பாபா சித்திக் கொலை வழக்கு : எலும்பு பகுப்பாய்வு சோதனை எவ்வாறு செயல்படுகிறது? மற்றும் சட்டத்தில் அதன் பயன்பாடு -சதாஃப் மோதக்

 பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மும்பை நீதிமன்றத்தில் தன்னை 17 வயதாகக் கூறி அவரை இளம் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று கூறியது எலும்பு பகுப்பாய்வு சோதனையின் பயன்பாட்டின் சமீபத்திய உதாரணம்.


மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், தனக்கு 17 வயது என்று மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிட்டார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்கக் கோரிய மும்பை காவல்துறை குற்றப்பிரிவு, விசாரணையில் ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து அந்த நபருக்கு 19 வயது  கண்டுபிடித்தது. 


குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதை தீர்மானிக்க, நீதிபதி அவர்கள் ஜே.ஜே மருத்துவமனையில் எலும்பு பகுப்பாய்வு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சோதனை முடிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட தர்மராஜ் காஷ்யப் மைனர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், நீதிமன்றம் அவரை அக்டோபர் 21 வரை காவல்துறை விசாரனையில் (police custody) வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


எலும்பு பகுப்பாய்வு சோதனை (bone ossification test) என்றால் என்ன?, அது ஒரு நபரின் வயதை எவ்வாறு தீர்மானிக்கிறது? 


எலும்பு பகுப்பாய்வு (bone ossification) சோதனை என்பது எலும்பு உருவாக்கத்தின் இயற்கையான செயல்முறையைக் குறிக்கிறது. இது ஆரம்பகால கரு வளர்ச்சியில் தொடங்கி இளமை பருவத்தின் பிற்பகுதி வரையில் தொடர்கிறது. இந்த செயல்முறை தனிநபர்களிடையே சற்று மாறுபடும். எலும்பு வளர்ச்சியின் கட்டத்தை ஆராய்வதன் மூலம், வல்லுநர்கள் ஒரு நபரின் வயதை மதிப்பிடலாம். 


எலும்பு பகுப்பாய்வு சோதனையில் (bone ossification test), கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்ற சில எலும்புகளின் எக்ஸ்-கதிர் சோதனைகள் எலும்பு மற்றும் உயிரியல் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு எடுக்கப்படுகின்றன. இந்த படங்கள் நபரின் வயதை தீர்மானிக்க உதவும் நிலையான வளர்ச்சியின் எக்ஸ்-கதிர்களுடன் ஒப்பிடப்படுகின்றன. 


பகுப்பாய்வை ஒரு மதிப்பிடுவதற்கான முறையாகப் பயன்படுத்தலாம். இந்த அமைப்பு கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் உள்ள தனிப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்யும். இது அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் மற்றும் மேலும் ஒரு குறிப்பிட்ட மக்களிடையே எலும்புகளின் முதிர்ச்சியின் தரத்துடன் ஒப்பிடுகிறது.


குற்றவியல் நீதி அமைப்பில் வயது நிர்ணயம் ஏன் முக்கியமானது?


இந்தியாவில், 18 வயதிற்குட்பட்ட அனைவரும் மைனராகக் கருதப்படுகிறார்கள். குற்றவியல் சட்டம் குழந்தைகளையும் பெரியவர்களையும் வித்தியாசமாக நடத்துகிறது. இது நடைமுறைகள், திருத்தம், மறுவாழ்வு மற்றும் தண்டனைக்கு பொருந்தும்.


18 வயதிற்குட்பட்ட எவரும் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2015 இன் (Juvenile Justice (Care and Protection of Children) Act) கீழ் வரையறுக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்துடன் முரண்படும் குழந்தையை வயது 18 வயதிற்கு மேற்ப்பட்ட நபர்கள் உள்ள  சிறைக்கு அனுப்ப முடியாது. மாறாக, கண்காணிப்பு இல்லத்திற்கு (observation home) அனுப்பப்படுகின்றனர்.


இதில், குழந்தை வழக்கமான நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஒரு சிறார் நீதி வாரியத்தின் (Juvenile Justice Board (JJB)) முன் ஆஜராகிறார்கள். இந்த குழுவில் ஒரு நீதிபதி மற்றும் குழந்தைகளுடன் அனுபவம் உள்ள இரண்டு சமூக சேவையாளர்கள் உள்ளனர். விசாரணைக்குப் பிறகு, மற்ற விருப்பங்களுக்கிடையில் ஒரு சிறப்பு இல்லத்தில் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் அதிகபட்சமாக குழந்தையை தங்க வைக்க வாரியம் அறிவுறுத்தலாம்.


2021-ஆம் ஆண்டில், சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் திருத்தப்பட்டது. இப்போது 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தை "கொடூரமான குற்றத்திற்காக" (heinous offence) கைது செய்யப்பட்டால் (குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை) சிறார் நீதி வாரியம் (JJB) குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறார் நீதி வாரியம் முதலில் இந்த வழக்கிற்கான அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை நடத்த வேண்டும். 


மேலும், இந்த வழக்கிற்கான மதிப்பீடு குழந்தையின் மன மற்றும் உடல் திறனைக் கருத்தில் கொண்டு குற்றத்திற்கான தண்டனை வழங்க தீர்ப்பை முன்வைக்கும். குற்றத்தின் விளைவுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் பற்றிய குழந்தையின் புரிதலையும் இது மதிப்பீடு செய்யும். இந்த மதிப்பீட்டிற்குப் பிறகுதான், குழந்தை வயது வந்தவராக இருக்க வேண்டுமா என்பதை சிறார் நீதி வாரியம் முடிவு செய்யும்.


சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் 94-வது பிரிவின் கீழ், ஒருவரின் தோற்றத்தில் இருந்து அவர்கள் குழந்தையாக இருப்பது தெரிந்தால், அவர்களின் வயதை உறுதிப்படுத்தாமல் வாரியம் நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும், நபரின் வயது குறித்து நியாயமான சந்தேகங்கள் இருந்தால், வாரியம் வயதை நிர்ணயிக்கும் செயல்முறையை நடத்த வேண்டும்.


வயதைத் தீர்மானிக்க, பள்ளியிலிருந்து பிறந்த தேதி சான்றிதழ் அல்லது தொடர்புடைய தேர்வு வாரியத்தின் மெட்ரிகுலேஷன் சான்றிதழ் போன்ற சான்றுகள் வழங்கப்பட வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லை என்றால், மாநகராட்சி, நகராட்சி அதிகாரம் அல்லது பஞ்சாயத்து வழங்கிய பிறப்புச் சான்றிதழை இந்த வாரியம் ஏற்கலாம்.


மேலும் இந்த சட்டம் கூறுவது, "பிற ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே எலும்பு பகுப்பாய்வு சோதனை அல்லது வேறு ஏதேனும் சமீபத்திய மருத்துவ வயது நிர்ணய பரிசோதனை மூலம் வயது தீர்மானிக்கப்படும்." மார்ச் மாதத் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் வயதை நிர்ணயிப்பதற்கான கடைசி விருப்பமாக எலும்பு பகுப்பாய்வு சோதனைகளை (bone ossification test) எடுக்க வலியுறுத்தியது.


இந்த சோதனைகள் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வயது தொடர்பான ஆவண ஆதாரங்களை மாற்ற முடியாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. சில சந்தர்ப்பங்களில், போதுமான ஆவணச் சான்றுகள் இருக்கும்போது, ​​சோதனைக்கான கோரிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்க மறுத்துள்ளன.


எலும்பு முதிர்ச்சியில் ஏற்படும் மாறுபாடு இந்த சோதனையின் மதிப்பீட்டின் துல்லியத்தை பாதிக்கலாம். கூடுதலாக, தனிநபர்களிடையே வளர்ச்சியில் சிறிய வேறுபாடுகள் பிழைக்கான சில மற்றங்களை அறிமுகப்படுத்தலாம்.


எலும்பு பகுப்பாய்வு சோதனைகள் (bone ossification test) 17-19 வயது போன்ற வயதை நிர்ணயிக்கும் வரம்பை வழங்குகிறது. நீதிமன்றங்கள் இந்த வரம்பிற்குள் பிழையின் விளிம்புநிலை சிக்கலைத் தீர்த்துள்ளன. இது, வயதை கீழ் நிலையில் உள்ளதை ஏற்பதா அல்லது வரம்பின் மேல் நிலையில் உள்ளதை ஏற்பதா என்று அவர்கள் பரிசீலித்துள்ளனர்.


போக்ஸோ  (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில், பாதிக்கப்பட்டவரின் வயதை எலும்பு பகுப்பாய்வு சோதனை மூலம் தீர்மானிக்கும் போது, ​​சோதனை வரம்பில் அதிகபட்ச வயதைக் கருத்தில் கொள்ள வேண்டும்  மற்றும் இரண்டு வருட பிழையைப் (margin of error of two years) பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு தீர்ப்பளித்தது.




Original article:

Share: