100 ஆண்டுகளுக்கு முன்பு பெல்காமில் மகாத்மா காந்தி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய போது. - ஷியாம்லால் யாதவ்

 1924-ஆம் ஆண்டு கர்நாடக நகரில் நடந்த கட்சி மாநாடு காங்கிரஸை மட்டுமல்ல, நாட்டின் சுதந்திரத்தையும் மாற்றியது. 


கர்நாடகாவின் பெலகாவியில் டிசம்பர் 26-27 தேதிகளில் நவ சத்தியாகிரக பைதக் (Nava Satyagraha Baithak) என்று அழைக்கப்படும் காங்கிரஸ் செயற்குழுவின் (Congress Working Committee (CWC)) முக்கியமான கூட்டம் நடைபெற்ற நிலையில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் அதே நகரத்திற்கு திரும்பி உள்ளது. 


கூட்டத்தொடரின் முதல் நாளில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டிசம்பர் 26 அன்று புதுதில்லியில் காலமானார் என்ற செய்தி வெளியாகியது. 


சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924-ஆம் ஆண்டு டிசம்பர் 26-27 தேதிகளில், காங்கிரஸ் தனது 39-வது அமர்வை பெல்காமில் (இப்போது பெலகாவி) நடத்தியது.  இருப்பினும், இன்னும் இரண்டு காரணங்களுக்காக இந்த மாநாடு முக்கியமானதாக கருதப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை தருணமாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல், 1885-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காங்கிரஸின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையையும் குறித்தது. 


சுதந்திரப் போராட்ட வீரர் பி.பட்டாபி சீதாராமையா தனது 1935-ஆம் ஆண்டு புத்தகத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதுவது போல், "ஒத்துழையாமை வரலாற்றில், பெல்காம் மாநாடு ஒரு மைல்கல், காந்தியத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏறக்குறைய முழுமையடைந்திருந்தது மற்றும் காங்கிரசு பிரிந்து நின்றது என்று குறிப்பிட்டார். 


பெல்காம் அமர்வு சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் நடந்தது. காந்தியின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய தருணமாகவும் இருந்தது.  அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜனவரி 1915-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார்.


ஏப்ரல் 13, 1919-ஆம் ஆண்டு அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நாட்டை உலுக்கியது. அதே ஆண்டில், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசுச் சட்டம், (1919) இந்தியாவில் சுயாட்சிக்கான அதிகரித்து வரும் கோரிக்கையை எதிர்கொள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. 


செப்டம்பர் 1920-ஆம் ஆண்டில், காந்தி ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிப்ரவரி 4, 1922-ஆம் ஆண்டு அன்று, உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா என்ற இடத்தில் இயக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் செய்த ஒரு குழுவினர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக, போராட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.  இச்சம்பத்தில் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அனைவரும் பலியாகினார். இந்த சம்பவத்திற்கு எட்டு நாட்களுக்குப் பிறகு, காந்தி இயக்கத்தை இடைநிறுத்தினார்.  இந்த முடிவை மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் உள்ளிட்ட காங்கிரஸின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர். 


மார்ச் 10, 1922-ஆம் ஆண்டு, யங் இந்தியாவுக்கு அவர் எழுதிய கட்டுரைகளுக்காக காந்திக்கு தேசத்துரோகத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜனவரி 12, 1924-ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், காந்தி பூனாவில் (இப்போது புனே) சிறையில் இருந்தபோது குடல்வால் அழற்சிக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 


இந்தியாவின் முதல் பிரதமராக வரவிருந்த ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "இந்தியா கவலையால் மரத்துப்போனது; நாங்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பயத்துடன் காத்திருந்தோம். நெருக்கடி கடந்து சென்றது, அவரைக் காண நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் பூனாவை அடையத் தொடங்கினர்."  என்று குறிப்பிட்டார்.


காந்தியின் நிலையின் தீவிரத்தின் விளைவாக அவர் பிப்ரவரி 5, 1924-ஆம் ஆண்டு சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைந்து தனது சுதந்திரப் போராட்டத்திற்கு விரைவாகத் திரும்புவார் என எதிர்பார்ப்பு நிலவியிது. 


1923-ஆம் ஆண்டு செப்டம்பரில் புதுதில்லியில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமர்வுக்குப் பிறகு நடைபெற்ற பெல்காம் மாநாடு வரை, காங்கிரஸ் 1920-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தை ஒரு நிலையற்ற நிலையிலேயே கழித்தது. 


1922-ஆம் ஆண்டு டிசம்பரில் பீகாரின் கயாவில் தாஸ் தலைமையில் நடைபெற்ற கட்சியின் 37-வது அமர்வில், மோதிலால் நேரு-தாஸ் கட்சி சித்தாந்தத்தை சீர்திருத்தவும், ஒத்துழையாமை இயக்கத்தை பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றத்திற்கும் விரிவுபடுத்தவும் முன்மொழிந்தார். இருப்பினும், அவர்களின் முன்மொழிவு சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான மாற்றத்தை ஏற்படுத்தாத பிரிவால் தோற்கடிக்கப்பட்டது. 


இந்தத் தோல்வியின் விளைவாக மோதிலால் நேரு-தாஸ் தலைமையிலான மாற்றத்திற்கு ஆதரவான முகாம் 1923-ஆம் ஆண்டு ஜனவரியில் சுயராஜ்யக் கட்சியை உருவாக்கியது. வளர்ந்து வரும் கட்சி அந்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மாகாணத்தில் (இப்போது உ.பி.) கோவிந்த் வல்லப் பந்தின் தொகுதி உட்பட பல இடங்களை வென்றது. 


1923-ஆம் ஆண்டில் ஆந்திராவின் காக்கிநாடாவில் முகமது அலி தலைமையில் நடந்த கட்சியின் 38-வது கூட்டத்தில், 39-வது அமர்வை கர்நாடக நகரில் 1924 டிசம்பர் 26-27 தேதிகளில் நடத்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெல்காம் அப்போது பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமர்வு நடந்த இடம் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெயரால் விஜயநகரம் என்று பெயரிடப்பட்டது. 


காந்தி வாழ்ந்த இடங்களில் ஒன்றான சேவாகிராம் ஆசிரமத் தலைவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 39-வது அமர்வு குறித்த கையேட்டின்படி, அவருக்காக வித்யாரண்யா ஆசிரமம் என்ற சிறப்பு குடிசை கட்டப்பட்டது. இருப்பினும், அவர் அதை காதர் அரண்மனை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். 


பிரதிநிதிகளின் வசதிக்காகவும், காங்கிரஸின் வேண்டுகோளின் பேரிலும், ஒரு கொடி ரயில் நிலையம் (கோரிக்கையின் பேரில் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் இடம்) அந்த இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டது. பிரதிநிதிகளுக்குத் தண்ணீர் ஏற்பாடு செய்வதற்காக பம்பா சரோவர் என்ற பெயரில் ஒரு பெரிய கிணறு வெட்டப்பட்டது. 


பெல்காமுக்கு முன்பு, 1924-ஆம் ஆண்டில் சமூகம், இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் காங்கிரஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பல முக்கிய நிகழ்வுகளைக் கண்டது. 


1920-ஆம் ஆண்டுக்கு முன்னர் காங்கிரசில் சேர்ந்த ஜவஹர்லால் நேரு, ஜனவரி 1924-ஆம் ஆண்டில் காங்கிரஸ் சேவா தளத்தின் (அப்போது இந்துஸ்தானி சேவா தளம் என்று அழைக்கப்பட்டது) நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே மாதத்தில், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் எர்னஸ்ட் டே கொல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) ஆர்வலர் கோபிநாத் சாஹாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். 


1924-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்  கோஹட் (இன்றைய பாகிஸ்தான்), டெல்லி, குல்பர்கா, நாக்பூர், லக்னோ, அமேதி, ஷாஜகான்பூர், சம்பல், அலகாபாத் மற்றும் ஜபல்பூர்நாடு முழுவதும் பயங்கரமான வகுப்புவாத கலவரங்கள் நடந்தன. 


