பண்டிகை காலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி வரவுகள் வளர்ச்சியின் முக்கிய குறியீடு ஆகும்.
இந்த நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவை வரிகளின் வருவாய் நிலைகள் மிகவும் நிலையற்றதாக உள்ளது. இருப்பினும், இதுவரை ஏழு மாதங்களில் மூன்று மாதங்களில் மறைமுக வரியின் (indirect tax) மூலம் அதிக வரி வசூலிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் முதன்முறையாக ₹2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. மொத்த வரவுகள் 12.4% ஆகவும், நிகர வரவுகள் 15.5% ஆகவும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மொத்த வருவாய் ₹1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தத் தொகை இதுவரை பதிவு செய்யப்பட்ட பதிவான தரவுகளின் அடிப்பையில் மூன்றாவது பெரிய தொகை ஆகும்.
முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 10.3% அதிகமாகும். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அக்டோபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வரவுகளில், வரி அமல்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வரி வருவாய் இதுவாகும். சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் அதிகரிப்பு இருந்தபோதிலும், எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி இல்லை. ஜூன் மாதத்தில், மொத்த வருவாயின் வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.3%-ஆக குறைந்துள்ளது. இது மேலும் சரிவடைந்து, செப்டம்பரில் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவிற்கு 6.5% ஆக குறைந்தது.
வரவு செலவுத் திட்ட இலக்கை அடைய மறைமுக வரிகளை வரும் மாதங்களில் மிக விரைவாக அதிகரிக்க வேண்டும். இருப்பினும், நேரடி வரிகள் மற்றும் வரி அல்லாத வருவாய்கள் சிறப்பாக செயல்படுவதால் பெரிய அளவில் ஆபத்துகள் இல்லை. வருவாய் மற்றும் மூலதன செலவுகளும் கடுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக, ஒரு மாதத்தின் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் முந்தைய மாதத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி என்பது நுகர்வு மீதான வரியாகும். கடந்த மாத வருவாய், பண்டிகைக் காலத்திற்கான தனியார் நுகர்வு நிலைகளை குறிக்கிறது. இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பித்ரு பக்ஷா (Pitru Paksha) எனப்படும் 16 நாள் காலம் காரணமாக குறிப்பிடத்தக்க கொள்முதல் குறைந்திருக்கலாம்.
ரிசர்வ் வங்கி அதன் அக்டோபர் வெளியிட்ட அதன் செய்திக்குறிப்பில், சரக்கு மற்றும் சேவை வருவாயில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதாரத்தில் மந்தமான வேகத்தைக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டது. இருப்பினும், பண்டிகைக் காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. எவ்வாறாயினும், நவம்பர் மாத வரி வருவாய்கள், நல்ல நிலையை ஏற்படுத்தும். கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையின் காரணமாக வரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப கார் விற்பனை தரவு K- வடிவ நிலைமையை குறிக்கிறது. இதன் பொருள் விலையுயர்ந்த விளையாட்டு பயன்பாடு சார்ந்த வாகனங்களின் (Sports Utility Vehicle (SUV)) விற்பனை விரைவாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த கார் விற்பனை சீரான நிலையில் உள்ளது. இந்த நிலை எப்படி இருந்தாலும், சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் (GST Council) தொடர்ந்து வரி விகித மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் சிமென்ட், காப்பீடு போன்ற பொருட்களின் மீதான வரி குறைப்பும் அடங்கும். இந்த மாற்றங்கள் விற்பனை அளவை அதிகரிக்கவும் மற்றும் வருவாய் இழப்புகளை சரி செய்ய பெரிதும் உதவும்.