ஆலை மூடப்பட்டதால், ஸ்டெர்லைட் தாமிர ஆலையுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
சீனாவை நம்புவது, ஒப்பந்த சேவையாக்கம் (outsourcing) அல்லது இறக்குமதிகள் ஒரு விநியோக ஆதாரத்தை அதிகமாகச் சார்ந்திருப்பதை உருவாக்கலாம். இது ஏற்றுமதியாளருக்கு சந்தையை கட்டுப்படுத்த அதிக சக்தியை அளிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் நாடுகளை பல்வேறு வழிகளில் பாதுகாக்கின்றன. பாதுகாப்பு என்பது ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கான சிறந்த வடிவமாகும். முன்னுரிமை பொருளாதாரம், மற்றும் சில நாடுகளில் மதச்சார்பின்மை காரணமாக மதம் மற்றும் கலாச்சாரம் சமமான முக்கியத்துவம் பெறுகின்றன. பொருளாதார பாதுகாப்பில் வர்த்தகம், கட்டணங்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும்.
தற்போது மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் அரசானது, கொள்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தியது. இயற்கை வளங்கள், உற்பத்தி வசதிகள் மற்றும் மனித வளங்கள் நிறைந்த தேசத்தைப் பற்றி பல நாடுகளில் உள்ள கவலைகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து விரைவாக பதிலளித்தது.
"சிவப்பு டிராகன்" (Red Dragon) எப்போதும் ஒரு மூடிய அமைப்பாக இருந்தது. அதன் உற்பத்தி முறைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பாதுகாப்புகள் ஆகியவற்றின் ஆய்வுகளைத் தவிர்ப்பதன் மூலம் இதற்கான நன்மையை இது கொண்டிருந்தது. நாடானது ஒரு சோசலிச மனநிலையையும் கொண்டிருந்தது. அங்கு மிகவும் அதிகளவிலான உற்பத்தி நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமானவை. தொழிலாளர் அமைதியின்மை, சமூக எழுச்சிகள் அல்லது பொது எதிர்ப்புகள் போன்ற பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட்டன. இது அதிக தொழில்துறை உற்பத்தியை உறுதி செய்யும் சூழலை உருவாக்கியது.
தற்போது நாம் பார்க்கும் உலகமானது, ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஒப்பந்த சேவையாக்கம் (outsourcing) அல்லது இறக்குமதிக்கு இந்த நாட்டை நம்பியிருக்கும் தற்போதைய நிலை ஒரு விநியோக மூலத்தை அதிகமாக நம்புவதற்கு வழிவகுக்கும் மற்றும் ஏற்றுமதியாளருக்கு அதன் கழுத்தை நெரிக்க அதிக வாய்ப்பை வழங்கும். எனவே, 2013-ம் ஆண்டில் ஒரு பல்வகைப்படுத்துவதற்கான உத்தி வகுக்கப்பட்டு 'சீனா பிளஸ் ஒன்' (China Plus One) என்று பெயரிடப்பட்டது.
விநியோகத் தொடர்பு மற்றும் உற்பத்திக்காக சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க C+1 நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. சீனாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் செலவுகள், அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்கள் மற்றும் கோவிட்-19 தொற்றின் போது விநியோகத் தொடர்பின் சீர்குலைவுகள் காரணமாக இந்த யோசனை தோன்றியது. இந்தியா "பிளஸ் ஒன்" இலக்காக தனித்து நிற்கத் தொடங்கியது. அதன் அரசியல் நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு, ஆங்கிலம் பேசும் மக்கள்தொகை மற்றும் மேம்பட்ட இணைப்பு ஆகியவை அதை ஈடுபாட்டான விருப்பமாக மாற்றியது.
இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் உற்பத்தியை ஒப்பந்த சேவையாக்கம் (outsourcing) அல்லது இடமாற்றம் செய்வதற்கான மாற்றத்தை தீவிரப்படுத்தியது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளுக்கு இந்தியா ஏற்கனவே விருப்பமான முக்கிய நட்பு நாடாக இருந்தது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ‘இந்தியாவில் தொடங்குவோம்’ (Make In India) திட்டத்தை தொடங்கினார். இதை, நம்பகமான ஒப்பந்த சேவைக்கான (outsourcing) இலக்கை உலகம் தேடிக்கொண்டிருப்பதால், இந்த முயற்சி சரியான நேரத்தில் வந்தது.
பெருநிறுவன வரிகளைக் குறைத்தல், உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டங்களைத் தொடங்குதல், விமான நிலையங்களை மேம்படுத்துதல், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பலவழி விரைவுச் சாலைகளில் முதலீடு செய்தல் போன்ற தொடர் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நாட்டை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகவும், பார்வையாளர்களை வரவேற்கக் கூடியதாகவும் மாற்றியுள்ளது.
முதலில், இது நன்றாக இருந்தது. இருப்பினும், நாம் கவனமாகப் பார்த்தால், அவற்றில் சில உண்மையாக இருப்பதற்கு மிகவும் நன்றாகத் தோன்றலாம். மற்ற நாடுகள் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டாலும், நாம் அதைச் செய்யவில்லை. சில துறைகளில், நம்மால் சார்ந்து இருப்பதை குறைக்க முடியவில்லை.
ஐக்கிய நாடுகளின் COMTRADE தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 2023-ம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் :
நமது நாடான (அப்னா தேஷ்), கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கிட்டத்தட்ட 122 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. இவற்றில் கனிமங்கள், உலோகங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட தாதுக்கள் ஆகியவை அடங்கும். அவை உள்நாட்டில் ஏராளமான வளங்களைக் கொண்டுள்ளன. இந்த வகைகள் இறக்குமதிகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
இதில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களாவது, இரும்பு மற்றும் எஃகு, துத்தநாகம், டின், நிக்கல், அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய 4.58 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மொத்தமாக செலவழித்தன.
பட்டியலில் கடைசியாக உள்ள தாமிரம் ஒரு முக்கியமான கனிமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் உயர் மட்ட கடத்துத்திறன் காரணமாக வீட்டு உபயோகப் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் அதன் வரலாற்றுப் பயன்பாடு நன்கு அறியப்பட்டதாகும். சமீபத்திய ஆண்டுகளில், மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் சோலார் பேனல்களில் முக்கிய உள்ளீட்டு பொருளாக தாமிரம் பசுமை ஆற்றலின் வினையூக்கியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இங்கே முரண்பாடு உள்ளது. 2018-ம் ஆண்டு வரை, இந்தியா நிகர தாமிர ஏற்றுமதியாளராக இருந்தது. இருப்பினும், அது திடீரென்று ஒரு இறக்குமதியாளராக மாறியது. இந்தியாவில் உள்ள சர்வதேச தாமிர சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மயூர் கர்மார்கர் இந்த மாற்றத்தை விளக்குகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தி ஹிந்து பிசினஸ் லைனுக்கு அளித்த பேட்டியில், உள்நாட்டு தாமிர உற்பத்தி வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய போராடுகிறது என்று கூறினார். அவர் மேலும் குறிப்பிடுவதாவது, "இந்தியாவின் உருக்கிக்கான உற்பத்தித்திறனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன. இது மே 2018-ம் ஆண்டு வரையில் நிகர ஏற்றுமதியாளராக இருந்ததில் இருந்து, சமீபத்திய ஆண்டுகளில் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு மாறுவதற்கு இட்டுச் சென்றுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்டது இந்த மாற்றத்தை கணிசமாக பாதித்தது.
ஸ்டெர்லைட் தாமிரம் மூடப்பட்டதற்கான காரணங்கள் குறித்து நிறைய கேள்விகள் எழுதப்பட்டும் வருகின்றன. தாமிர உற்பத்தியில் தேசத்தின் பிராந்திய மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய இந்திய எதிர்ப்பு சக்திகளின் வேலை இது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த சக்திகள் உருக்காலை மாசுபாடு பற்றி வதந்திகளை பரப்பினதா? பொதுமக்களை தவறாக வழிநடத்தி போராட்டங்களுக்கு நிதி அளித்தார்களா?
உண்மை ஒருபோதும் அறியப்படாவிட்டாலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதே களத்தில் உள்ள உண்மை. இந்த நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஸ்டெர்லைட் தாமிரத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் அல்லது கீழ்நிலை அலகுகளின் பணியாளர்களாக பணிபுரிகின்றனர்.
நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். புவிசார் அரசியல் மட்டத்தில், இந்தியாவின் தாமிரத்தின் கணிசமான பகுதியை விநியோகம் செய்த ஒரு யூனிட் நிறுத்தப்பட்டது. நமது சீனா பிளஸ் ஒன் உத்தியை, குறிப்பாக முக்கியமான கனிமங்கள் துறையில் பாதித்திருக்கிறதா?
பதில் ஆம் எனில், "பிளஸ் ஒன்" என்பதற்குப் பதிலாக, இப்போது "மைனஸ் ஒன்" இல் இருக்கிறோம்.
ஆர். சந்திர மௌலி ஒரு முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் நிலைத்தன்மை, பசுமை ஆற்றல், கனிமங்கள், உலோகங்கள் மற்றும் அரிய பூமிகள் பற்றி எழுதுகிறார்.