இந்தியாவிற்கு தேவையான பசுமை மாற்றம். -அருணாபா கோஷ்

 இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கு பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க அமைப்புகள், செயல்பாட்டு செலவு மாதிரிகள், காலநிலை-எதிர்ப்பு முதலீடுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் தீர்வுகள், வட்ட பொருளாதார நடைமுறைகள் மற்றும் சிறந்த நுகர்வோர் நிதியுதவி  போன்றவை தேவை.


அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களின் நிழலில் COP29 பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது, ​​ஒன்று தெளிவாகிறது. இந்தியா தனது பொருளாதார வேகத்தை குறைக்காமல், சமமாக கரிமநீக்க (decarbonize) நடைமுறையில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் முதலீடுகளை செயல்படுத்த காலநிலை நிதியையும் ஈர்க்க வேண்டும். சுத்தமான, மீள்திறன் மற்றும் வலுவான ஆற்றல் அமைப்பில், வலுவான பொருளாதாரத்தை உருவாக்க இந்தியா ஏழு அடிப்படை மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த பசுமைப் பொருளாதாரத்தின் மையத்தை மக்கள் உருவாக்க வேண்டும்.


இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். உச்ச தேவை 2031-32 ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 370 ஜிகாவாட் எட்டும். அதாவது ஒவ்வொரு சில வருடங்களுக்கும், ஆற்றல் முதலீடுகள் எவ்வாறு செல்கின்றன, உள்கட்டமைப்புகள் எவ்வாறு  கட்டமைக்கப்படுகின்றன மற்றும் புதிய வணிக மாதிரிகள் எவ்வாறு வெளிவருகின்றன என்பதற்கான மாதிரிகள் நமக்குத் தேவைப்படும். தற்போதைய வழங்கல் மற்றும் தேவையை பொருத்துவதற்கு பதிலாக,  வெப்பமயமாதல் உலகில் இந்த முறைகளை எளிதாக்கும் மற்றும் செயல்படுத்தும் அளவீடுகளை நாம் கண்காணிக்க வேண்டும். மாற்றத்தைத் தூண்டுவதற்கு இந்த மாற்றங்கள் முக்கியமானவை.


முதலில், மையப்படுத்தப்பட்ட ஆற்றல் அமைப்புகளில் இருந்து பரவலாக்கப்பட்ட ஆற்றல் அமைப்புகளுக்கு மாறவும். விநியோகிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Distributed renewable energy (DRE)) ஆதாரங்கள் அளவில் ஆற்றல் அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான தூணாக இருக்கலாம். பெரிய அளவிலான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குவதில் இந்த ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியா ஏற்கனவே தனது லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. 10 மில்லியன் குடும்பங்களைச் சென்றடையும் நோக்கில், மேற்கூரை சூரிய ஆற்றல் உற்பத்தி (rooftop solar) முயற்சியை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த முயற்சி 30 ஜிகாவாட் சுத்தமான ஆற்றலை உருவாக்கும்.


குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் குறைந்த பொருளாதார அடுக்குகளில் உள்ள பெரும்பாலான நுகர்வோருக்கு மேற்கூரை சூரிய ஆற்றல் உற்பத்தி விலை மிகவும் அதிகமாக உள்ளது.  எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment, and Water (CEEW)) நடத்திய ஆய்வில், நாட்டின் மேற்கூரை சூரிய ஆற்றலில் சுமார் 30% 0-1 kW வகைக்கு உட்பட்டது. இந்த வகை மானியங்களுக்குப் பிறகும் பலருக்கு விலை உயர்ந்ததாகவே உள்ளது. சமூக சூரிய ஆற்றல் அல்லது சமூக கூட்டாண்மை போன்ற புதிய சந்தை சார்ந்த தீர்வுகள் மற்றும் வணிக மாதிரிகள் இந்த சிக்கலை தீர்க்க உதவும்.


