கருத்தொருமித்த குடியரசு : அரசியலமைப்பு சபையில் இருந்து இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அறிவுரை -சி ராஜ் குமார்

 75-வது ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமித்த ஆவணமாக உருவாக்குவதில் அரசியல் நிர்ணய சபையின் குறிப்பிடத்தக்க முயற்சிகளைப் பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியம். இன்றைய கருத்தியல் வேறுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் இதேபோன்று உருவாக்க முடியுமா?


இன்று, நவம்பர் 26 அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் எதிர்காலத்தை கற்பனை செய்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இதை அவர்கள் ஜனநாயக, ஆலோசனை, உள்ளடக்கம் மற்றும் வாதங்களின் செயல்முறை மூலம் இதை உருவாக்கியுள்ளனர். இந்த 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், அவர்களின் பங்களிப்பை நாம் கொண்டாட வேண்டும். ஒருமித்த ஆவணமாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதும் முக்கியம். இந்த செயல்முறை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்வேகம் அளிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மக்கள் ஆணையையும், அரசியலமைப்பு கடமைகளையும் நிறைவேற்ற வேலை செய்கிறார்கள். அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் இருந்து வரும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால், மக்கள் எப்படி ஒருவரையொருவர் கடுமையாக ஏற்கவில்லை என்பதுதான். அவர்கள் ஒருவரையொருவர் உந்துதல்கள், அர்ப்பணிப்புகள் அல்லது மதிப்புகளை கேள்வி கேட்காமல் இதைச் செய்கிறார்கள்.


பி ஆர் அம்பேத்கர், நவம்பர் 25, 1949 அன்று அரசியலமைப்புச் சபையில் ஆற்றிய தனது கடைசி உரையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். இதில் குறிப்பிட்டதாவது, அரசியல் நிர்ணய சபை வெறும் தற்செயலான குழுவாக இருந்திருந்தால் வரைவுக் குழுவின் பணி மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஒவ்வொரு உறுப்பினரும் அல்லது குழுவும் சுதந்திரமாக செயல்படும் கருப்பு மற்றும் வெள்ளை கற்களால் ஆன நடைபாதை போல இருந்திருக்கும். இது குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கும். அனைத்து உறுப்பினர்களும் கடுமையான கட்சி விதிகளைப் பின்பற்றினால், பேரவை நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருந்திருக்கும். கண்டிப்பான கட்சி ஒழுக்கம் சட்டசபையை "ஆம்" என்று சொல்லும் மக்கள் குழுவாக மாற்றியிருக்கும்.


அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் எதிர்ப்புக் குரல்களைப் பாராட்டி கொண்டாடினார். அவர் குறிப்பிட்டதாவது, "... அதிர்ஷ்டவசமாக, கிளர்ச்சியாளர்கள் இருந்தனர். அவர்கள் திரு காமத், டாக்டர் பி எஸ் தேஷ்முக், திரு சித்வா, பேராசிரியர் கே டி ஷா மற்றும் பண்டிட் ஹிர்டே நாத் குன்ஸ்ரு ஆகியோர் ஆவர். அவர்கள் எழுப்பிய கருத்துக்கள் பெரும்பாலும் கருத்தியல் சார்ந்தவை. அவர்களின் ஆலோசனைகளை ஏற்க நான் தயாராக இல்லை என்பது, அவர்களின் ஆலோசனைகளின் மதிப்பைக் குறைக்காது. பேரவையின் நடவடிக்கைகளை உயிர்ப்பிப்பதில் அவர்கள் ஆற்றிய சேவையைக் குறைக்காது. ஆனால், அரசியலமைப்பின் அடிப்படையிலான கொள்கைகளை விளக்குவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்காது…” நாடாளுமன்றத்தில் ஜனநாயக ஈடுபாட்டின் கலாச்சாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் இவை கவனமாக ஆராயப்பட்டது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம் இது.


நாடாளுமன்றத்தை எவ்வாறு வலுப்படுத்துவது மற்றும் மிகவும் பொருத்தமானதாக மாற்றுவது என்பது குறித்து நாடாளுமன்றம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று தரவு காட்டுகிறது. 1990க்கு முன், ஒவ்வொரு மக்களவை கூட்டத்தொடரும் 550 நாட்கள், மொத்தம் 3,500 மணிநேரம் நீடித்தது. 1990 க்குப் பிறகு, இது 345 நாட்கள் மற்றும் 1,800 மணிநேரமாக குறைந்தது. 17-வது மக்களவை, ஐந்து ஆண்டுகளில் 274 நாட்களை மட்டுமே கொண்ட மிகக் குறைந்த அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதை ஒப்பிடுகையில், 1-வது மக்களவை 1952-1957 வரை 677 நாட்கள் கூடியது. 15-வது மக்களவை 192 மசோதாக்களை நிறைவேற்றியது. 


அதே சமயம், 5-வது மக்களவையில் 487 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றக் குழுக்களுக்கு (Parliamentary Committees) பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களின் சதவீதம் 15-வது மக்களவையில் 71% ஆக இருந்து 17-வது மக்களவையில் 16% ஆக குறைந்தது. 15 மற்றும் 17 வது மக்களவைகள் ஒரு மணி நேரத்திற்குள் 36% மற்றும் 35% மசோதாக்களை நிறைவேற்றின. 15-வது மக்களவை இடையூறுகளால் 37% , 16வது 16% நேரத்தை இழந்தது. ஒன்றிய பட்ஜெட் விவாதத்தில் செலவழித்த சராசரி நேரம் 1990-க்கு முன் 120 மணிநேரத்திலிருந்து 35 மணிநேரமாக குறைந்துள்ளது. 2023, 2018, 2013 ஆகிய ஆண்டுகளில் முழு பட்ஜெட்டும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.


இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று பாடங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்.


அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் மிகவும் மாறுபட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்கள், வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவநியாயமான மக்கள் இந்த பிரச்சினைகளில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தின் சிக்கலான பிரச்சினைகளை ஒன்றிணைத்து விவாதிக்கவும் இந்த திறன் அரசியல் நிர்ணய சபையின் தனிச்சிறப்பாகும்.


அரசியல் நிர்ணய சபையின் குறிப்பிடத்தக்க அம்சம், மாறுபட்ட அரசியல் மற்றும் சித்தாந்த நலன்கள் மேலோங்கி இருப்பது மட்டுமல்லாமல், ஒரே அரசியல் தூண்டுதலுக்குள் கூட வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. ஒரு ஜனநாயக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பன்மைத்துவ கருத்துக்கள் சட்டப் பேரவையின் சொற்பொழிவின் ஒரு பகுதியாக இருந்தன. நிச்சயமாக, வலுவான அரசியல் கட்சிகள் அவற்றின் சித்தாந்த நலன்களுடன் வேரூன்றவில்லை என்பதையும், பேரவை தற்காலிக நாடாளுமன்றமாக செயல்பட்டாலும், நமது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் வரலாற்று சுமையை சுமக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். 


ஆயினும்கூட, நம் காலத்தின் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளான  வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பிற மனித மேம்பாட்டு சவால்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பும் நேரத்தில், நாடாளுமன்றத்திற்குள் அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.


இந்தியாவின் அரசியலமைப்பு உருவான வரலாறு கூட்டு சக்தியைக் காட்டுகிறது. புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை உருவாக்க பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்ததை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய அரசியல் நிர்ணய சபையின் பல உறுப்பினர்கள், பின்னர் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்களில் பணியாற்றினார்கள். 


அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உந்துதல்கள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பார்வையுடன் ஒன்றிணைகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும், மறுபரிசீலனை செய்யவும் இது ஒரு முக்கிய தருணமாகும்.


எழுத்தாளர் ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் ஆவார். எழுத்தாளர் ஜிண்டால் குளோபல் லா ஸ்கூலின் டீனும் ஆவார்.




Original article:

Share: