முக்கிய அம்சங்கள் :
1. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் கருத்துக்கணிப்புகள் இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக மதத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புத்தன்மை குறித்த பெரிய கேள்வியாக அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளன.
2. மே 22 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மேற்குவங்காள அரசு மற்றும் பிற மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். கல்கத்தா உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு முதல் மாநிலத்தால் வழங்கப்பட்ட அனைத்து 77 சமூகங்களுக்கு OBC சான்றிதழ் வழங்குதலை ரத்து செய்தது. இதற்கு, "மதம் மட்டுமே ஒரே அளவுகோலாகத் தெரிகிறது" என்று நீதிமன்றம் கூறியது.
3. மே 22 அன்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. மார்ச் 5 முதல் செப்டம்பர் 24, 2010 வரை மேற்குவங்காள அரசு இதேபோன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டது. அவர்களில் "42 வகுப்பினர்கள்" அடங்கும். அதில் 41 முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த வகுப்புகள் OBC-களாக வகைப்படுத்தப்பட்டன. இந்த வகைப்பாடு அரசியலமைப்பின் பிரிவு 16(4)ன் கீழ் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு அவர்களுக்கு உரிமை அளித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று, ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 108 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை (OBC) துணை வகைப்படுத்தியது. இதில் 66 ஏற்கனவே OBC-ல் இருப்பவர்களும், 42 புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களும் அடங்குவர். அவர்கள் 56 "ஓபிசி-ஏ (மேலும் பின்தங்கியவர்கள்)" மற்றும் 52 "ஓபிசி-பி (பின்தங்கியவர்கள்)" போன்ற வகைகளாகப் பிரிக்கப்பட்டனர்.
உங்களுக்குத் தெரியுமா?
1. இடஒதுக்கீடு சவால் செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில், உயர் நீதிமன்றம் (HC) இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (மண்டல் தீர்ப்பு) (Indra Sawhney vs Union of India) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரிதும் நம்பியுள்ளது.
2. 1992-ம் ஆண்டில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை (OBC) அடையாளம் கண்டு, மதத்தின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது. அனைத்து மாநிலங்களும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில ஓபிசி பட்டியலில் எந்த துணைப்பிரிவுகளில் குடிமக்கள் சேர்க்கப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்து பரிந்துரைக்கும் பொறுப்பை இந்த ஆணையம் கொண்டுள்ளது.
3. தற்போதைய வழக்கில், ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டும் குடிமக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் 77 வகுப்பினர்களை ஆணையம் அடையாளம் காட்டியது. அதன்பிறகு, அவர்களை இணைக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது.
4. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் பகிரங்கமாக (பிப்ரவரி 2010 இல்) அறிவித்த பின்னர், இந்த வகுப்புகளின் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை தீர்மானிக்க எந்தவொரு "புறநிலை அளவுகோல்களையும்" (objective criteria) பயன்படுத்தாமல், ஆணையத்தின் பரிந்துரை மிக விரைவாக வழங்கியதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
5. மேற்கு வங்காளத்தின் 2012 சட்டத்தின் சில பகுதிகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் குறிப்பிட்டுள்ளவை,
(i) மாநில அரசு OBC இடஒதுக்கீடுகளை OBC-A மற்றும் OBC-B வகைகளாக "மேலும் பிற்படுத்தப்பட்ட" மற்றும் "பிற்படுத்தப்பட்ட" வகுப்பினருக்குப் பிரிக்க அனுமதித்த விதி, மற்றும்
(ii) 2012-ம் ஆண்டு சட்டத்தின் அட்டவணையை மாற்றியமைத்து. மேலும், OBC-களை பட்டியலில் சேர்க்க மாநிலத்தை அனுமதித்த விதி ஆகியவை இதில் அடங்கும்.
5. துணை வகைப்பாடு என்பது வெவ்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அளவிலான இழப்புகளை நிவர்த்தி செய்வதாகும். இது ஆணையத்தால் சேகரிக்கப்பட்ட குறிப்பேடுகளை குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்று நீதிமன்றம் கூறியது.