இந்திய சிறைகளில் இருந்து சாதிய பாகுபாட்டை அகற்றுவதில் ஒரு படி முன்னேற்றம் -ஆதித்யா ரஞ்சன், ஆஷ்னா தேவ்பிரசாத்

 சிறைச்சாலைகளில் சாதி அடிப்படையிலான நடைமுறைகளை இந்திய உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது என்றாலும், சிறைப் பதிவுகளிலிருந்து சாதிக் குறிப்புகளை நீக்குவதற்கான உத்தரவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.


சமீபத்தில் ஒரு முக்கிய செய்தி இணையதளத்திற்கு பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா அளித்த பேட்டியில், ஒரு முக்கியமான செய்தியை எடுத்துரைத்தார். இதில், இந்திய சிறைகள் உள்ள சாதிய பாகுபாடு  வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். மேலும், சுகன்யா சாந்தா மற்றும் வழக்கறிஞர் திஷா வடேகருடன் சேர்ந்து, கடந்த ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக மனு தாக்கல் செய்தனர். இதன் விளைவாக, சுகன்யா சாந்தா vs இந்திய ஒன்றியம் மற்றும் பிற (Sukanya Shantha vs. Union of India and Ors.) வழக்குகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இது சாதி அடிப்படையிலான பாகுபாட்டை நியாயப்படுத்தும் பல்வேறு மாநில சிறை குறிபேடுகளில் உள்ள சில விதிகளை நீக்கியது. 


பல மாநிலங்களில், சிறைக்கைதிகளுக்கு சாதி அடிப்படையில் வேலைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட சமூகத்தின் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கிடையில், "மேல் சாதி" (higher castes) கைதிகளுக்கு சமையல் போன்ற "கண்ணியமான" (dignified) வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்த நடைமுறைகளை சுரண்டல் (exploitative) என்று கண்டனம் செய்தது. இவ்வாறு, சாதி அடிப்படையில் உழைப்பைப் பிரிப்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தீண்டாமையை நிலைநிறுத்துகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. சிறைசாலைகளில் சாதி அடிப்படையிலான பிரிவினையை நீதிமன்றம் எடுத்துரைத்தது. இந்த பிரிவினை 'அரசியலமைப்புக்கு முரணானது' (‘unconstitutionally vague’) மற்றும் 'நிச்சயமற்றது' (‘indeterminate’) என அது அறிவித்தது. ஏனெனில், இத்தகைய பிரிவினை சிறைக்கைதிகளிடையே 'சாதிய வேறுபாடுகள் மற்றும் பகைமையை வலுப்படுத்துகிறது' என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது.


மேலும், அறிவிக்கப்படாத பழங்குடியினத்தைச் (de-notified tribes) சேர்ந்த கைதிகள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்றும்,  இந்த பழங்குடியினர் வரலாற்று ரீதியாக காலனித்துவ சட்டங்களின் கீழ் "பழக்கமான குற்றவாளிகள்" (habitual offenders) என்று முத்திரை குத்தப்பட்டனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, இந்த பிரிவினரைச் சேர்ந்த கைதிகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதால் இவர்களின் மனிதநேயத்தை முற்றிலும் பறிக்கப்படுகிறது.


அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் அடிப்படையில் கைதியின் சமத்துவத்திற்கான உரிமையை வலியுறுத்துவது தீர்ப்பின் மையமாகும். இது, 'நடுநிலையான' சிறை விதிகளின் நிலையை விமர்சிப்பதன் மூலம், இந்த கட்டமைப்புகள் மேலோட்டமாக, நியாயமானதாகத் தோன்றினாலும் உண்மையில் முன்முடிவுகளை (prejudices) வலுப்படுத்துகின்றன. இந்த விதிகள், விளிம்புநிலை வகுப்புகளைச் சேர்ந்த கைதிகள் கண்ணியமான அல்லது திறமையான வேலைக்கு தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடுவதை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதற்கு மாறாக, சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் தனிப்பட்ட திறன்கள் மற்றும் சீர்திருத்தத் தேவைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மேலும், ஒருவரின் சாதி அல்லது சமூக பொருளாதார பின்னணியின் அடிப்படையில் அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. சாதியின் அடிப்படையில் கைதிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் அவர்களின் கண்ணியத்தை மீறுகிறது. இது அரசியலமைப்புப் பிரிவு 21 மூலம் பாதுகாக்கப்படுகிறது.


