுடனான முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (initiative on critical and emerging technologies (iCET)) பற்றிய முன்முயற்சி இந்தப் போக்கை விளக்குகிறது. எவ்வாறாயினும், இந்த வாய்ப்புகளிலிருந்து முழுமையாகப் பயனடைய, இந்தியா தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை நவீனமயமாக்க வேண்டும். இது நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.


நான்காவதாக, பழைய புவியியல் எல்லைகளை மீறும் புதிய பகுதிகளின் தோற்றத்திற்கு டெல்லி சரிசெய்ய வேண்டும். கடந்த பத்தண்டுகளில்  இந்தோ-பசிபிக்கின் எழுச்சி தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற ஒருங்கிணைந்த பகுதிகளை கொண்டுள்ளது. அரபு வளைகுடாவின் பொருளாதார வலிமை, ஆப்பிரிக்காவின் விரைவான வளர்ச்சி மற்றும் தெற்கில் ஐரோப்பாவின் விரிவாக்கம் செல்வாக்கு அதன் மேற்கு எல்லைகளைத் தாண்டி இந்தியாவுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) போன்ற முன்முயற்சிகள் எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. டெல்லி ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்பு கொள்ள அதிக இராஜதந்திர, அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு வளங்களை ஒதுக்க வேண்டும், இந்த பிராந்தியங்களை தனித்தனி நிறுவனங்களாகக் கருதும் காலாவதியான கருத்துக்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.


ஐந்தாவதாக, இந்தியாவின் வளர்ச்சி குறித்து டெல்லி பேசுவதை குறைக்க வேண்டும். செயலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். $4-டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது. இருப்பினும், இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $2,800 மட்டுமே. குறிப்பிடத்தக்க வளர்ச்சி சவால்களுடன், நாட்டிற்குள் அதிகரிக்கும் சமத்துவமின்மையின் தீவிரமான பிரச்சினையும் உள்ளது. இந்தியாவின் உயரும் உலகளாவிய செல்வாக்கு உள்நாட்டு செழிப்பு மற்றும் நேர்மையை விரைவுபடுத்த சர்வதேச உறவுகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


பல வளர்ந்து வரும் சக்திகள் உலகளாவிய முக்கியத்துவத்திற்கான பாதையில் பின்னடைவை எதிர்கொண்டதை டெல்லி நினைவுபடுத்த வேண்டும். டெல்லி இப்போது அதிக நம்பிக்கையுடன் இருப்பது நல்லது என்றாலும், அது வெகுதூரம் செல்லும் அபாயங்களைத் தவிர்க்க வேண்டும். இந்தியா வரவிருக்கும் சவால்களை குறைத்து மதிப்பிடுவது முக்கிய விவகாரங்களில் முடிவுகளை தாமதமாக எடுப்பது டெல்லிக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


கட்டுரையாளர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராகவும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியராகவும் உள்ளார்.


Share: