இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிந்து நதி : காலநிலை மாற்றம் என்பது ஓர் ஒப்பந்தத்தின் மறுசீரமைப்பு - பூமிகா சர்மா

 காலநிலை மாற்றத்தை ஒரு பொதுவான அச்சுறுத்தலாக அங்கீகரிப்பது மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் நதி மேலாண்மையிலிருந்து முழுமையான வடிநில மேலாண்மைக்கு கவனம் செலுத்துவது, ஒப்பந்தத்தை மேம்படுத்துவதோடு இருநாடுகளுக்கிடையேயான உறவுகளையும் வலுப்படுத்தும்.


1960-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட  சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty (IWT)), இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முக்கிய நீர் பகிர்வு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்திற்கு உலக வங்கி ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு, வேறுபாடுகளை சரி செய்யும் வகையில், ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய இந்தியா விரும்பியது. பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாக குறிப்பிட்டது. இதற்குப் பதிலடியாக, ஒப்பந்தத்தின் நடுநிலை நிபுணர் நடவடிக்கைகளைத் தவிர்த்து, இந்தியாவின் கிஷெங்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஹேக்கில் உள்ள நடுவர் மன்றத்தை பாகிஸ்தான் நாடியது.


காலநிலை தொடர்ந்து மாறிவருவது, ஒப்பந்தத்தை திருத்த வேண்டிய தேவையை உருவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டில், நாசா சிந்துப் படுகையை உலகின் இரண்டாவது மிக அதிக அழுத்தமுள்ள (over-stressed aquifer) நீர்நிலையாக மதிப்பிட்டது. படுகையின் ஓட்டத்தில் சுமார் 31% காலநிலை-மாற்றத்தால்  உருகிய  பனிப்பாறைகளிலிருந்து வருகிறது. கணிக்க முடியாத பருவமழை போன்ற பிற காரணிகளும் நீர் ஓட்டத்தின் அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாகும்.


சிந்து சமவெளியில் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி இரு நாட்டின் பொருளாதாரங்களுக்கு மிகவும் முக்கியமானது.  சிந்து நதி, பாகிஸ்தானின் விவசாய உற்பத்தியில் 90% பங்களிக்கிறது  மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும். அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் நுகர்வு அதிகரிப்பால், நீர் தரம் மோசமடைவது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, மனித ஆரோக்கியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் கட்டமைப்பிற்குள் உள்ள சர்ச்சைகள் முக்கியமாக கீழ்நிலை ஓட்டங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் தாக்கம் மற்றும் குறைந்த நதிக்கரை நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நம்பிக்கையின்மை காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எற்படாமல் உள்ளது. ஷாபுர்கண்டி தடுப்பணை திட்டத்தில் (Shahpurkandi barrage project) இந்தியாவை "நீர் பயங்கரவாதம்" (water terrorism) என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது ஓர் சமீபத்திய உதாரணம். இருப்பினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ரவி ஆற்றில் நீர் ஓட்டம் கணிசமாக இல்லை. பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மின்சாரம் மற்றும் விவசாய வளர்ச்சியை ஆதரிக்க, சிந்து நதி நீர் ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளபடி, ஆற்றின் ஓட்டத்தை இந்த அணை நெறிப்படுத்தும். 


"மேல் vs கீழ் நதிக்கரை" (“upper vs lower riparian”) என்ற அரசியல், எல்லை தாண்டி, பாகிஸ்தானுக்குள், குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து இடையே பதட்டங்களை ஏற்படுத்துகிறது. அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில், இந்த குறுகிய பார்வைக்கு அப்பால் சென்று சிந்து நதிப் படுகையை ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொள்வது அவசியம். 


முதலாவதாக, ஒப்பந்தத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் சூழலியல் கண்ணோட்டத்தை கருத்திக்கொள்வது அவசியம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்குள் சுற்றுச்சூழல் ஓட்டங்களை (Environmental Flows) ஏற்றுக்கொள்வது, ஒதுக்கீடு செய்தல் மற்றும் செயல்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். பிரிஸ்பேன் பிரகடனம் (Brisbane Declaration) மற்றும் சுற்றுச்சூழல் ஓட்டத்திற்கான உலகளாவிய நடவடிக்கை செயல்திட்டம் (2018) (Global Action Agenda on Environmental Flows (2018))  இன் படி, சுற்றுச்சூழல் ஓட்டங்கள் (Environmental Flows) என்பது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தக்கவைக்க தேவையான நன்னீர் ஓட்டங்களின் அளவு ஆகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித கலாச்சாரங்கள், பொருளாதாரங்கள், நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கின்றன. 


1997 ஐக்கிய நாடு நீர்வழிகள் மாநாட்டின் (UN Watercourses Convention) கொள்கைகளுடன் சுற்றுச்சூழல் ஓட்டங்களை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மாநாடு ஊடுருவல் அல்லாத நீர் பயன்பாட்டிற்கான சர்வதேச சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது. இது இரண்டு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது: நியாயமான பயன்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க எல்லை தாண்டி பிரச்சனைகள் ஏற்படுத்தவாறு பார்த்து கொள்வது ஆகியவையாகும்.

 

நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் மற்றும் எல்லை கடந்த ஆறுகளில் சுற்றுச்சூழலைப் பராமரித்தல் ஆகியவையும் சர்வதேச மரபுச் சட்டத்தில் (international customary law) குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக 2004 பெர்லின் நீர் வளங்கள் விதிகள் (Berlin Rules on Water Resources) இதை குறிப்பிடுகிறது. இந்த விதிகளின் பிரிவு-24, வடிகால் படுகையின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க போதுமான ஓட்டங்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இருநாடுகளும் எடுக்க வேண்டும்.  


ஜீலம் நதியின் கிளை நதியான கிஷன்கங்கா (Kishanganga) மீது இந்தியாவின் அணை தொடர்பான 2013 வழக்கில், நிரந்தர நடுவர் நீதிமன்றம், இந்தியா சுற்றுச்சூழலுக்கான நீரோட்டங்களை பாகிஸ்தானுக்கு கீழே விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த முக்கியமான தீர்ப்பு, எல்லைகடந்த நதிப் படுகைகளில் சுற்றுச்சூழல் ஓட்டங்களை பராமரிப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.


இரண்டாவதாக, சிந்துப் படுகையின் நீரியல் மீது காலநிலை மாற்ற தாக்கங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றிய நுணுக்கமான புரிதல் தேவை. இதற்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ்நேர தரவுப் பகிர்வுக்கான வலுவான நெறிமுறையை உருவாக்குவது மற்றும் நீரின் தரத்தை மதிப்பிடுவது அவசியம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு  தரவுப் பகிர்வு தேவைப்பட்டாலும், அது முறையான வழிமுறையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது. 


காலநிலை மாற்றத்தை ஒரு பொதுவான அச்சுறுத்தலாக அங்கீகரிப்பது மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் நதி மேலாண்மையிலிருந்து முழுமையான வடிநில மேலாண்மைக்கு மாறுவது ஒப்பந்தத்தின் செயல்திறனை மேம்படுத்தும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய எல்லை தாண்டிய காலநிலை ஒத்துழைப்பிற்கான முன்மாதிரியாக செயல்படும்.  


கட்டுரையாளர் ஆசிய பசிபிக் அமைப்பின் செயல் தலைவர் ஆவார்.



Original article:

Share: