தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (ayushman bharat) எவ்வாறு முதியோருக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
ஆயுர்வேத தினமான அக்டோபர் 29 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் வய வந்தனா (Ayushman Vaya Vandana) என்ற மருத்துவ அட்டைகளை அறிமுகப்படுத்தினார். இந்த அட்டைகள் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY)) ஒரு பகுதியாகும். இது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, அவர்களின் வருமானம் அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், இது மருத்துவப் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்குகிறது.
1. 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். இந்த தொகை வீட்டில் இரண்டு வயதான பயனாளிகள் இருந்தால், இந்த காப்பீடு குடும்பத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
2. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குடும்ப உறுப்பினர்கள் ரூ.5 லட்சம் வரை கூடுதல் காப்பீட்டைப் பெறுவார்கள். இந்த கூடுதல் தொகை குறிப்பாக வயதானவர்களுக்கானது மற்றும் அவர்களின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த முதியோர் பயனாளிகள் இந்த கூடுதல் காப்பீட்டைப் பெற மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
3. இந்த திட்டம் கிட்டத்தட்ட 6 கோடி தனிநபர்களை (4.5 கோடி குடும்பங்களிலிருந்து) உள்ளடக்கும். அவர்களில், 1.78 கோடி பேர் ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் உள்ளனர். "கூடுதல் காப்பீடு தொகைக்கு, நிதிப் பாதிப்பு மிகக் குறைவு" என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
4. மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (Central Government Health Scheme (CGHS)), முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (Ex-Servicemen Contributory Health Scheme) போன்ற பிற அரசு சுகாதாரத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே காப்பீடு பெற்றவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது தற்போதைய காப்பீட்டுக்கான மருத்துவப் பாதுகாப்பை தொடரலாம்.
5. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation (ESIC)) கீழ் உள்ளவர்கள் தற்போதுள்ள காப்பீடு மற்றும் ஆயுஷ்மான் பாரத் இரண்டையும் பெற தகுதியுடையவர்கள் ஆவார். ஏனென்றால், ESIC-க்கான காப்பீடு தொகைகள், காப்பீடு செய்யப்பட்டவர் மற்றும் அவர்களின் முதலாளியால் செலுத்தப்படுகின்றன. அரசாங்கத்தின் மூலம் செலுத்தப்படுவது அல்ல.
6. இது மத்திய நிதியுதவி பெறும் திட்டம் மற்றும் இந்த திட்டத்தின் செலவில் மாநிலங்கள் 40% பங்களிக்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் செயல்படுத்தவில்லை.
AB PM-JAY என்பது உலகின் மிகப்பெரிய பொது மருத்துவக் காப்பீட்டு திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை மருத்துவப் பாதுகாப்பை வழங்குகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதற்கு தகுதியானவர்கள். இந்த குடும்பங்கள் வருமானத்தின் அடிப்படையில் மக்கள்தொகையில் 40% கீழ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் இந்தத் திட்டம் மருத்துவத்திற்கான பாதுகாப்பை வழங்குகிறது.
இப்போது, AB-PMJAY திட்டத்தை மூத்த குடிமக்களுக்கும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதம்:
1. அடுத்த முப்பதாண்டுகளில் ஆயுட்காலம் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்தில் ஒரு பகுதியினர் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த மக்கள்தொகையின் மாற்றத்தை சமாளிக்க நலன்சார்ந்த கொள்கைகளில் தொலைநோக்கு மாற்றங்கள் தேவை.
2. வயதான இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் அவர்கள் நீண்ட காலம் மருத்துவமனைகளில் தங்கி இருப்பார்கள். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள முதியோர்களின் சேர்க்கை விகிதம் 7% க்கும் அதிகமாக உள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் வரும் இளையவர்களுக்கான சேர்க்கை விகிதத்தை விட இது 3-4% இரு மடங்காகும்.
3. இந்திய முதியோர் அறிக்கை 2023-ன் படி, முதியவர்கள் பெரும்பாலும் எந்தவொரு சுகாதாரத் திட்டத்தாலும் காப்பீடு செய்யப்படுவதில்லை. தற்போது, 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவின் மக்கள்தொகையில் 20% க்கும் அதிகமானோர் ஏதேனும் அரசாங்க திட்டங்களின் கீழ் உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
4. முதியோர்களின் எண்ணிக்கையில் வயதான பெண்களே அதிகம். நிதி ஆயோக் நடத்திய ஆய்வில் முதியவர்களில் 58% பெண்கள் என்றும், இதில் 54% விதவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
5. ஆரோக்கியத்திற்கான அதிகப்பட்ச தனிநபர் செலவுகள் (out-of-pocket expenditure (OOPE)) பெரும்பாலும் கடுமையான வறுமைக்கு வழிவகுக்கும் ஒரு நாட்டிற்கு இது முக்கியமானது. அதிகப்பட்ச தனிநபர் செலவுகளானது (OOPE) அனைத்து மருத்துவ செலவுகளில் 50% ஆகும். இந்தத் தொகை உலக சராசரியை விட இரண்டரை மடங்கு அதிகமாகும். இதில், இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
6. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் நிலைப்பாட்டு அறிக்கையானது, குடும்பங்கள் அதிகளவில் பெருகிய முறையில், இவர்களுக்கான அணுகல் மற்றும் கவனிப்பின் தரம் ஆகியவை மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தை நாடும் நடத்தையில் முக்கிய தீர்மானிப்பதாக இருக்கும் என்று அங்கீகரித்தது.
1. ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Yojana), பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) என்றும் அழைக்கப்படும் இது ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும். இது 2018-ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இது பொது மற்றும் தனியார் சுகாதார துறைகளை முழு நாட்டிற்கும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இணைக்கிறது.
2. இந்த நிதியுதவி பல்வேறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்கள் உட்பட தீவிர (இரண்டாம் நிலை) மற்றும் சிக்கலான (மூன்றாம் நிலை) பராமரிப்புக்கு பொருந்தும். இது முழங்கால் மாற்று (knee replacements), இதய பைபாஸ் (heart bypass), புற்றுநோய் சிகிச்சை (cancer surgeries) அல்லது நாட்பட்ட நிலைமைகளாக இருந்தாலும், ஆயுஷ்மான் பாரத் யோஜனா பயனாளிகளுக்கு நிதி சிரமம் இல்லாமல் தேவையான மருத்துவ பாதுகாப்பைப் பெற அதிகாரம் அளிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை உள்ளடக்குவதன் மூலம் இந்த திட்டம் மேலும் செல்கிறது. மேலும், விரிவான சுகாதார அனுபவத்தை உறுதி செய்கிறது.
3. சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு (Socio-Economic Caste Census (SECC)) தரவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை இந்த திட்டம் குறிவைக்கிறது. இந்த தரவு குடும்பங்களை வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே (below the poverty line (BPL)) வாழ்பவர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக-பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் பின்தங்கியவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்துகிறது.
4. PMJAY உள்நோயாளிகளின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை உள்ளடக்கியது. இதில் புற நோயாளிகள் தொடர்பான சேவைகள் இல்லை. இந்த சேவைகளை ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் (Ayushman Arogya Mandirs (AAMs)) கையாளுகின்றன. அவை, முன்பு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் என்று அழைக்கப்பட்டன. இலவச ஆலோசனைகளை வழங்கும் 1,75,000 ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் உள்ளன. அவர்கள் பல மருந்துகளையும் (172 வரை) மற்றும் நோயறிதல் சோதனைகள் (63 வரை) கட்டணமின்றி வழங்குகிறார்கள்.