இரண்டாவதாக, மூலதனச் செலவில் (capex) இருந்து செயல்பாட்டுச் செலவுக்கு (opex) மாற்றவும். பாரம்பரியமாக, ஆற்றல் அமைப்புகளை முதன்மையாக ஒரு மூலதனச் செலவுச் சிக்கலாகக் கருதுகிறோம். தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு, செயல்பாட்டுச் செலவு மாதிரியின் மூலம் எரிசக்தியை சிறப்பாக விலை நிர்ணயம் செய்வது பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு நுகர்வோரும் சோலார் பேனல் வாங்கத் தேவையில்லை.  ஒரு பயன்பாட்டு நிறுவனம் ஒரு சமூகத்திற்கான சோலார் பேனல்களை நிர்ணயித்த விலையில் நிறுவலாம் மற்றும் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கலாம். 


ஒவ்வொரு நபரும் குளிரூட்டியை வாங்குவதற்குப் பதிலாக, குளிர்ச்சியை ஒரு சேவையாக வழங்கும் மாவட்ட அளவில் குளிரூட்டும் முறைகளை செயல்படுத்தலாம். இதேபோல், நிலையான இயக்கத்தில், மின்சார பேருந்தின் விலையில் முதலீடு செய்வதைவிட மக்கள் ஒரு கிலோமீட்டருக்கு சுத்தமான போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தலாம். இது இறுதி நோக்கத்திற்கு உதவும் வகையில் ஆற்றலைப் பயன்படுத்துவதும், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதும் ஆகும்.


மூன்றாவதாக, குறுகிய கால நிதி அபாயங்களில் கவனம் செலுத்துவதிலிருந்து, காலநிலையைத் தாங்கக்கூடிய சுத்தமான ஆற்றல் மற்றும் வணிகங்களில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கி நாம் செல்ல வேண்டும். வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீடு செய்வது ஆபத்தானதாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த அபாயத்தின் பெரும்பகுதி உண்மையானதை விட உணரப்படுகிறது. 1.4 டிகிரி புவி வெப்பமடைதலில் நாம் ஏற்கனவே அனுபவிக்கும் அதிர்ச்சிகளையும் நாம் புறகணிக்க முடியாது. 


CEEW ஆய்வில், இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். காலநிலை மாற்றத்தின் மேக்ரோ பொருளாதார விளைவுகளுடன் ஒப்பிடுகையில், நமது ஆற்றல் அமைப்புகளை மீள்தன்மையடையச் செய்வதிலும், காலநிலை-உறுதிப்படுத்துதலிலும் முதலீடு செய்வது மிகவும் குறைவான அபாயகரமான அணுகுமுறையாகும். நாட்டின் கடினமான உள்கட்டமைப்பு நேரியல் அல்லாத காலநிலை அபாயங்களுக்கு எதிராக மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும். செலவில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பின்னடைவில் எவ்வளவு முதலீடு செய்வது எதிர்கால இடையூறுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


நான்காவதாக, தொழில்துறைக் கொள்கையை நிர்ணயிப்பதைவிட, விநியோகச் சங்கிலிகளில் இணைப்பதை பற்றி சிந்தியுங்கள். ஒரு கட்டத்திற்கு அப்பால், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பாதுகாப்புவாத நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட தொழில்துறை கொள்கைகளை இந்தியாவால் தற்போது வாங்க முடியாது.  இந்தக் கொள்கைகள் முழுப் பொருளாதாரத்தையும் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற முயற்சிக்கும் மிகவும் திறமையான வழியாக இருக்க வேண்டியதில்லை. 


உலகளாவிய சுத்தமான எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.  மற்ற நாடுகளுடன் இணைந்து அதன் பலத்தை மதிப்பதன் மூலமும், அதன் பலத்தில் செயல்படுவதன் மூலமும் இதை அடைய முடியும். சோலார் மற்றும் பசுமை ஹைட்ரஜன் விநியோகச் சங்கிலிகளில் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதிகள் உள்ளன. 


இந்தத் துறைகளில் திறம்பட பங்களிக்கக்கூடிய இடத்தை இந்தியா ஆராயலாம். கூடுதலாக, எதிர்கால சுத்தமான எரிபொருளுக்கான உலகளாவிய, விதிகள் அடிப்படையிலான அமைப்பை உருவாக்குவதில் இந்தியா ஒரு பங்கை வகிக்க முடியும். ஆற்றல் பாதுகாப்பு முக்கியமானது. எவ்வாறாயினும், பாதுகாப்புவாத மற்றும் ஒருதலைபட்சமான கொள்கைகளைக் காட்டிலும், ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை ஊக்குவிக்கும் மற்றும் சர்வதேச விதிகளைப் பின்பற்றும் பாதையில் இது தொடரப்பட வேண்டும்.


கரிம நீக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அடைய, கவனம் வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கு மாற வேண்டும். இந்தியா தற்போது இரண்டு விரைவான மாற்றங்களை சந்தித்து வருகிறது. முதலாவதாக, இது 820 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள இணைய பயனர்களைக் கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.


டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் அமைப்புகள் எவ்வாறு திறம்பட செயல்பட முடியுமா?  என்பது பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்குவதை விட அதிகம். மென்பொருள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் ஆகியவற்றிலும் முதலீடு தேவைப்படுகிறது.


மில்லியன் கணக்கான ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களின் வெளியீடு ஆரம்பம்தான். இந்த மீட்டர்கள் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் எப்படி, எப்போது வழங்குகிறது என்பதை மேம்படுத்த உதவுகிறது. இந்த மேம்படுத்தல் ஆற்றல் அமைப்புகளை மேலும் மீள்தன்மையுடையதாகவும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுடன் இணக்கமாகவும் ஆக்குகிறது. டிஜிட்டல் முறையில் மின்சாரத்தை நிர்வகித்தல் ஒரு புதிய வணிக மாதிரியாக மாறும். இது வெறுமனே பௌதீக சக்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதைத் தாண்டி நகரும்.


ஆறாவது, ஒரு நேர்கோட்டில் இருந்து ஒரு வட்ட பொருளாதாரத்திற்கு செல்கிறது. இது ஆற்றல் அமைப்புகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், நமது முக்கியமான கனிம பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. சமீபத்திய CEEW ஆய்வில், இந்தியாவின் தற்போதைய மற்றும் புதிய சூரிய ஆற்றல் திறனில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 600 கிலோ டன்களை எட்டும் என்று கண்டறிந்துள்ளது. இது 720 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு சமம். 


இந்த கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சிலிக்கான், டெல்லூரியம் மற்றும் காட்மியம் போன்ற கனிமங்களைக் பாதுகாப்பது சுற்றுச்சூழல் தேவையாகும். ஆனால், நீர் மற்றும் விவசாயக் கழிவுகளின் வட்டப் பொருளாதாரத்தின் மையமாக இந்தியாவை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.  இது காற்றின் தரம், நகர்ப்புற சுகாதாரம், நீர் இருப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு உதவக்கூடும்.


இறுதியாக, ஆற்றல் மாற்றத்தின் மையத்திற்கு மக்களைக் கொண்டு வாருங்கள். ஆற்றல் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் இருந்து இறுதிப் பயன்பாட்டு நுகர்வோருக்கு நிதியளிக்கும் நிலைக்கு மாற வேண்டிய அவசியம் உள்ளது. பெரிய மூலதனச் செலவில் மற்றும் சுத்தமான ஆற்றலாகப் பாயும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து சிந்திக்கிறோம். ஆனால், இறுதிப் பயன்பாட்டு நுகர்வோர் மின்சார இரு சக்கர வாகனத்தை வாங்க விரும்புகிறாரோ, அல்லது தங்கள் கூரையில் சோலார் பேனல்களைப் பயன்படுத்த விரும்புகிறாரோ, அல்லது அவர்களின் புதிய வீட்டிற்கு அதிக திறன் வாய்ந்த சாதனங்களை விரும்புகிறாரோ, அதற்கான நிதி எங்கே? தனித்தனியாக,  நுகர்வோரின்  தேர்வு மிகவும் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், நாம் ஒரு வரையறையை உருவாக்கும் போது, ​​ அவை  மிகப்பெரும் வாய்ப்பாக மாறும்.


இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கு இது ஒரு முக்கியமான காலகட்டம். முன்னோக்கி செல்லும் பாதை என்பது ஒரு ஆற்றல் மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது மட்டுமல்ல. இது ஒரு முன்னுதாரண மாற்றம் மற்றும் ஆற்றல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுடனான நமது உறவை மறுவரையறை செய்வதற்கான வாய்ப்பாகும். மேலும், கொள்கைகளின் மையத்தில் மக்களை மீண்டும் கொண்டு வரவும் உதவும்.




Original article:

Share: