இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (Overseas Citizen of India (OCI))

 இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (Overseas Citizen of India (OCI)) திட்டம் ஆகஸ்ட் 2005-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) திட்டமானது அனைத்து இந்திய வம்சாவளி நபர்களையும் (Persons of Indian Origin (PIO)) ஜனவரி 26, 1950 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவின் குடிமக்களாக இருந்தவர்களை இந்த திட்டத்தில் பதிவு செய்ய அனுமதிக்கிறது. அன்று முதல், அவர்கள் இந்திய குடிமக்களாகவும் தகுதி பெறுகின்றனர்.


இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருப்பவர், அடிப்படையில் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் (foreign passport holder), இந்தியாவிற்கு வருகை தருவதற்காக பல-நுழைவு (multiple-entry), பல்நோக்கு வாழ்நாள் விசா (multi-purpose life-long visa) வழங்கப்படுகிறது. அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தைப் பொருட்படுத்தாமல், உள்ளூர் காவல் அதிகாரிகளிடம் பதிவு செய்வதிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


2023-ம் ஆண்டில், 45 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) அட்டைகளை வைத்திருந்தனர். அவர்கள் 129 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில், 16.8 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருப்பவர்களில் அமெரிக்காதான் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அடுத்து, இங்கிலாந்து 9.34 லட்சத்துடனும், ஆஸ்திரேலியா 4.94 லட்சம், கனடா 4.18 லட்சம் வைத்திருப்பதாக அரசாங்கப் பதிவு குறிப்பிடுகிறது.


ஆரம்பத்தில், இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருப்பவர், விவசாயம் அல்லது தோட்டக்கலைப் பயிர்களை கையகப்படுத்துவதைத் தவிர்த்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-Resident Indians (NRI)) போன்ற பொருளாதார, நிதி மற்றும் கல்வி வசதிகளுக்கு சமமான அணுகலைப் பெற்றிருந்தார். இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்கும் இந்திய குடிமக்கள் ஆவர்.


புதிய சட்டங்களின்படி, இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) அட்டைதாரர்கள் இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட தளங்களுக்குள் நுழைய ஒப்புதல் அல்லது அனுமதி பெற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் செல்லும் வெளிநாட்டினருக்கும் இதே வரம்புகள் பொருந்தும்.


புதிய வரம்புகளும் விதிக்கப்பட்டன. இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) இப்போது "எந்தவொரு ஆராய்ச்சி," "அறக்கட்டளை," "தப்லிகி," அல்லது "பத்திரிகை" ஆகிய நடவடிக்கைகளுக்கு ஒரு சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும். இந்தியாவில் "பாதுகாக்கப்பட்ட," "கட்டுப்படுத்தப்பட்ட" அல்லது "தடைசெய்யப்பட்ட" என்று குறிப்பிடப்பட்டுள்ள எந்தப் பகுதியையும் பார்வையிட அவர்களுக்கு அனுமதி தேவை.


இந்த அறிவிப்பு இந்தியாவின் அயலகக் குடிமக்களை (OCI) மற்ற அனைத்து பொருளாதார, நிதி மற்றும் கல்வித் துறைகளிலும் "வெளிநாட்டினர்" (foreign nationals) போலவே கருதுகிறது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (Foreign Exchange Management Act(FEMA)) கீழ் இந்திய ரிசர்வ் வங்கியின் முந்தைய சுற்றறிக்கைகள் இருந்தபோதிலும், இது 2003–ம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இருந்தது.


ஒரு விண்ணப்பதாரர் தனது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி பாகிஸ்தான் அல்லது வங்காளதேசத்தின் குடிமக்களாக இருந்தால் இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) அட்டை பெறுவதற்கு தகுதி பெறமாட்டார். இருப்பினும், ஒரு இந்திய குடிமகனின் வெளிநாட்டு வம்சாவளி மனைவி அல்லது OCI திருமணப் பதிவு செய்யப்பட்டு குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடித்திருந்தால், இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.வெளிநாட்டு ராணுவ வீரர்கள், செயலில் இருந்தாலும் அல்லது ஓய்வு பெற்றிருந்தாலும், இந்தியாவின் அயலகக் குடிமக்களுக்கு (OCI) தகுதியற்றவர்கள் ஆவர்.


இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருப்பவர் வாக்களிக்கத் தகுதியற்றவர். அவர்களால் சட்டப் பேரவை, சட்டமன்றக் குழு அல்லது நாடாளுமன்றத்தில் பணியாற்ற முடியாது. மேலும், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி போன்ற இந்திய அரசியலமைப்புப் பதவிகளை வகிக்கவும் அவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர். பொதுவாகவே அவர்கள் அரசாங்கத்தில் வேலை செய்ய தகுதியற்றவர்களாவர்.


2009-ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தமானது, இந்தியாவின் அயலகக் குடிமக்கள் (OCI), அட்டை வைத்திருப்பவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வழங்கப்படும் அதே நன்மைகளை வழங்கியது. இதில் நினைவுச்சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் நுழைவுக் கட்டணங்களுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) இணையான தொகையும் இதில் அடங்கும். மேலும், இவர்கள் டாக்டர்கள், பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant (CA)), வழக்கறிஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற தொழில்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) இருக்கும் அதே உரிமைகளை OCI அட்டைதாரர்களுக்கும் அனுமதித்துள்ளது. 


கூடுதலாக, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) அகில இந்திய முன்-மருத்துவ தேர்வு (Pre-Medical Test (PMT)) மற்றும் பிற தேர்வுகளில் தோன்றுவதற்கு அதே வாய்ப்பு இந்தியாவின் அயலகக் குடிமக்களுக்கும் (OCI) வழங்கப்பட்டது.




Original article:

Share: