அசாமில் குடியுரிமைச் சட்டத்தை சட்டபூர்வமாக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது - அஜய் சிஹ்னா கற்பூரம்

 அசாம் ஒப்பந்தத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்ட பிரிவு-6A-ன் அரசியலமைப்பு சட்டமானது சவாலுக்கு உட்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அசாமில் 'வெளிநாட்டவர்' (foreigner) என்பதன் வரையறையை மாற்றக்கூடும். இது தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (National Register of Citizens (NRC)) பாதிக்கலாம். இது மாநிலம் மற்றும் நாடு இரண்டிலும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.


குடியுரிமைச் சட்டம், 1955-ன் பிரிவு-6A மீதான அரசியலமைப்புத்தன்மை குறித்து, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தனது தீர்ப்பை வழங்க உள்ளது. இதில், இந்தப் பிரிவானது ஜனவரி 1, 1966-க்கு முன்னர் அசாமுக்குள் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வங்காளதேசத்திலிருந்து அசாமுக்குள் நுழைவதற்கு எதிராக ஆறு ஆண்டு கால போராட்டத்தைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசாங்கத்திற்கும் அனைத்து அசாம் மாணவர் சங்கத்திற்கும் (All Assam Students’ Union (AASU)) இடையே அசாம் ஒப்பந்தம் (Assam Accord) கையெழுத்தான பின்னர் 1985-ம் ஆண்டில் இது சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 


இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 21, 2023 வரை நான்கு நாட்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவது மற்றும் பூர்வீக அசாமிய மக்களுக்கு கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த முக்கியமான கேள்விகளை இந்தத் தீர்ப்பு வழங்க உள்ளது.


மனுதாரர்களில் அசாம் பொதுப்பணி நிறுவனம் (Assam Public Works), அசாம் சன்மிலிதா மகாசங்கம் (Assam Sanmilita Mahasangha) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  மற்றும் பிறர் அசாமில் குடியுரிமைக்கு வேறுபட்ட காலக்கெடுக்கான தேதி அறிவித்திருப்பது நியாயமற்றது மற்றும் பாரபட்சமானது என்று வாதிடுகின்றனர்.


பிரிவு 6A என்ன சொல்கிறது? அது ஏன் சவால் செய்யப்பட்டது? மற்றும் இந்த விதியை ஆதரிக்கும் வாதங்கள் என்ன?


குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ என்ன குறிப்பிடுகிறது? 


கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போது வங்காளதேசம்) சட்டவிரோதமாக நுழைவதற்கான பிரச்சினையை அஸ்ஸாம் நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பகுதியில், பல ஆறுகள் மற்றும் நீரோடைகள் காரணமாக புலம்பெயர்பவர்களை கண்காணிக்க கடினமாக இருக்கும் என்பதால் எல்லையை மக்கள் கடந்து செல்கின்றனர்.


அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதி, மாநிலத்தில் யார் "வெளிநாட்டவர்" என்று கருதப்படுகிறார் என்பதை வரையறுப்பது.


அஸ்ஸாம் உடன்படிக்கையின் படி, பிரிவு-5 ஆனது ஜனவரி 1, 1966 அன்று "வெளிநாட்டவர்களை" அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்றுவதற்கான காலக்கெடுவான தேதியை அறிவித்திருக்கிறது. இருப்பினும், இந்தத் தேதிக்குப் பிறகு மார்ச் 24, 1971-க்கு முன் அசாமில் நுழைந்தவர்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான விதிகளும் இந்த சட்டத்தில் அடங்கும்.


இந்த நோக்கத்திற்காக குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6A சேர்க்கப்பட்டது. ஜனவரி 1, 1966-க்கு முன் அஸ்ஸாமிற்குள் நுழைந்த "இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்" மற்றும் தொடர்ந்து அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் குடிமக்களாகக் கருதப்படுவார்கள் என்று அது கூறுகிறது.


ஜனவரி 1, 1966-க்குப் பிறகு, ஆனால் மார்ச் 24, 1971-க்கு முன்பு அசாமில் நுழைந்து வெளிநாட்டவராக அடையாளம் காணப்பட்ட எவரும் ஒன்றிய அரசு விதித்துள்ள விதிகளின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று விதி கூறுகிறது.


பதிவு செய்யப்பட்டவுடன், அவர்களுக்கு குடிமக்களின் பெரும்பாலான உரிமைகள் வழங்கப்படும். எனினும், அவர்கள் 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மார்ச் 24, 1971-க்குப் பிறகு நுழைந்த எவரும் சட்டவிரோதமாக குடியேறியவராகக் கருதப்படுவார்கள்.


இந்த தீர்ப்பு, அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (National Register of Citizens (NRC)) பாதிக்கலாம். 2019-ல், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதன் தொடர்புடைய வழக்குகளில் அரசியலமைப்பு அமர்வின் எதிர்கால தீர்ப்புகளைப் பொறுத்து என்ஆர்சி புதுப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டது. 


பிரிவு 6A ஏன் சர்ச்சைக்கு உட்படுகிறது? 


பிரிவு 6A-ல் உள்ள காலக்கெடுவான தேதி நியாயமற்றது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இது சமத்துவத்திற்கான உரிமையை (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14) மீறுவதாகக் கூறினர். இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, ​​அஸ்ஸாமுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமைக்கான வேறுபட்ட தேதியை பிரிவு 6A அமைக்கிறது. இது, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, காலக்கெடுவான தேதி ஜூலை 1948 ஆகும்.


முக்கிய மனுதாரர்களில் ஒருவரான அஸ்ஸாம் சன்மிலிதா மகாசங்கா (ASM), இந்த விதியை "பாரபட்சமானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது" என்று அழைத்தனர்.


இந்த விதி அஸ்ஸாமைச் சேர்ந்த "பழங்குடியினரின்" (indigenous) உரிமைகளை பாதிக்கிறது என்றும் அவர்கள் கூறினர். 2012-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் மனுவில், பிரிவு 6A அசாமின் மக்கள்தொகை முறையை மாற்றியுள்ளது என்று கூறுகிறது. இந்த மாற்றம் பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த மாநிலத்தில் சிறுபான்மையினராக ஆக்கியுள்ளது. 


இது அசாமின் பொருளாதார மற்றும் அரசியல் நலனை பாதிக்கிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இது மக்களின் கலாச்சாரம், அரசியல் அதிகாரம் மற்றும் வேலை வாய்ப்புகளையும் அச்சுறுத்துகிறது.


விசாரணைகளின் போது, மனுதாரர்கள் மாறிவரும் மக்கள்தொகை அரசியலமைப்பின் 29-வது பிரிவின் கீழ் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான "பூர்வீக" அசாமியர்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் கூறினர். 


பிரிவு 6A க்கு எதிரான வாதங்கள் என்ன?


ஒன்றிய அரசு தனது வழக்கை ஆதரிக்க அரசியலமைப்பின் 11 வது பிரிவைப் பயன்படுத்தியது. இந்த பிரிவு, குடியுரிமையைப் பெறுவது மற்றும் முடிப்பது உட்பட, குடியுரிமை பற்றிய சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. சமத்துவத்திற்கான உரிமையை மீறாமல் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக சட்டங்களை உருவாக்க இந்த அதிகாரம் நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது என்று அது குறிப்பிட்டது. 


நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் உட்பட மற்ற பிரதிவாதிகள், பிரிவு 6A நீக்கப்பட்டால், தற்போது வசிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் "நாட்டற்றவர்களாக" மாற்றப்படுவார்கள். 


மேலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை உரிமைகளை அனுபவித்த பிறகு வெளிநாட்டினராகக் கருதப்படுவார்கள் என்று வாதிட்டனர். பிரிவு 6A அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மாறியது என்றும், அஸ்ஸாம் நீண்ட காலமாக பன்மொழி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாக உள்ளது என்றும் அவர்கள் வாதிட்டனர்.




Original article:

Share: