1. PM CARES நிதியானது 2022-23-ஆம் ஆண்டில் தன்னார்வப் பங்களிப்புகளாக 909.64 கோடி ரூபாயையும், வெளிநாட்டு பங்களிப்புகளாக 2.57 கோடி ரூபாயையும் பெற்றுள்ளது. இது பொது களத்தில் உள்ள தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து கிடைக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஆகும்.
2. மொத்தம் ரூ.912 கோடி நன்கொடைகள் தவிர, இந்த நிதி ரூ.170.38 கோடி வட்டி வருமானத்தையும் ஈட்டியுள்ளது. இதில் ரூ.154 கோடி வழக்கமான கணக்குகளிலிருந்தும், ரூ.16.07 கோடி வெளிநாட்டு பங்களிப்புக் கணக்கில் இருந்தும் வந்துள்ளது.
3. பல்வேறு ஆதாரங்களில் இருந்து சுமார் ரூ.225 கோடி பணத்தை திரும்பப் பெற்றது. இதில், மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 50,000 'இந்தியாவில் உருவாக்குவோம்' (Made in India) என்ற திட்டத்தில் வென்டிலேட்டர்கள் வாங்கியதில் இருந்து ரூ.202 கோடி திருப்பி அளிக்கப்பட்டது.
4. PM CARES நிதிக்கு 2019-20 ஆண்டு முதல் 2022-23 ஆண்டு வரை மொத்தம் ரூ.13,605 கோடி கிடைத்துள்ளது. இந்தத் தொகையில் தன்னார்வப் பங்களிப்பு ரூ.13,067 கோடியும், வெளிநாட்டு பங்களிப்பு ரூ.538 கோடியும் அடங்கும். இந்தக் காலக்கட்டத்தில், நிதிக்கான வட்டி வருமானமாக ரூ.565 கோடியையும் ஈட்டியுள்ளது.
5. PM CARES நிதியானது மார்ச் 27, 2020 அன்று புது தில்லியில் ஒரு பொது அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவு செய்யப்பட்டது.
6. PM CARES நிதியானது அவசரநிலைகள் அல்லது துயரச் சூழ்நிலைகளைக் கையாள்வதற்காக ஒரு பிரத்யேக நிதியைக் கொண்டிருப்பதன் முக்கிய குறிக்கோளுடன் நிறுவப்பட்டது. இதில் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற சூழ்நிலைகளும் அடங்கும்.
7. பிரதமர், PM CARES நிதியத்தின் அதிகாரபூர்வ தலைவர் ஆவார். பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இந்த நிதியத்தின் அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்களாக உள்ளனர். பிரதமர், இந்தக் குழுவின் தலைவராக, நீதிபதி கே டி தாமஸ் (ஓய்வு) மற்றும் கரியா முண்டா ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா? :
1. ஜனவரி 1948-ம் ஆண்டில், அப்போதைய பிரதமரின் முறையீட்டைத் தொடர்ந்து, பண்டிட் ஜவஹர்லால் நேரு, பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களின் பங்களிப்புகளால் நிதியளிக்கப்பட்டது.
2. வெள்ளம், சூறாவளி மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) இப்போது முக்கியமாக அதன் வளங்களைப் பயன்படுத்துகிறது. பெரிய விபத்துகள் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது உதவுகிறது.
இதில் பிரதமரின் ஒப்புதலுடன் பணம் வழங்கப்படுகின்றன. பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படவில்லை. இந்த நிதியானது வருமான வரிச் சட்டத்தின் கீழ் அறக்கட்டளையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தேசிய காரணங்களுக்காக பிரதமர் அல்லது பல பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகிறது.