குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-ன் கீழ் விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்களின் உரிமைகளை முஸ்லீம் பெண்கள் சட்டம் 1986 (Muslim Women Act, 1986) எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொஹமட் அப்துல் சமத் எதிராக தெலுங்கானா மாநிலம் (Mohd Abdul Samad vs The State of Telangana) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில், விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்கள் 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 125-ன் கீழ் ஜீவனாம்சம் கோரலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த தீர்ப்பு 1985-ல் ஷா பானோ வழக்கில் (முகமது அகமது கான் எதிராக ஷா பானோ பேகம்) சர்ச்சைக்குரிய உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 முதல் கடந்து வந்த பாதையை குறிக்கிறது. இந்தச் சட்டம் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு இரண்டு புதிய உரிமைகளை வழங்கியது: ஒன்று, முஸ்லீம் பெண்களுக்கு இத்தாத் காலத்தில் பராமரிப்பு கோருவதற்கான உரிமையை வழங்கியது மற்றும் எதிர்காலத்திற்கான நியாயமான நிதி தேவைகளை அவர்கள் பெறுவதை உறுதி செய்தது.
முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகும், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 125-ன் கீழ் வழக்கு தொடரலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் முடிவு செய்தது. பல்வேறு உயர்நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் குழப்பம் நிலவி வந்தது. இப்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-வது பிரிவின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்களின் பராமரிப்பு உரிமையை முஸ்லீம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் பறிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
கணவரால் கைவிடப்பட்ட மனைவி, 125-வது பிரிவின் கீழ் தெலுங்கானாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மாதம் ரூ.20,000 ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தார். கணவர் அவரை விவாகரத்து செய்த பிறகு, அவரால் இனி பராமரிப்புத் தொகையை கோர முடியாது என்று வாதிட்டார். அவரது உரிமைகள் இப்போது முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. 1986-ல் இயற்றப்பட்ட முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு, 1973-ன் பிரிவு 125 உடன் ஒப்பிடும்போது, விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குகிறது. தெலுங்கானா உயர் நீதிமன்றம் இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்தது. ஆனால், பராமரிப்புத் தொகையை மாதம் 10,000 ரூபாயாகக் குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஜூலை 10-அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் மனைவிக்கு ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமையை உறுதி செய்தது. இந்த விதி சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இந்த உரிமையை தவிர்க்க முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்த தீர்ப்பின் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள முன்மாதிரி
டேனியல் லத்திஃபி மற்றும் அதர் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா (2001) (Danial Latifi and Another vs Union of India,2001) வழக்கில், உச்சநீதிமன்றம் புதிய சட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தது. உச்சநீதிமன்றத்தில் ஷா பானோ சார்பில் ஆஜரான டேனியல் லத்திஃபி முக்கியப் பங்கு வகித்தார். ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சட்டத்தின் அரசியலமைப்பை உறுதிசெய்தது மற்றும் விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிரிவு 3(a)-ஐ தற்போதைய காலத்திற்கு ஏற்ப விளக்கியது. மூன்று மாத இத்தாத் காலத்திற்கு முன்னாள் கணவர் பராமரிப்புத் தொகை செலுத்த வேண்டும். கூடுதலாக, அவர் இந்த நேரத்தில் மனைவினுடைய முழு வாழ்க்கைக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (இத்தாத் காலம் என்பது விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் மறுமணம் செய்ய முடியாத கட்டாய மூன்று மாத காலமாகும்.)
விவாகரத்து பெற்ற மனைவியின் எதிர்காலத் தேவைகளை கருத்தில்கொண்டு கணவன் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. டேனியல் லத்திஃபி (Danial Latifi) தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தபோது, கேள்விக்குரிய முக்கியப் பிரச்சினை இதுவல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டது.என்று நீதிமன்றம் தீர்மானித்தது. எவ்வாறாயினும், 1986-ஆம் ஆண்டு சட்டம் பிரிவு 125 உரிமைகளை பறிக்கவோ அல்லது அகற்றவோ விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இரண்டு சட்டங்களும் வெவ்வேறு பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது: மதச்சார்பற்ற சட்டத்தின்படி, குறிப்பிட்ட தன்னைத்தானே ஆதரிக்க முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், 1986-சட்டத்தின் பிரிவு 3 பொருந்தும். இந்த முரண்பட்ட சட்டங்களைக் கையாள ஒரு சமநிலையான வழியைக் கண்டறிவதன் மூலம், விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்ணுக்கு, நாட்டில் உள்ள மற்ற பெண்களைப் போன்றே ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமை உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு தடையாக இருக்கும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 21-வது பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறும். இந்த சட்டங்களின் கீழ் ஒரு குற்றவியல் நீதிபதிக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் தண்டிப்பதற்கோ அல்லது சரிசெய்வதற்கோ அல்ல, மாறாக பிரச்சினைகளைத் தடுப்பதற்கே உரிமைகளை வழங்கியுள்ளது. தனிப்பட்ட சட்டங்களின் கீழ் உள்ள உரிமைகள், அவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை மதச்சார்பற்ற சட்டத்தால் பாதிக்கப்படாமலும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1980-ஆம் ஆண்டில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஃபுஸ்லுன்பி வி கேதர் வாலி மற்றும் மற்றொரு (Justice V R Krishnaiyer in Fuzlunbi v K Khader Vali and Another) வழக்கில், பிரிவு 125 எந்தவொரு குறிப்பிட்ட மதம் அல்லது பிராந்தியத்திற்கு கட்டுப்படாமல் அனைத்துப் பெண்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறினார்.
எழுத்தாளர் ஒரு பெண்கள் உரிமை வழக்கறிஞர் மற்றும் மஜ்லிஸின் நிறுவனர் ஆவார்.