மிக மோசமாக பாதிக்கப்பட்ட கோஹட்டில் ஏராளமான இந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். மேலும், பல குடும்பங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ராவல்பிண்டி மற்றும் பிற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். சீதாராமையா தனது புத்தகத்தில் எழுதியது போல், "கோஹத் கலவரம் உண்மையில் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்தது". கோஹட் கலவரத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆராய காந்தி மற்றும் சௌகத் அலி அடங்கிய இரண்டு நபர் குழு அமைக்கப்பட்டது. கலவரம் காரணமாக அதே ஆண்டு செப்டம்பர் 17 அன்று, காந்தி 21 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 


அந்த ஆண்டு அக்டோபரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிற முக்கிய காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து வங்காளம் கொதிநிலையில் இருந்தது. நவம்பர் மாதம், முகமது அலி மற்றும் சவுகத் அலி ஆகியோரின் தாயாரான சுதந்திர போராட்ட வீரர் பி அம்மா ( Bi Amma) காலமானார்.  


இந்தப் பின்னணியில், பெல்காம் கூட்டத்தொடருக்கு முன்னதாக காங்கிரசில் மாற்றத்தை ஆதரிப்பவர்களுக்கும், மாற்றத்தை விரும்பாதவர்களுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. மே 1924-ஆம் ஆண்டில், காந்தி மாற்றத்திற்கு ஆதரவாளர்கள் அல்லது சுயராஜ்ஜியவாதிகளுடன் ஒரு உரையாடலை நடத்தினார். இந்த உரையாடல் ஜுஹு (Juhu) உரையாடல் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், இது காந்தி அப்போது தங்கியிருந்த பம்பாயின் ஜுஹுவில் (இப்போது மும்பை) ஒரு குடிசையில் நடந்தது.  


இருப்பினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த காந்தி மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. காந்திக்கும் மோதிலால் நேரு-தாஸுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் இறுதியாக ஜூன் மாதம் அகமதாபாத் கட்சியின் அகமதாபாத் கூட்டத்தின் போதும் அதே ஆண்டு நவம்பரிலும் நிறுவப்பட்டது. பெல்காம் மாநாடு டிசம்பரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், பலர் அந்த அமர்வுக்கு காந்தி தலைமை தாங்குவதை ஆதரிக்கவில்லை. 


1923-ஆம் ஆண்டு அமர்வின் போது முகமது அலியால் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பெல்காம் கூட்டத்தின் செயல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் தனது சுயசரிதையில், "அவருக்கு (காந்தி) காங்கிரஸ் தலைவராக ஆவது இயல்பில் ஒன்று, ஏனென்றால் அவர் நீண்ட காலமாக நிரந்தர  தலைவராக இருந்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.


காந்தியின் தலைமையுரை 


பெல்காம் மாநாட்டில் தனது தலைமையுரையில் காந்தி 1920-ஆம் ஆண்டு முதல் காங்கிரசில் நடந்த நிகழ்வுகளை விவரித்தார். இந்தியாவில் வகுப்புவாத கலவரங்கள் குறித்த பிரச்சினையையும் அவர் எழுப்பினார்.  கோஹட்டில் நடந்ததைப் போன்ற சம்பவங்களால் அவரை மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறினார். தீண்டாமை நடைமுறை உட்பட நடைமுறையில் உள்ள பிற பிரச்சினைகளையும் அவர் வெளிப்படுத்தினார். 


அதுவரை உயர் குடியினரின் அமைப்பாகக் கருதப்பட்ட காங்கிரஸ், இந்த அமர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மக்களைச் சென்றடைந்தது. இருப்பினும், பெல்காம் அமர்வின் மிகப்பெரிய வெற்றி காந்தி மற்றும் மோதிலால் நேரு-தாஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாகும். இது கட்சியில் உட்பூசலை முடிவுக்குக் கொண்டு வந்தது. அமர்வின் போது எடுக்கப்பட்ட பிற முடிவுகளில் அரசாங்க கவுன்சில்களில் சுயராஜ்யவாதிகள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. அதே நேரத்தில் சுயராஜ்யவாதிகள் கட்சி உறுப்பினர்களாக இருப்பதற்காக காதி அணிய காந்தியின் நிபந்தனையை ஒப்புக்கொண்டனர். 




Original article:

Share: