இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன? -திகேந்தர் சிங் பன்வார்

 இந்த ஆண்டு உலக நகரங்கள் தினத்தின் (World Cities Day)  கருப்பொருள் என்ன? இந்தியாவின் விரைவான நகரமயமாக்கலுக்கு எது வழிவகுத்தது? காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை நகர்ப்புற வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன?


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 உலக நகரங்கள் தினம் (World Cities Day) கொண்டாடப்படுகிறது. உலகின் நகர்ப்புற மக்கள் தொகை 4.7 பில்லியனை எட்டியுள்ளது. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 57.5% ஆகும். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக நகரங்கள் தினத்தின் கருப்பொருள் "இளைஞர்கள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்: நகர்ப்புற நிலைத்தன்மைக்காக உள்ளூர் நடவடிக்கையை ஊக்குவித்தல்’ என்பதாகும்.


நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 


பருவநிலை மாற்றம் காரணமாக இந்திய நகரங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன என்று ஐ.நா கோடிட்டுக் காட்டுகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDGs)) முன்னேற்றம் ஏற்பட்டாலும், நகரங்கள் இன்னும் வறுமை, சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை எதிர்த்து போராடி கொண்டிருக்கின்றன. உலகளாவிய தெற்கில், வேகமான நகர்ப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் காரணமாக இந்தப் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் மிகக் குறைவான வீடுகளைக் கொண்டிருக்கின்றன. சுத்தமான நீர், குறைவான சுகாதார தேவை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைகளால் நகரங்கள் அதிக அச்சறுத்தல்களை சந்திக்கின்றன.


இந்திய நகரமயமாக்கல் பற்றி 


இந்தியாவின் நகரமயமாக்கல் மேற்கத்திய நாடுகளில் இருந்து வேறுபட்டது. மேற்கில், நகரமயமாக்கல் தொழில்மயமாக்கலுக்குப் பிறகு ஏற்பட்டது. இது கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்த  மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. காலனிகளில் இருந்து பெரும் செல்வத்தைப் பெற்றதால் நகரங்களும் வளர்ச்சி அடைந்தன. காலனித்துவ ஆட்சியின் போது, இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு இந்தியா $45 டிரில்லியன் வழங்கியதாக பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் குறிப்பிட்டார். 


இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் நகரமயமாக்கல் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடியால் இயக்கப்படுகிறது.  மக்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி, கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கும், நகரங்களில் இருந்து வேறு நகரங்களுக்கும் இடம் பெயர்கின்றனர். கோவிட்-19 தொற்றின் போது, ​​நகர்ப்புற திட்டமிடல் மீதான பிரச்சனை தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில்,  தலைகீழ் இடம்பெயர்வு போக்குகள் உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டுகின்றன.

 

இந்தியாவில்  உள்ள நகர்ப்புற சவால்கள் என்னென்ன? 


2021-ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறதாதல், இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை குறித்த துல்லியமான தரவு இல்லை.  இந்திய மக்கள் தொகையில் 40% பேர் நகர்ப்புறங்களில் சுமார் 9,000 நகரங்களில் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மோசமான நகர்ப்புற திட்டமிடல், காலநிலை மாற்றம்,  அதிக அளவிலான இடம்பெயர்வு, அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் சமூக பிளவுகள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல சவால்களை இந்திய நகரங்கள் எதிர்கொள்கின்றன. 


நகர்ப்புற திட்டமிடல் நிறுவனங்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவதாக, அவர்களின் திட்டங்கள் பெரும்பாலும் காலாவதியானவை மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இல்லை. 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து, அகமதாபாத், டெல்லி, சூரத் மற்றும் மும்பை போன்ற பல நகரங்கள் தொழில்மயமாக்கல் காரணமாக பல்வேறு வேலைவாய்ப்புகளை  இழந்தன. இதனால், பல தொழிலாளர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.  தற்போது, ​​இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 40% பேர் நகர்ப்புற குடிசை பகுதிகளில் (slums) வாழ்ந்து வருகின்றனர்.


இரண்டாவதாக, திட்டமிடல் பெரும்பாலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. காலநிலை மாற்றம் இந்திய நகரங்களையும் கடுமையாக பாதிக்கிறது. இது அதிக மாசு,  வெள்ளம் மற்றும் "வெப்ப தீவு விளைவு" (‘heat island effect’) போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில், எட்டு நகரங்கள் தேசிய தலைநகர் பகுதியை சுற்றியுள்ளன.


கூடுதலாக, நகரமயமாக்கல் ஒரு காலத்தில் சமூக மற்றும் மதப் பிரச்சினைகளின் அடிப்படையில் நடுநிலையாக இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், இந்திய நகரங்கள் இப்போது இந்த பகுதிகளில் மிகவும் பிளவுபடுகின்றன. மேலும், சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.  பிரத்தியேக வளர்ச்சிகள் பணக்காரர்களுக்கு உதவுகின்றன. அதே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுக்கு அடிப்படை வீடுகள் இல்லாத நிலை உள்ளது.  உதாரணமாக, குருகிராமில் உள்ள DLF இன் "The Dahlias" திட்டம், தங்குமிடம் இல்லாத இரண்டு கோடி நகர்ப்புற இந்தியர்களுக்கு முற்றிலும் மாறாக ₹100 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்குகிறது. பெரும்பாலான நகர வேலைகள் (சுமார் 90%) முறைசாரா துறையில் உள்ளன. பொதுவாக நகர்புறங்களில் வேலை பாதுகாப்பு ( job security) இல்லை.


74-வது அரசியலமைப்பு திருத்தம் இருந்தபோதிலும், பெரும்பாலான இந்திய நகரங்கள் இன்னும் ஜனநாயகமற்ற குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற திட்டமிடல் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இது பொதுவாக அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக, 12-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 18 செயல்பாடுகளில் மூன்றிற்கும் குறைவான பொறுப்புகள் மட்டுமே நகர்ப்புற அரசாங்கங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், நகரங்கள் அரசாங்கத்திடம் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% மட்டுமே பெறுகின்றன. உலக நகரங்கள் தினத்தை நாம் கொண்டாடும் போது, ​​இந்த சவால்கள் நமக்கு வலுவான தேசிய தீர்வுகள் தேவை என்பதைக் காட்டுகின்றன.


திகேந்தர் சிங் பன்வார், சிம்லாவின் முன்னாள் துணை மேயர் மற்றும் கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர்.




Original article:

Share: