முக்கிய அம்சங்கள் :
காங்கிரஸின் தற்போதைய நிலையானது 1924-ஆம் ஆண்டைப் போன்று உள்ளதாகவும், மேலும் இந்த நிலை காங்கிரஸுக்கு 1924-ஆம் ஆண்டிலிருந்தது போன்ற மறுமலர்ச்சிக்கான தேவை உள்ளது காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும், கட்சியானது முக்கியமான மாற்றங்களைச் செய்து வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று கட்சித்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கட்சி தீவிர சுயபரிசோதனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா ?
1. மகாத்மா காந்தி பிப்ரவரி 1924-ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின், சுதந்திரப் போராட்டத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒற்றுமை இல்லாததால் அவர் அதிருப்தி அடைந்தார். இதை நிவர்த்தி செய்ய, அவர் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 8, 1924 வரை 21 நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இரு சமூகங்களுக்கிடையில் பிளவைக் குறைப்பதே அவரது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. மேலும், காங்கிரஸுக்குள் நிலவும் பரவலானப் பிரச்சினையையும் தீர்க்க விரும்பினார்.
2. கட்சித் தலைவராக காந்தி தலைமையில் நடைபெற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு இதுவாகும். காந்தி டிசம்பர் 1924-ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 1925-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். முந்தைய பம்பாய் மாநிலத்தில் நடந்த இந்த அமர்வில்தான் காந்தி அகிம்சை, வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் "சுயராஜ்யம் (சுயாட்சி)" பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார்.
3. ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், காந்தி தனது அகிம்சை பற்றிய யோசனையை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த இயக்கம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். ஏனென்றால், பிப்ரவரி 1922-ம் ஆண்டில் சௌரி சௌரா காவல் நிலைய சம்பவத்திற்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. இருப்பினும், அகிம்சையே சுதந்திரத்திற்கான ஒரு பயனுள்ள பாதையாக இருந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.
4. இந்து-முஸ்லிம் ஒற்றுமை மற்றும் தீண்டாமையை எதிர்த்துப் போராடுவது குறித்து பேசிய காந்தி, தீண்டாமை சுயராஜ்யத்திற்கு மற்றொரு தடையாக உள்ளது என்று எடுத்துரைத்தார். "இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதைப் போலவே சுயராஜ்யத்திற்கு தீண்டாமையை அகற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, காந்தி இதை இந்து பிரச்சினை என்று அழைத்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இந்துக்கள் சுயராஜ்ஜியத்தைக் கோர முடியாது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
5. சுயராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை, இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை லண்டனில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும், மாகாண அரசாங்கங்கள், சட்டமன்றங்கள் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானி இருக்க வேண்டும் என்றும் காந்தி பரிந்துரைத்தார்.
6. மக்கள் "சரியான சத்தியாக்கிரகிகளாக" மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். "சத்தியாகிரகம் என்றுமே தோல்வியடைவதில்லை என்றும், உண்மையை மெய்ப்பிப்பதற்கு ஒரே ஒரு சரியான சத்தியாகிரகி போதும் என்றும் நான் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
7. இந்த அமர்வில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு மற்றும் கிலாபத் இயக்கத் தலைவர்கள் முகமது அலி ஜவ்ஹர் மற்றும் சவுகத் அலி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
8. இந்த அமர்வு விவசாயிகளின் உணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இதன் விளைவாக கர்நாடகா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கிராமத் தொழில்கள் ஈர்க்கப்பட்டு காதி திட்டம் பரவியது. காங்கிரஸ் தலைமையிலான முன்னெடுப்புகளில் விவசாயிகளின் பங்கேற்பு அதிகளவில் இணைந்ததையும் இது மேற்கோள்காட்டியது.