ஒரு இந்திய மாநிலத்தின் ஆளுநர் -நிதேந்திர பால் சிங்

 1. அரசியலமைப்புச் சட்டத்தின் 153-வது பிரிவு, "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. அரசியலமைப்பு தொடங்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1956-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தமானது "ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம்" என்று இந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2. ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் என்று அரசியலமைப்புப் பிரிவு 155 கூறுகிறது. மேலும், குடியரசுத் தலைவரால்  கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்ட உத்தரவு மூலம் நியமனம் செய்யப்படுகிறது. அரசியலமைப்புப் பிரிவு 156-ன் படி, குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் இருப்பார். ஆனால், வழக்கமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. ஐந்தாண்டுகள் முடிவதற்குள் குடியரசுத் தலைவர் தங்கள் விருப்பத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும்.


3. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் செயல்படுவதால், ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதும் மற்றும் நீக்கப்படுவதும் நிகழ்கிறது. ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் அரசியலைமைப்பில் குறிப்பிடவில்லை.


4. அரசியலமைப்புப் பிரிவு 157 ஆளுநருக்கான தகுதிகளைக் கூறுகிறது. இதில், ஆளுநர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.


5. அரசியலமைப்புப் பிரிவு 158 ஆனது, ஆளுநரின் அலுவலகத்தின் நிபந்தனைகளை வகுக்கிறது. ஆளுநர் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது. மேலும், லாபம் தரும் வேறு எந்த பதவியையும் வகிக்கக்கூடாது.


6. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு முக்கிய அதிகாரங்கள் உள்ளன. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது ஆகியவை இதில் அடங்கும். மாநில சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சிக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பதை ஆளுநர் முடிவு செய்யலாம். தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மையானது தொங்கு முடிவாக (hung verdict) இருக்கும் சமயங்களில், பெரும்பான்மையை நிரூபிக்க எந்தக் கட்சியை முதலில் அழைக்க வேண்டும் என்பதை ஆளுநர் முடிவு செய்வார். இந்த அதிகாரங்கள் ஆளுநரின் பங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன.


7. ஆளுநரும், அரசும் கருத்து வேறுபாட்டின் போது எப்படி பகிரங்கமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. மேலும், ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த நடைமுறையும் இதில் குறிப்பிடவில்லை.





Original article:

Share: