ஆர்.சம்பந்தன் தமிழர் பிரச்சினையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை, ஆனால் அவர் குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒரு உறுதிபடுத்தும் சக்தியாகக் காணப்பட்டார்.
இலங்கை தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் காலமானார். அவரது மரணம் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த உள்நாட்டுப் போரின் அதிர்ச்சியை தமிழர்கள் இன்னும் எதிர்கொள்கின்றனர். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் சம்பந்தன் பெரிய முன்னேற்றத்தை அடையாவிட்டாலும், குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர் ஒரு உறுதிபடுத்தும் சக்தியாகக் காணப்பட்டார். சிங்களத் தலைமைகள் உட்பட அனைவருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழர் தலைவர்
1949 இல் இலங்கை தமிழ் அரசு கட்சியை (Ilankai Tamil Arasu Katchi (ITAK)) நிறுவிய எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைப் பின்பற்றிய சம்பந்தன், 1977 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை (ITAK)-ஐ உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (Tamil United Liberation Front (TULF)) 17 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக முதன்முதலில் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தொகுதிகளில் தனி மாநிலத்தை வாதாடி வெற்றி பெற்றது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறையால் பல தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதற்க்கு வழிவகுத்தது, இனப்பிரச்சினையில் புதுடெல்லியை தலையிட தூண்டியது. 1984-ல் ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானபோது இந்தியாவின் நிலைப்பாடு மாறியது.
ராஜீவ் காந்தியின் தலைமையின் கீழ், தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாறியது. ஒரு காலத்தில் தமிழர்களின் ஒரே குரலாகக் கருதப்பட்ட இந்தக் கூட்டணி, இலங்கைக்குள் ஒரு அரசியலமைப்பு தீர்வை நோக்கமாகக் கொண்ட 1985 திம்பு பேச்சுவார்த்தைகளில் (Thimpu talks seeking) ஈடுபட்டதை போல, பல பிரதிநிதிகளில் ஒன்றாக மாறியது. பின்னர் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணக்கமான செயல்பாட்டைத் தொடங்கியது. 13 வது சட்ட திருத்தத்தின் (13th Amendment) கீழ் கட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியுடன் மாகாண சபைகளை உருவாக்க 1987 ஜூலையில் ராஜீவ்-ஜெயவர்தன உடன்படிக்கை (Rajiv-Jayawardene Accord of July 1987), இந்தியா பிரதமர் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர்களை விலக்கியது. இந்த மாற்றம் சம்பந்தனுக்கும் ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உடன்படிக்கை இருந்த போதிலும், தமிழ் தலைவர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்காததால், 1985 முதல் 2000 வரை புலிகளின் நடவடிக்கைகளில் நீலன் திருச்செல்வம் மற்றும் அ.அமிர்தலிங்கம் போன்ற அறிஞர்களும் மிதவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2000களில், சம்பந்தன் சில முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் (Liberation Tigers of Tamil Eelam) குறிவைக்கப்பட்டவராய் இருந்தாலும், சம்பந்தன் 2001 பாராளுமன்றத் தேர்தலின் போது புலிகளின் நோக்கத்தை நடைமுறையில் ஆதரிக்கத் தொடங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் 2001ல் நிறுவப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance (TNA)), இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரித்தது. 2000ல் ஐந்து இடங்களை வென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 2001ல் 15 இடங்களாக அதிகரித்தது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 109 இடங்களில் வென்று ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியது. அடுத்த ஆண்டு, 2002ல், விக்ரமசிங்கேவின் அரசு, விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நார்வே நாடு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்தது.
2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தீவிர மோதலைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தினார். 2009ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அரசியல் தீர்வைக் காண்பது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவ்வப்போது அரசாங்கத்துடன் உடன்படவில்லை. எவ்வாறாயினும், கடந்த 15 வருடங்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு முக்கிய தேர்தலிலும் எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்காமல் பங்கேற்றுள்ளது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் முதலமைச்சர் சி.வி. சம்பந்தனால் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் (2013-2018) தோல்வியடைந்தார். 2010 மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தல்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆதரித்தது: விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்த ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன எதிர்பாராதவிதமாக ராஜபக்சேவை தோற்கடித்தபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
பொருளாதார சீரமைப்பு
உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சம்பந்தனின் ஆக்கபூர்வமான செயல்பாடு, நீதி மற்றும் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அடைவதில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மறுசீரமைப்புக்கு அவர்கள் முன்னுரிமை அளித்தனர். அவர்கள் கூட்டாட்சி மற்றும் தனி உரிமையை இலக்காகக் கொண்டிருந்தனர், இருப்பினும் இந்த இலக்குகளை அடைய முடியவில்லை.
ராஜபக்சே 2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்க்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ள நிலையில், துரதிஷ்டவசமாக, சம்பந்தன் தலைமையிலான அரசு இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
இலங்கைத் தமிழ் சமூகத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் மேற்கு நாடுகளுக்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை விட்டுவிட்டு, சிங்களத் தலைமையுடன் அதிக அதிகாரங்களைப் பகிர்வதற்கான பேச்சு வார்த்தையினால் எந்தப் பயனும் இல்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இளைஞர்கள் திறமையற்ற தொழிலாளர்களுக்காகவும், மேலதிக கல்விக்காகவும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதை விரும்புகிறார்கள். இந்த பிராந்தியங்களில் பொருளாதார பலம் இல்லா நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
சம்பந்தனின் இறுதிக் காலத்தில் அவர் தனது அரசியல் குழுவிற்குள் தனிமைப்படுத்தப்பட்டவராகத் இருந்தார். இது இலங்கைத் தமிழர்கள் சமூகத்திலிருந்து விலகியிருப்பதைப் பிரதிபலிக்கிறது, பெரும்பாலும் சிங்களத் தலைவர்கள் தங்கள் செயல்திட்டங்களை நிவர்த்தி செய்யத் தவறியதன் காரணமாக, தமிழ் அரசியல் தலைவர்கள் இப்போது தமிழர்களுக்கு அதிக பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதிலும், இளைஞர்கள் உயர் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் மீதான தார்மீகப் பொறுப்பைக் கொண்ட இந்தியா, சம்பந்தன் பரிந்துரைத்ததைப் போல, "ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத" (united, undivided, indivisible) இலங்கையில் தமிழ் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.