பொது அதிகாரிகள் இந்த புல்டோசர் நீதிக்கு, பொறுப்புவகிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
குடிமக்களின் சொத்துக்களை இடிப்பதில் உரிய நடைமுறையை பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள், சொத்து உரிமையாளர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வேளையில், அதற்கு தண்டனையாக, மாநில அதிகாரிகளால் இவர்களின் சொத்துக்களை இடிக்கும் பிரச்சினையை எழுப்பிய வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு முக்கிய பகுதியாகும். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உத்தரபிரதேச அரசால் ஒருவரின் வீட்டை இடித்தது பற்றிய ஒரு வழக்கை எடுத்துரைத்தார். இந்த இடிப்பானது, சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்த நபரின் வீடானது சட்டவிரோதமாக அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, இந்த வகையான நடவடிக்கையை "புல்டோசர் நீதி" என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு என்ன?
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் "சட்டவரம்புகளை மீறிய" (extra-legal) நடைமுறையை கேள்விக்குட்படுத்திய மனுக்கள் இந்த வழக்கில் அடங்கும். இதில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் சமீபகாலமாக இந்த நடைமுறை காணப்படுகிறது. இது 2022-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது ராஜஸ்தானிலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தானின் உதய்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லமில், ஒரு குடும்பத்தின் மூதாதையர் வீட்டை அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்தனர். இந்த நடவடிக்கை, பசுவைக் கொன்றதற்காக உரிமையாளரின் மகன் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டதை அடுத்து இது நடந்தது.
உதய்பூரில், வாடகைதாரர் ஒருவரின் வீட்டை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது. வனநிலத்தில் வீடு "ஆக்கிரமிப்பு" (encroaching) என்று காரணம் கூறப்பட்டது. மேலும், குத்தகைதாரரின் 15 வயது மகன் வேறு சமூகத்தைச் சேர்ந்த வகுப்புத் தோழரைக் கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆகஸ்ட் மாதத்தில் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தால் நகரில் வகுப்புவாத பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த இடிப்பு மற்றும் குத்தகைதாரரின் மகன் மீதான குற்றச்சாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த மனுக்களில், பல்வேறு மாநிலங்களில் இடிப்பு தொடர்பான பிற வழக்குகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று, ஏப்ரல் 2022-ம் ஆண்டில் டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத வன்முறையால், இந்த இடிப்பு நடவடிக்கை ஏற்பட்டபோது, ஜமியத்-உலமா-இ-ஹிந்த் இயக்கம் வழக்கைத் தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் விவகாரங்களைக் கையாள போதுமான நேரம் இருப்பதையும் அவர்கள் உறுதி செய்கிறார்கள். பொது இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதில் சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், இரயில் பாதைகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் அல்லது நீர்நிலைகள் ஆகியவை அடங்கும். மேலும், நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்ட வழக்குகளிலும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது.
அறிவிப்பை வழங்குதல் : இடிப்பதற்கு முன் குறைந்தது 15 நாட்களுக்கு முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட நபருக்கு அவர்கள் பெறும் தேதியிலிருந்து, இடிப்பு தொடங்கும் முன் கொடுக்கப்பட வேண்டும். அறிவிப்பில் கட்டமைப்பின் விவரங்கள், இடிப்புக்கான காரணம் மற்றும் "தனிப்பட்ட விசாரணை" (personal hearing) தேதி ஆகியவை இருக்க வேண்டும். இந்த விசாரணை உரிமையாளர்களை இடிப்புக்கு எதிராக வழக்கு மேற்கொள்ள அனுமதிக்கும்.
முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டவுடன், ஆட்சியர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். மின்னஞ்சலின் ரசீதை உறுதிப்படுத்த தானியங்கு பதில் ஒப்புகை அமைக்கப்பட வேண்டும். இதன்காரணமாக, பின்நாளில் எந்தவொரு குற்றச்சாட்டையும் வராமல் தடுக்க இந்த நடவடிக்கை இருக்கும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
விசாரணை மற்றும் இறுதி தீர்ப்பு : முறையான பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திய பிறகு, இறுதி தீர்ப்பில் சில தகவல்கள் குறிப்பிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதில், உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளரின் வாதங்கள் இதில் அடங்கும். மேலும், உள்ளூர் மாநகராட்சி (local municipal corporation) போன்றவை ஏன் வழக்கைத் தீர்க்க முடியாது என்று நம்புகிறது என்பதையும் இது விளக்க வேண்டும். இதில், முழு கட்டுமானமும் அல்லது அதன் ஒரு பகுதியை மட்டும் இடிக்க வேண்டுமா என்று உத்தரவில் குறிப்பிட வேண்டும். இடிப்பதற்கான தீவிர நடவடிக்கையை எடுத்ததற்கான காரணங்களையும் சேர்க்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
பின்விளைவு (THE AFTERMATH) : ஆணையமானது, இடிப்புக்கான இறுதி உத்தரவை நிறைவேற்றி, சொத்து உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளர் ஆணையத்தின் உத்தரவைப் பெற்ற பிறகு, "15 நாட்களுக்கு இந்த உத்தரவு செயல்படுத்தப்படாது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இது கட்டுமானத்தை அகற்ற அல்லது நீதிமன்றத்தில் இறுதி உத்தரவை எதிர்த்து தடை உத்தரவைக் கேட்க உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளர் கால அவகாசத்தை நீதிமன்றத்தில் பெறலாம் .
இரண்டாவது 15 நாள் காலகட்டத்தின் முடிவில், இறுதி இடிப்புக்கான உத்தரவு தடைபெறாமல், கட்டுமானம் அகற்றப்படாவிட்டால் இதற்கான இடிப்பு நடவடிக்கையை தொடரலாம். இருப்பினும், அதிகாரிகள் இடிப்பு நடைபெறும்போது வீடியோ பதிவு எடுக்க வேண்டும். இதை, இடிப்பதற்கு முன் ஆணையமானது "ஆய்வு அறிக்கையையும்” தயார் செய்ய வேண்டும். கூடுதலாக, ஒரு "இடிப்புக்கான அறிக்கை" (demolition report) தயாரிக்கப்பட்டு, இதில் இடிப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பட்டியலும் உள்ளடக்க வேண்டும்.
வழிகாட்டுதல்களுக்கு உச்சநீதிமன்றத்தின் காரணம் என்ன?
குற்றம் சாட்டப்பட்ட நபரின் சொத்துக்களை சட்டவிரோதமாக இடிக்கும்போது மீறப்படும் பல அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்டக் கோட்பாடுகளை உச்சநீதிமன்றம் நம்பியுள்ளது.
அதிகாரப் பிரிப்பு : நீதித்துறைக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளியா என்பதைத் தீர்மானிப்பதற்கும், ஏதேனும் மாநில விதிமுறைகள் தங்கள் வரம்புகளை மீறியுள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கும் பொறுப்பாகும். மாநில அரசு அதிகாரிகள் முடிவெடுப்பவர்களின் பணியை ஏற்க முடியுமா என்று நீதித்துறை கேள்வி எழுப்புகிறது. அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்தாமல் அவர்களின் சொத்துக்களை இடிப்பதன் மூலம் யாரையாவது தண்டிக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.
உச்சநீதிமன்றத்தின் படி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இடிப்பு தண்டனையாக இருக்க முடியும் என்று அரசு முடிவு செய்வது "முற்றிலும் அனுமதிக்கப்பட முடியாதது" (wholly impermissible) என்று குறிப்பிட்டிருந்தது. அதன் முக்கிய செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் நீதித்துறையை நிர்வாகத்தால் மாற்ற முடியாது என்றும் அது குறிப்பிட்டது.
பொது நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை : பொது அதிகாரிகள் அவர்களின் செயல்கள் மற்றும் செயலற்ற தன்மைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. சொத்து உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளர் குற்றம் சாட்டப்பட்ட நபராக இருப்பதால், "சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு" இடிப்புக்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் படி, அத்தகைய உயர்நிலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
அரசாங்கம் "வெளிப்படையான" முறையில் செயல்படுவதை உறுதிசெய்யவும், அவ்வாறு செய்யாதபோது அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யவும் வழிகாட்டுதல்கள் அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
தங்குமிட உரிமை : குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே அத்தகைய சொத்துக்களை வைத்திருப்பவர் அல்லது சொந்தமாக வைத்திருப்பவர் அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக தங்குமிட உரிமையை உள்ளடக்கியது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர் அதே வீட்டில் வசிக்கும் மற்ற அப்பாவி மக்களிடமிருந்து இந்த உரிமையை பறிப்பது "முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இடிக்கப்பட்ட சொத்துக்கள் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கொண்டாலும், சட்டவிரோத கட்டுமானம் நகராட்சி சட்டங்களை மீறும் வழக்குகளைத் தீர்ப்பதற்கு, உச்சநீதிமன்றம் ஒரு தனி அறிக்கையை வகுத்துள்ளது. "ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பை திடீரென இடிக்கத் தேர்ந்தெடுத்து, அதே பகுதியில் உள்ள அதேபோன்று அமைந்திருக்கும் மற்ற கட்டிடங்களைத் தொடக்கூட இல்லை" என்று அது கூறியது, "உண்மையான நோக்கம்" குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பதே தவிர சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றுவதல்ல இதன் குறிக்கோள் என்று குறிப்பிட்டிருந்தது.