சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய விவாதத்தின் போலித்தனம் -எம் என் பாணினி

 காலநிலை பேரழிவுகளுக்கு வளர்ச்சி எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதை பல எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. எவ்வாறாயினும், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சியே வளர்ச்சியாகும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின்  வேலைப்பளுவை  கணிசமாகக் குறைக்க முடியும்.    


இந்தியா முழுவதும் உள்ள சமூக இயக்கங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இயங்கி வருகின்றன.  கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நர்மதா பள்ளத்தாக்கு திட்டம், உத்தரகண்டில் சிப்கோ இயக்கம் போன்ற திட்டங்களுக்கு எதிரான இயக்கங்கள் மனித உயிர்வாழ்வுக்கு மரங்கள், காடுகள், மண், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த இயக்கங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வளர்ச்சிக்கான தேவைகளை பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த இயக்கங்கள் தெரிவிக்கின்றன.


சுரங்கம், எஃகு ஆலைகள், அணுசக்தி ஆலைகள், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, அணைகள், கால்வாய்கள், ஆழ்குழாய் கிணறு பாசனம், கலப்பின விதைகள், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு பாரிய சுற்றுச்சூழல் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டும் ஆதாரங்களை சுற்றுச்சூழல் நிபுணர்கள் சேகரித்துள்ளனர். இந்த வளர்ச்சி சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு  வழிவகுக்கும். இதன் விளைவாக எதிர்பராத வானிலை மாற்றம், புயல்கள், அதிக மழை, வெள்ளம், வெப்ப அலைகள், தொற்றுநோய்கள், புகைமூட்டம் மற்றும் மாசுபாடு போன்ற இயற்க்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.  


ஆனாலும், வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது. சுதந்திரம் பெற்ற பிறகு, நாம் விரைவான தொழில்மயமாக்கலை ஏற்றுக்கொண்டோம். திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் பாரம்பரிய சமூகத்தையும் பின்தங்கிய பொருளாதாரத்தையும் நவீன தேசமாக மாற்றும் என்று அரசாங்கம் நம்பியது. காந்தியின் ஹிந்த் ஸ்வராஜ் (Hind Swaraj model) மாதிரி, மறுபுறம், குடிசைத் தொழில்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவித்து அவர் கற்பனை செய்த கிராமக் குடியரசுகளை மீண்டும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆரம்பத்தில், அரசாங்கம் மட்டுமே "வளர்ச்சியில்" கவனம் செலுத்தியது. இருப்பினும், மக்கள் அனைத்து சமூகப் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுத்தனர். இது தனிநபர்கள், சாதிகள் மற்றும் சமூகங்களுக்கான உரிமைகளின்  கோரிக்கையாக மாறியது. 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதாக கூறி பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.  

 

வெளிப்படையான நுகர்வு மற்றும் நுகர்வோர் இந்த தேவைகளின் அவசியத்தை குறிக்கிறது. ஆனால், காந்தியவாதிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதை வெறுக்கிறார்கள். இருப்பினும், வளர்ச்சி என்பது தனிநபர்கள் மற்றும்  சமூகத்தில் மிகவும் பின்தங்கிய சாதிகள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சியாகும்.  நுகர்வு பயன்பாடு சமூக அந்தஸ்தைக் குறிப்பதால், சமூகத்தில் பின்தங்கிய மக்களில் பலர் மேல் அடுக்கு மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் சுயமரியாதையை உறுதிப்படுத்துகின்றனர். நகர்ப்புற உயரடுக்கு மக்கள் இந்த மாற்றத்தை மோசமான நுகர்வோர் என்று கருதலாம். ஆனால், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் தங்கள் சமூக அடையாளங்களை உறுதிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.  


உழைக்கும் ஏழை மக்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களை பயன்படுத்த முடிந்தால், அது உடல் சோர்வை கணிசமாகக் குறைக்கும். புதிய இயந்திரங்கள் கையால் துடைப்பதை அகற்றினால், அதனுடன் தொடர்புடைய களங்கத்தையும் அகற்றலாம்.    


சர்க்காவால் (charkha) செய்யப்பட்ட காதி துணி, அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால், தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு தகுந்த குழி வழங்கப்படுதில்லை. பணக்காரர்கள் சிக்கனத்தைக் காட்ட காதியை அணிந்தாலும், அதன் தயாரிப்பாளர்கள் செயற்கை மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்ட ஆடைகளை அதிக காலம் நீடிக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ஆடைகளை விரும்புகிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பினர், வளர்ச்சிக் கொள்கைகளிலிருந்து பயன் பெறாமல், உற்பத்தி, நுகர்வு மற்றும் விநியோகம் பற்றி முடிவெடுப்பதில் ஈடுபட விரும்புகிறார்கள். வளர்ச்சிக்கு ஒரு விடுதலைப் பக்கமுண்டு என்பதை இது காட்டுகிறது. வளர்ச்சிக்கான உரிமையை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமையாகக் கருதுவதில் ஆச்சரியமில்லை.           


அறிஞர்களும் கொள்கை வகுப்பாளர்களும் வளர்ச்சியினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முயற்சித்து வருகின்றனர்.  அவர்கள் நிலையான அல்லது மாற்று வளர்ச்சியின் மாதிரிகளைக் கண்டறிய முயன்றனர். ஆனால், இந்த மாதிரிகள் எப்போதும் நிலையானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, ஜெர்மனியின் பசுமைக் கட்சி கதிர்வீச்சு அபாயங்கள் காரணமாக அணுசக்தி ஆலைகளை மூடியது. உக்ரைன் போரின் போது ரஷ்யாவிலிருந்து வரும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பது அதிகரித்தது. லித்தியம் பேட்டரிகள் ஒரு தூய்மையான ஆற்றல் மாற்றாகக் கருதப்படுகின்றன. ஆனால், லித்தியம் சுரங்கம் மற்றும் பயன்படுத்தப்பட்ட   பேட்டரிகளை அகற்றுவது மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மற்ற பசுமை தொழில்நுட்பங்களிலும் இது  போன்ற சிக்கலை ஏற்படுத்துகின்றன.  


பிரச்சனை என்னவென்றால், சுற்றுச்சூழல் நிபுணர்களின் அறிவுரைகளை நாம் பின்பற்றினால், நாம் வளர்ச்சி அடைவது கடினமாகிவிடும். வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பதில் கவனம் செலுத்திய பழங்காலக் கால வாழ்க்கை முறை, மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், அந்த காலத்திற்குத் திரும்புவதே உண்மையான வளர்ச்சி. ஹோமோ சேபியன்கள் குடியேறிய விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது, ​​அவர்களின் பரிணாம வளர்ச்சியில் தவறான திருப்பத்தை எடுத்திருக்கலாம். 


நாம் வளர்ச்சிக்கான பாதையில் இருந்து பின்வாங்க வேண்டுமா? ஒரு புதிய சிந்தனைப் பள்ளி சுற்றுச்சூழலில் ஆதிக்கம் செலுத்தும் காலநிலை மாற்ற ஆய்வறிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. அதிகரித்த கார்பன் டை ஆக்சைடு தாவரங்களுக்கு நன்மை பயக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பரிணாம உயிரியலாளர்கள் புவியியல் சக்திகளால் குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்ததாக  கூறுகின்றனர். மனித வளர்ச்சியின் காரணமாக பேரழிவு ஏற்படுவது, தொடர்ச்சியான சுழற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  காலநிலை அடிக்கடி மாறலாம். இந்த அறிவியல்பார்வைகளை நாம் கருத்தில் கொண்டால், வளர்ச்சியைக் குறை கூறுவது தவறு என்றுத் தோன்றுகிறது. நீண்ட மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மனித தேவைகளைக் கண்டிப்பதும் தவறாகத் தெரிகிறது.



Original article:

Share: