எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் கசானில் அக்டோபர் 22-24, 2024 வரை நடந்தது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு நாடுகளும் தொடக்க கால உறவுகளைப் பகிர்ந்து கொண்டன. ஈரான் இப்போது காசாவில் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த பதற்றத்தை குறைக்க இந்தியாவின் உதவியை ஈரான் கோருகிறது. இந்தியா அமைதி பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறது. பல நாடுகள் மோதலைத் தீர்க்க இந்தியாவின் உதவியை விரும்புகின்றன. ஏனென்றால், இந்தியாவனது, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது.
சாத்திய கூறுகள்
பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்தார். சந்திப்பின் போது, இருதரப்பு உறவில் வலுவான மற்றும் பயன்படுத்தப்படாத திறனை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பங்கை பெசெஷ்கியான் பாராட்டினார். காசா மோதலை குறைக்க இந்தியா உதவ முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 2023-ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) மற்றும் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) பிரிக்ஸ்ல் ஈரான் இணைய உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் சபாஹார் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் (International North-South Transport Corridor (INSTC)) இணைந்து பணியாற்றுவது பற்றியும் ஆலோசித்தனர்.
எவ்வாறாயினும், இந்தியாவிற்கான ஈரானின் முக்கியத்துவம், சபஹர் துறைமுகம் மற்றும் அது வழங்கும் இணைப்பு விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பரந்த இருப்பு காரணமாக ஈரான் மிகவும் முக்கியமானது. அதன் மொத்த எண்ணெய் இருப்பு 209 பில்லியன் பீப்பாய்கள் மற்றும் இயற்கை எரிவாயு 33,988 பில்லியன் கன மீட்டர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2021-ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கு ஆசியாவின் 24% மற்றும் உலகின் 12% எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது. பொருளாதாரத் தடைகள் மற்றும் காசா போர் இருந்தபோதிலும், மே 2024-ஆம் ஆண்டில் ஈரான் ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்தது. மார்ச் 2024-ஆம் ஆண்டில், அது ஒரு நாளைக்கு 1.61 மில்லியன் பீப்பாய்களை ஏற்றுமதி செய்தது.
நெருக்கமான கூட்டாண்மைக்கான விருப்பங்கள்
சபஹர் துறைமுகம் சமீபகாலமாக இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மே 13, 2024 அன்று, இந்தியாவும் ஈரானும் துறைமுகத்தை இயக்குவதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சபஹர் துறைமுகம் இந்தியாவின் காண்ட்லா மற்றும் மும்பை துறைமுகங்களுக்கு விரைவான மற்றும் எளிதான வழியை உருவாக்குகிறது. இது ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே அமைந்துள்ளதால், பாரசீக வளைகுடாவில் மோதல்களால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து இந்தியாவின் வர்த்தகத்தைப் பாதுகாக்கிறது.
கூடுதலாக, சபாஹர் மற்றும் சஹேதான் நகருக்கு இடையே 700 கிமீ தொலைவில் உள்ள இரயில் இணைப்பு விரைவில் ஈரானின் இரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜஹேதானில் இருந்து சராஞ்சிற்கு சாலை இணைப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை எளிதாக அனுப்ப உதவும்.
எரிசக்தி விநியோகம் ஒத்துழைப்புக்கான மற்றொரு முக்கியமான பகுதியாகும். மே 2019-ஆம் ஆண்டுக்கு முன், ஈரான் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 12% வழங்கியது. இருதரப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளதால், ஈரானில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி மீண்டும் தொடங்கப்படலாம். இது இந்தியாவின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய சாத்தியக்கூறுகளைத் உருவாக்குகிறது.
1993-ஆம் ஆண்டு முதல் ஈரான்-ஓமன்-இந்தியா எரிவாயு குழாய் பற்றி தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. மே 2022-ஆம் ஆண்டில், ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் கடலுக்கு அடியில் எரிவாயு குழாய்கள் மற்றும் ஒரு எண்ணெய் வயலை தங்கள் கடல் எல்லையில் உருவாக்க ஒப்புக்கொண்டன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்த குழாய்கள் இந்தியாவிற்கும் நீட்டிக்கப்படலாம்.
ஈரானுடனான நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பால் இந்தியாவும் பயனடையலாம். இரு நாடுகளும் 2001-ஆம் ஆண்டில் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், ஈரான் மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில், ஈரான் குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. ஈரான் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதமேந்திய ட்ரோன்களை வழங்குகிறது. மேலும், இந்தியா குறைவான விலையில் மற்றும் பயனுள்ள ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை உருவாக்க ஆர்வமாக உள்ளது. இது ஈரானை சாத்தியமான நட்பு நாடாக மாற்றுகிறது.
பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஈரானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை நடத்தலாம் மற்றும் உளவுத்துறை பகிர்வு வழிமுறைகளை உருவாக்கலாம். கூடுதலாக, ஈரானிய துறைமுகங்களைப் பார்வையிடுவதன் மூலமும், பாரசீக வளைகுடாவில் ஆதரவு வசதிகளை அமைப்பதன் மூலமும் இந்தியா பயனடையலாம்.
இந்தியாவின் இராஜதந்திர முக்கியத்துவம்
இந்தியாவும் ஈரானும் இணைந்து பல பலவற்றை சாதிக்க முடியும். இரு நாடுகளும் தாங்கள் ஏற்கனவே அதிக நேரத்தை இழந்துவிட்டதை தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் போன்ற மோதல்களைக் கொண்ட நாடுகளுடன் தனித்தனியான உறவுகளைப் பேணுவதன் மூலம் இந்தியாவின் திறன், இந்த இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த உதவும். கூடுதலாக, உக்ரைன் போரின் போது ரஷ்யாவுடன் இந்தியா கையாள்வது போன்ற தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் சுதந்திரமாக செயல்படும் இந்தியாவின் அணுகுமுறை, ஈரானுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இருப்பினும், சில நேரங்களில் தவறான கருத்துக்கள் இந்த உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, ஈரானின் உச்ச தலைவர் செப்டம்பர் 16 அன்று இந்திய முஸ்லீம்களின் துன்பங்களை காசாவில் உள்ள மக்களுடன் ஒப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் இந்தியாவை பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய கருத்துக்களால் சீர்குலைக்க முடியாத அளவுக்கு இருதரப்பு உறவும் மதிப்புமிக்கது என்பதை இரு நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மேற்கு ஆசியாவில் இந்தியா தனது தொடர்புகள் மற்றும் இராஜதந்திர கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஈரான் தனது சமீபத்திய இராஜதந்திர சாதனைகளை தொடர விரும்புகிறது மற்றும் இந்தியாவை ஒரு முக்கியமான நட்பு நாடக பார்க்கிறது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சமீபத்தில் நடந்த கூட்டம் இரு நாடுகளும் ஒன்றாக முன்னேற தேவையான வேகத்தை வழங்கலாம்.