‘தடுப்பு இல்லாக் கொள்கை’ என்றால் என்ன?

 முக்கிய அம்சங்கள்

 

1. தடுப்பு இல்லாக் கொள்கையை (no-detention policy) ரத்து செயததால், சுமார் 3,000 ஒன்றிய பள்ளிகளை பாதிக்கும். இதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகளும் (Sainik Schools), பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகளும் (Eklavya Model Residential Schools) அடங்கும்.

 

2. கல்வி உரிமைச் சட்டம், 2009, ஆனது 2019-ம் ஆண்டில் திருத்தப்பட்டு, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைத் தடுத்து வைப்பது குறித்து "சம்மந்தப்பட்ட அரசாங்கம்" முடிவெடுக்க அனுமதிக்கும் ஒரு பிரிவைச் சேர்த்தது. அதன் பின்னர், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே தடுப்பு இல்லாக் கொள்கையை ரத்து (no-detention policy) செய்துள்ளன. 

 

3. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கல்வி அமைச்சகம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2010 இல் திருத்தம் செய்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்களை தடுத்து வைப்பது தொடர்பான ஒரு பிரிவைச் சேர்க்கிறது. 

 

4. தற்போது சட்டத்தின் படி, 5 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு மாணவர் கல்வியாண்டின் இறுதியில் வழக்கமான தேர்வில் தேர்ச்சிக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்றால், இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத காலத்திற்குள் அவருக்கு மறுதேர்வு நடத்த வாய்ப்பு வழங்கப்படும் என்று விதிகள் கூறுகின்றன. இந்த மறு தேர்வுக்குப் பிறகும் மாணவர்கள் தேர்ச்சிக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்றால், அவர் / அவள் நிறுத்தி வைக்கப்படலாம். 

 

5. ஒரு மாணவர் அதே வகுப்பில் தடுத்து வைக்கப்பட்டால், "வகுப்பு ஆசிரியர் குழந்தைக்கும் குழந்தையின் பெற்றோருக்கும் தேவைப்பட்டால், வழிகாட்ட வேண்டும். மேலும், இதன் மதிப்பீட்டின் பல்வேறு நிலைகளில் கற்றல் இடைவெளிகளை அடையாளம் கண்ட பின்னர் சிறப்பு உள்ளீடுகளை வழங்க வேண்டும்". 

 

6. "பள்ளியின் தலைவர் பின்தங்கிய குழந்தைகளின் பட்டியலை பராமரிக்க வேண்டும் மற்றும் அத்தகைய குழந்தைகளுக்கு சிறப்பு உள்ளீடுகள் வழங்கப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கற்றலுக்கான இடைவெளிகள் தொடர்பாக அவர்களின் முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும்" என்றும் விதிகள் சேர்க்கின்றன. 

 

7. தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகியவை குழந்தையின் முழுமையான வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட "திறன் அடிப்படையிலான தேர்வுகளாக" இருக்கும். அவர்கள் மனப்பாடம் அல்லது செயல்முறை திறன்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆரம்பக் கல்வியை முடிக்கும் வரை எந்தக் குழந்தையையும் வெளியேற்ற முடியாது என்று விதிகள் கூறுகின்றன.

 

உங்களுக்கு தெரியுமா? : 

 

1. கல்வி உரிமைச் சட்டம்-2009 (Right to Education Act), பிரிவு 16-ன் கீழ், பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தடுத்து வைப்பதற்கான அனுமதி இல்லை என்று குறிப்பிடுகிறது. மாணவர்கள் படிப்பை இடைநிறுத்துவதை தடுக்க, தடுப்பு இல்லாக் கொள்கை (no-detention policy) கொண்டு வரப்பட்டது. குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு அடிப்படைக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல மாநிலங்கள் இந்த கொள்கையை அகற்ற வேண்டும் என்று கேள்வி விடுத்து வருகின்றன.

 

2. 2016-ம் ஆண்டில், மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (Central Advisory Board of Education) இந்தக் கொள்கையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. மாணவர்கள் தங்கள் படிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், இந்தக் கொள்கையை நீக்க மத்திய கல்வி ஆலோசனை வாரியம் முடிவு செய்தது.

 

3. பின்னர், சட்டம் 2019-ம் ஆண்டில் திருத்தப்பட்டது. 5 அல்லது 8 ஆம் வகுப்பு அல்லது இரண்டிலும் மாணவர்கள் மறுதேர்வில் தோல்வியுற்றால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு அளித்தது. இது தடுப்புக் கொள்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கியது.

 

4. தடுப்பு இல்லாக் கொள்கையை அகற்றுவதற்காக கல்வி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதா மக்களவையில் முன்வைக்கப்பட்டபோது, அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இது மிக முக்கியமான சட்டம், பெரும்பாலான மாநில அரசுகள் இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். இது தொடக்கக் கல்வியில் பொறுப்புணர்வைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறினார். பள்ளிகள் மதிய உணவுக்கான இடமாக மாறிவிட்டதாகவும், கல்வியும் கற்றலும் இல்லாமல் போனதாகவும் அவர் கூறினார்.

 

5. திருத்தத்திற்குப் பிறகு, அசாம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம், டெல்லி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பு இல்லாக் கொள்கையை (no-detention policy) ரத்து செய்துள்ளன. 


6. ஹரியானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

7. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், லடாக், லட்சத்தீவு, சண்டிகர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவை தடுப்பு இல்லாக் கொள்கையை (no-detention policy) தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. 

 

8. தடுப்பு இல்லாக் கொள்கையை (no-detention policy) ரத்து செய்ய ஒன்றிய அரசு ஏன் காத்திருக்கிறது என்று கேட்டபோது, ​​தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy) 2020-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்று ஒரு மூத்த அதிகாரி விளக்கினார். இதில், பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023-ம் ஆண்டில் வெளியிடப்படும் வரை காத்திருக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்த தாமதம் இந்த விஷயத்தில் இன்னும் முழுமையான பார்வையை எடுக்க அவர்களை அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Original article:

Share: