ராக்கெட்டின் 354வது பயணத்தின் போது இந்த விபத்து நடந்தது, 2015 க்குப் பிறகு ஃபால்கன் 9 (Falcon 9) தோல்வியடைவது இதுவே முதல் முறை.
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Aviation Administration (FAA)) வெள்ளிக்கிழமை ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 (Falcon 9) - உலகின் மிகவும் சுறுசுறுப்பான ராக்கெட்டுகளில் ஒன்றாகும் - அதன் மேல் நிலை இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் 20 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை (20 Starlink internet satellites) குறைந்த, தாழ்வட்ட சுற்றுப்பாதையில் நிறுத்தியது. இந்த தோல்வியுற்ற பணிக்குமுன், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஃபால்கன் 9 300 விமானங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
பால்கன் 9 என்றால் என்ன?
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸால் உருவாக்கப்பட்ட ஃபால்கன் 9, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் ஆகும். இது குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு (2000 கிமீ அல்லது அதற்கும் குறைவானது) மற்றும் அதற்கு அப்பால் வின்வெளி வீரர்கள் மற்றும் பேலோடுகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டில் இரண்டு நிலைகள் உள்ளன. பூஸ்டர் நிலை என அழைக்கப்படும் முதல் கட்டத்தில், ஒன்பது மெர்லின் இயந்திரங்கள் மற்றும் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் எரிபொருளை வைத்திருக்கும் அலுமினியம்-லித்தியம் அலாய் தொட்டிகள் உள்ளன. இரண்டாவது கட்டத்தில் ஒரு மெர்லின் இயந்திரம் உள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய முதல் நிலை வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, இரண்டாவது நிலையிலிருந்து பிரிந்த பிறகு செங்குத்தாக தரையிறங்கும்.
பால்கன் 9 இல் என்ன தவறு நடந்தது?
வியாழன் இரவு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து பால்கன் 9 ஏவப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சிக்கல் எழுந்தது. ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அவற்றின் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த தேவையான இரண்டாவது எஞ்சினை இயக்க முடியவில்லை. இந்த தகவல் SpaceX-ன் இணையதளத்தில் ஒரு பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
"சுற்றுப்பாதையின் மிகக் குறைந்த புள்ளியை உயர்த்துவதற்காக மேல் நிலை இயந்திரத்தின் திட்டமிட்ட மறுதொடக்கத்தின் போது, மெர்லின் வெற்றிட இயந்திரத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது மற்றும் அதன் இரண்டாவது எஞ்சினை இயக்கி முடிக்க முடியவில்லை," என்று SpaceX விளக்கியது.
செயற்கைக்கோள்களை செலுத்தும் நிலையில் பிழை ஏற்பட்டது, ஆனால் அவற்றை நிலையான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடியவில்லை. இதன் விளைவாக, செயற்கைக்கோள்கள் இப்போது 135 கிலோமீட்டர்கள் (84 மைல்கள்) குறைந்த சுற்றுப்பாதையில் உள்ளன, இது உத்தேசிக்கப்பட்ட உயரத்தில் பாதிக்கும் குறைவானது.
தாழ் வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் முற்றிலும் எரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மற்ற செயற்கைக்கோள்கள் அல்லது பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று SpaceX உறுதியளித்தது.
இந்த சம்பவம் ராக்கெட்டின் 354 வது பயணத்தின் போது நடைபெற்றது மற்றும் 2015க்குப் பிறகு ஃபால்கன் 9 இன் முதல் தோல்வியாகும், இதற்க்கு முன் புளோரிடாவில் ஒரு ஏவுதளத்தில் ராக்கெட் வெடித்தது. இதுவரை உருவாக்கப்பட்ட மிக வெற்றிகரமான மற்றும் நம்பகமான ராக்கெட்டுகளில் ஒன்றாக ஃபால்கன் 9 பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த அரிய தோல்வியானது பால்கன் 9-ன் ஏவுதல்களின் வேகத்தை குறைக்கும். 2023-ஆம் ஆண்டில் மட்டும், ராக்கெட் 96 முறை ஏவப்பட்டது, இது ஒரு வருடத்தில் எந்த நாடும் ஏவப்பட்ட மொத்த எண்ணிக்கையை மிஞ்சும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஒப்பிடுகையில், அமெரிக்காவின் முக்கிய விண்வெளிப் போட்டியாளரான சீனா, 2023-ல் பல்வேறு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி 67 பயணங்களை மேற்கொண்டது.
பால்கன் 9 (Falcon 9)-ன் தரையிறக்கம் விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதைக்கு மேற்கொள்ளும் பயணங்களை தாமதப்படுத்தலாம். தொழில்முனைவோர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான தனியார் போலரிஸ் டான் பணி ஜூலை இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆகஸ்ட் நடுப்பகுதியில் நாசாவுக்கான சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station (ISS)) நான்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது - ஃபால்கன் 9 மட்டுமே நாசா விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்ட ஒரே அமெரிக்க ராக்கெட் ஆகும்.
ஸ்பேஸ்எக்ஸ் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, சிக்கலைச் சரிசெய்து, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனிடமிருந்து (FAA) ஒப்புதல் பெறும் வரை ராக்கெட் ஏவப்படாது.