'சாதியப் பாகுபாடு பார்க்கக் கூடாது' 


சிறையில் சாதி அடிப்படையிலான நடைமுறைகளை ஒழிக்க நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இருப்பினும், இந்த தீர்ப்பின் ஒரு பகுதியை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.  சிறைப் பதிவுகளில் இருந்து சாதிரீதியான குறிப்பேடுகளில் உள்ள விதிகளை நீக்குவதற்கான உத்தரவினை பிறப்பித்தது. இந்த உத்தரவு நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக விளக்கப்படவில்லை. குறிப்பாக, இப்போது நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றிய விவாதம் அதிகரித்து வருவதால் இந்த பாகுபாடு அதிகப்படியாகத் தெரிகிறது.


சாதி அமைப்பானது, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டதாகத் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருப்பினும், சாதி அடையாளம் இந்தியாவின் சமூக அமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதிகாரப்பூர்வ சிறைச்சாலை குறிப்பேடுகளில் இருந்து சாதிரீதியிலான தகவல்களை நீக்குவது மட்டும் பாகுபாடு மற்றும் பிரிவினையை அகற்றாது. இது, குடும்பப் பெயர்கள், சமூக உறவுகள் மற்றும் பிற குறிப்பிட்ட விதிகள் இன்னும் சாதியைக் குறிக்கின்றன. இது சிறைகளுக்குள் பாகுபாடு தொடர அனுமதிக்கும். சிறைப் பதிவேடுகளில் உள்ள சாதி பாகுபாடான குறிப்புகளை நீக்குவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. இது, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை தொடர்பான ஆழமான பிரச்சினைகளை புறக்கணிக்கிறது. 

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் விளிம்புநிலை சமூகங்கள், குறிப்பாக பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்த கைதிகள் அதிகமாக உள்ளனர். இந்த அதிகப்படியான பிரதிநிதித்துவம் சட்ட சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், குறைந்த அளவிலான சட்ட கல்வியறிவு மற்றும் வளங்களின் சமமற்ற விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த சமூகத்தைச் சேர்ந்த நபர்களை குற்றவாளிகளாக உட்படுத்தப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய, சிறைச்சாலைகளில் உள்ள சாதி அமைப்பு பற்றிய விரிவான தகவல்கள் நமக்குத் தேவை. 


இது, சாதி அடிப்படையிலான சலுகைகள் மற்றும் தடைகள் நீதிக்கான அணுமுறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த அணுகலை திறம்பட பயன்படுத்தப்படும் போது, ​​சாதிரீதியான தரவுகள் கைதிகளின் அனுபவங்களை மேம்படுத்தி அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும். சிறைகளில் உள்ள இன, மத மற்றும் பிற சமூக அடிப்படையிலான குழுக்கள் கைதிகளின் அனுபவங்களை கணிசமாக பாதிக்கின்றன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த குழுக்கள் கைதிகள் தங்கள் நேரத்தைச் சேவை செய்த பிறகு மீண்டும் ஒருங்கிணைக்க உதவுகின்றன.


இந்தச் சூழலில், சிறைப் பதிவேடுகளில் இருந்து சாதி தொடர்பான தகவல்களை நீக்க வேண்டும் என்ற உத்தரவு பொருத்தமற்றதாகத் தெரிகிறது. சாதிய பாகுபாடுகளைத் தகர்க்கும் அதிகாரம் அரசியல் சாசனத்துக்கு உண்டு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எவ்வாறாயினும், இந்த பிரச்சினைகளை நாம் ஒப்புக்கொள்ள மறுத்தால், இந்த பாகுபாடை தீர்க்க முடியாது.


நீதித்துறையின் சொந்த விருப்பம்


சிறைச்சாலைகள் மற்றும் பிற குற்றவியல் நீதி நிறுவனங்களிலிருந்து சாதியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு, நீதித்துறையானது அதன் சொந்த சாதி பாகுபாடு தொடர்பானவைகளை எதிர்கொள்ள வேண்டும். சமீப ஆண்டுகளில், அரசியலமைப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகள் சில சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளை கேலி செய்வதையும், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர்கள் எப்போதும் தலைமைப் பதவிகளில் இருக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடுதான் நாட்டை சீரழிக்கும் என்றும், கூடுதலாக, அவர்கள் ஒரு நகரத்தின் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியை "பாகிஸ்தான்" என்று குறிப்பிட்டுள்ளனர். 


நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் வகுப்புவாத மற்றும் சாதிவெறி கருத்துக்கள் பல நிகழ்வதை இன்னும் காணலாம். இந்த நிகழ்வுகள், சாதி அமைப்பில் உள்ள ஒரு ஆழமான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. கடந்த மாதம், நீதிபதிகள் தங்கள் சொந்த விருப்ப அடையாளங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. சாதிய, வகுப்புவாத மற்றும் பாலின கருத்துகளை கூறுவதை தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது. 


எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் முக்கியமான நீதித்துறையின் கண்ணியத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பதாகத் தோன்றியது. மாறாக, இந்த சார்புநிலைகள் நீதித்துறை தீர்ப்புகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நிவர்த்தி செய்வதாகும். நீதித்துறை இந்த பரிந்துரைகளைத் தாண்டி பாரபட்சத்தை மறைத்து, சாதிவாதம், வகுப்புவாதம் மற்றும் பாலினவாதத்திற்கு நீதிமன்ற வளாகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


சட்ட சீர்திருத்தங்கள் ஒரு படி மட்டுமே 


Ute Frevert இந்தப் பிரச்சினையை ”அவமானப்படுத்தும் அரசியல்” (The Politics of Humiliation) என்ற நூலில் விவாதிக்கிறார். ஒதுக்கப்பட்ட வகுப்பினர்களை அரசு திட்டவட்டமாக குறிவைக்கும் போது, ​​அது நிறுவன ரீதியான அவமானத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் விளக்குகிறார். இந்த அவமானம் அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியத்தை ஆழமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சிறைகளில், சாதி அடிப்படையிலான பாகுபாடு மனிதநேயமற்ற தீங்கு விளைவிக்கும் ஒரு நிகழ்வாக தூண்டுகிறது. இந்த பாகுபாடு கைதிகளின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கிறது


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். இந்த பாகுபாடு கடந்த காலத்திற்கான  எச்சம் அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இது இன்னும் மில்லியன் கணக்கானவர்களை, குறிப்பாக சிறையில் உள்ளவர்களை பாதிக்கிறது. 


இருப்பினும், சட்ட சீர்திருத்தங்களால் மட்டும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த அடக்குமுறையை சரிசெய்ய முடியாது. உண்மையான மாற்றத்திற்கு, சாதிய படிநிலைகளை ஆதரிக்கும் அதிகார அமைப்புகளை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். சட்டக் கட்டமைப்புகளை மட்டுமல்ல, அவற்றைத் தாங்கி நிற்கும் மனநிலையையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் இந்தியா தனது அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.


ஆதித்ய ரஞ்சன், U.K. லஃபரோ பல்கலைக்கழகத்தில் குற்றவியல், சமூகவியல் மற்றும் சமூகக் கொள்கையில் முனைவர் பட்ட ஆய்வாளராக (sociology and social policy at Loughborough University) உள்ளார். ஆஷ்னா தேவபிரசாத் சட்டம் பயின்றவர் மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட குற்றவியல் நீதி ஆராய்ச்சியாளராவார் (criminal justice researcher).




Original article:

Share: